இரத்தத்தட்டு தானம் !


இரத்த தானம் பற்றி அனைவரும் கேள்விப் பட்டிருப்பீர்கள் என நினைக்கின்றேன். இரத்ததட்டு தானம் பற்றிக் கேள்விப் பட்டு இருக்குறீர்களா ?

இரத்தத் தட்டு என்பது இரத்தத்தின் ஒரு வகையான அணுத்துகளாகும். நமது இரத்தம் உறைந்து போதலில் இந்தத் தட்டுக்கள் பெரும்பங்காற்றுகின்றன. இந்த இரத்தத் தட்டு நமது உடலில் சீராக இருப்பது மிக அவசியமாகும். இவை அதிகரிக்கும் சமயத்தில் இரத்தக்கட்டு ஏற்படவும், குறைகின்ற சமயங்களில் இரத்தம் வழிதலும் ஏற்படுகின்றது. இரத்ததட்டானது 1.5 முதல் 3.0 மைக்ரோ மீட்டர் விட்டம் கொண்ட தட்டையான வடிவத்தைக் கொண்டதாக உள்ளது, மேலும் இரத்தச் சிவப்பணுக்களைப் போன்று அணுக்கரு அற்றவையாகவும் இது உள்ளது.

காயம் ஏற்படும் நேரங்களில் இரத்தமானது நமது உடலுக்குள் உறைந்தால், கட்டி போன்று ஆகி விட்டால் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது உண்டு. அதே நேரத்தில் இரத்த வழிதலானது விபத்துக் காயம், மகப்பேறு போன்ற தருணங்களில் அதிகமான இரத்த இழைப்பை சந்திக்க நேரிடுகிறது. இவ்வகையான இரத்ததட்டுக்களை குறைவாக உள்ளவர்களுக்கு அளிப்பதே இரத்தத்தட்டு தானமாகும்.


எனது நெருங்கிய உறவினர் ஒருவர் மதுரை மீனாட்சி மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தார். அவரைச் சந்திக்க சென்றிருந்த நேரத்தில் அவருக்கு இரத்தத் தட்டு குறைவாக இருக்கின்ற காரணத்தினால் நண்பர்கள் மூலமாக இரத்ததட்டு தானம் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனை அறிந்து நானும் இரத்தத்தட்டு தானம் கொடுக்க முன்வந்தேன். இரத்தத்தட்டானது நமது இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப் படுகிறது. இதனைப் பிரித்தெடுப்பதற்கென ஒரு இயந்திரம் மீனாட்சி மருத்துவமனையில் பிரத்தியோகமாக அமைக்கப்பட்டுள்ளது. சாதரண இரத்ததானமானது நமது உடலில் இருந்து 350 மி.லி அளவு எடுக்கப்படும், ஆனால் இவ்வகை இரத்தத்தட்டில் நமது உடலிலிருந்து எடுக்கப்படும் இரத்தம் இயந்திரத்தில் அனுப்பப்படுகிறது. இயந்திரம் தட்டை மட்டும் பிரித்தெடுத்து சேகரித்துக் கொள்கிறது. அதன்பின் இரத்தம் வேறொரு குழாயின் வழியாக நமது உடலுக்குள் செலுத்தப்படுகிறது.

இரத்தத்தட்டானது 24 மணிநேரத்தில் நமது உடலுக்குள் மறுபடியும் உற்பத்தியாகிக் கொள்கிறது. இதனால் நமது இரத்தத்தில் உள்ள தட்டுக்கள் குறைந்து போய்விடும் எனற பயமும் இல்லை. இச்செயல்முறை 1:30 மணிநேரம் முதல் 2:30 மணி நேரம் வரை செயல்படும். இதுவரை இவ்வகையான தானத்தை அறிந்திருக்கவில்லை. அவற்றை தாங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

1 மறுமொழிகள்:

epowerx,  Tue May 18, 03:25:00 PM  

Also this platelet donation is a vital piece in Lukemia (blood cancer) cure process. I did this about 16 years ago in Adyar Cancer Institute and after that i did "triples" in my cycle to my college in the opposite campus. Friends were then wondering whether i donated blood or actually receieved it. :-)

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !