எ கலப்பை 3.0 - புதிய வெளியீடுநான் பிளாக்கில் எழுத ஆரம்பித்த போது எனக்கு தமிழில் எழுத கை கொடுத்தது எ கலப்பை எனப்படும் தமிழ் எழுதி தான். எ கலப்பை மென்பொருளை தமிழ்மணத்தில் இடப்பட்டுள்ள ஒரு சுட்டியின் மூலம் தேர்ந்தெடுத்து தரவிறக்கம் செய்வது வழக்கம்.

அதன்பின் பரவலாய் தமிழை கணிப்பொறியில் பயன்படுத்த ஆரம்பித்த போது பயன்படுத்தப் படும் ஒவ்வொரு கணிப்பொறியிலும் முதலாவதாய் எ கலப்பை மென்பொருளை உள்ளீடு செய்வது தான் எனது முதல் வேலையாயிருக்கும். எ கலப்பை மென்பொருளை க்ளிக் செய்தவுடன் அதில் முகுந்த் எனும் பெயரும் ஆழமாய் பதிந்துவிட்டது எனலாம். பின்னொரு நாளில் நண்பர் முரளியின் அறிமுகத்தின் மூலம் முகுந்த் அவர்கள் பெங்களூரிலே இருக்கிறார், அறிமுகம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. முகுந்த் தற்சமயம் ஆஸ்திரேலியாவில் பணிபுரிகிறார்.

எ கலப்பை மென்பொருளானது வின்டோஸ் விஸ்டா, கூகிள் குரோம் ஆகியவற்றில் பயன்படுத்த முடியாததாகி இருந்தது. வளரும் தொழில்நுட்பத்திற்கேற்ப தன்னை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் எ கலப்பை இருந்தது. முகுந்த் அவர்கள் சேது, விஜய் குப்தா, அருணன், வெங்கடேஷ், குணசேகர் ஆகியோர்களின் பங்களிப்புடன் சேர்ந்து எ கலப்பை 3.0 வெளியிட்டிருக்கிறார்.

புதியதொரு பரிமாணத்தில் எ கலப்பை மென்பொருள் இணைய உலகில் நடைபோட்டு வருகிறது. ஏராளமான தரவிறக்கங்களைக் கொண்டு வருகிறது என முகுந்த் அவர்களின் மூலமும் கேள்வியுற்றேன். இப்புதிய வெளியீட்டில் தமிழ் 99, பொனடிக், டைப்ரைட்டர், பாமினி, இன்ஸ்கிரிப்ட் ஆகிய விசைப் பலகைகளை செயல்படுத்த முடியும்.எ கலப்பை உள்ளீடு செய்வது எப்படி?

1. தமிழா.காம் இணையப் பக்கத்திற்கு செல்லவும்.

2. இணையப் பக்கத்தில் Projects சொடுக்கி, பின் e Kalappai சொடுக்கவும்,

3. தரவிறக்க சுட்டியை சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.4. தரவிறக்கம் செய்யப்பட்ட ஃபோல்டரில் சென்று eKalappai-3.0-installer.exe யை செயல்படுத்தவும்.

5. காணப்படும் பெட்டியில் தேர்வு செய்து Install செய்யவும்.

6. உங்களுடைய Desktop ல் கீழ்க்கண்ட ஐகான் கிடைக்கலாம். ஐகானை செயல்படுத்தினால் விண்டோஸின் வலதுகீழ்ப் பக்கத்தில் உள்ள ட்ரேயில் எ கலப்பை ஐகான் கிடைக்கும்.

7. அதனில் சென்று மௌஸின் இடது பொத்தானை செலுத்தி Settings தெரிவு செய்து விருப்பப்பட்ட விசைப்பலகை வடிவங்களையும், அதனை தெரிவு செய்ய சுருக்கக் குறியீடுகளையும் தேர்வு செய்து கொள்ளலாம்.


இப்புதிய எ கலப்பை வெளியீட்டினைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலதிக விபரங்கள், கருத்துக்களுக்கும் mugunth@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம். உங்களின் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். அத்துடன் தமிழா.காம் தமிழ் தொடர்பான மென்பொருள்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஜாவா, டாட் நெட், பிஹெச்பி போன்றவற்றில் திறமை உள்ளவர்கள் தமிழா.காமின் திட்டங்களில் பங்கெடுத்துக் கொள்ளலாம்.

1 மறுமொழிகள்:

காட்டு பூச்சி Tue May 24, 11:30:00 AM  

மென்பொருளை தரவிறக்கம் செய்ய முன்பாக அறிய ஆவலில் ஒரு கேள்வி. இப்போது கூகிள் வலைப்பூத்தலத்திலேயே எம்மால் தமிழில் எண்ணங்களை நேரடியாக பதிவு செய்து கொள்ள முடிகிறது, வேறு எந்த மென்பொருட்களையும் பயன்படுத்தாமலேயே. அந்த வகையில் எ கலப்பை எனதே விதத்தில் சிறந்ததாக நீங்கள் கருதுகின்றீர்கள்?

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !