பக்தி - பணம் சம்பாதிக்க மட்டும்நித்தியானந்தா வீடியோவை பரவச்செய்த சன் ஊடகம், அடுத்த படியாக கல்கி பகவான் ஆசிரமத்தில் நடைபெறுகின்ற கூத்துக்களையும் அரங்கேற்றியுள்ளது. நித்யானந்தா வீடியோவிற்கு ஏற்பட்ட வரவேற்பை அடுத்து கல்கி பகவானையும் அரங்கேற்றியிருக்கிறது. மிகப்பெரும் பலம் வாய்ந்த சன் மாதிரியான ஊடகங்கள் சமூகத்திற்கு தேவையான இத்தகு பணிகளை செய்தால் அவர்கள் மக்களிடம் சம்பாதிக்கும் பணத்திற்கு நன்றிக் கடனாய் அமையும்.

கல்கி பகவான் பற்றிய விளம்பரங்களை பிரபல வார இதழ்கள் தவறாமல் வெளியிடுகின்றன. அவற்றிலுள்ள விளம்பரங்களானது, எனக்கு தொழில் முன்னேற்றம் அடைந்தது, பணக்கஷ்டம் தீர்ந்தது, திருமணம் நடந்தது, நோய் குணமானது என அனுபவங்களாக வெளியிடப்படுகின்றன. கஷ்டம் இல்லாத மனிதனே இல்லை எனும் நிலையில் படிக்கின்ற வாசகர்கள் தங்களின் கஷ்டங்களை நீக்க இதை முயற்சி பண்ணுவோம் என முயன்று காசை செலவு செய்கின்றனர். காசை கொடுத்து தீட்சை பெறும் பக்தர்கள் லட்சம் பேர் இருந்தாலும், அதில் வழக்கமான முன்னேற்றத்தைக் கண்டவர்கள் அதே விளம்பரத்தில் தங்களின் மொபைல் எண்ணுடன் வர வாய்ப்புண்டு !

இது நல்ல பிஸினஸா தான் இருக்கு .. !

ஆக இன்றைய நிலையில்,

பக்தியைக் கொண்டு -

வியாபாரிகள், தொழிலதிபர்கள், பக்திமான்கள், கடவுளின் முகவர்கள், மனித தெய்வங்கள்,

பூஜை செய்யலாம்
அருளுரை வழங்கலாம்
ஆசி வழங்கலாம்
சொற்பொழிவு நடத்தலாம்
இதிகாசங்களை விளக்கலாம்
கடவுள்களின் வரலாறு பேசலாம்
புத்தகம் எழுதலாம்
தொடர் கட்டுரைகள் எழுதலாம்
தொலைக்காட்சி தொடர் தயாரிக்கலாம்


ஆனால் இவர்கள் யாருமே பக்தியை வாழ்க்கையினுள் உட்புகுத்து வாழ அனுமதிப்பதில்லை, ஆன்மிகங்களில் சொல்லியவற்றை பின்பற்ற முனைவதும் இல்லை என்னும் நிலையை நமக்குள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

4 மறுமொழிகள்:

சொல்லச் சொல்ல Tue Mar 30, 06:41:00 AM  

//ஆனால் இவர்கள் யாருமே பக்தியை வாழ்க்கையினுள் உட்புகுத்து வாழ அனுமதிப்பதில்லை,//
முற்றிலும் உண்மை

Nilavan Sun Apr 25, 07:48:00 AM  

வணக்கம் சொல்லச் சொல்ல..

தாங்களின் கருத்துரைக்கு நன்றி..

அன்புடன்,
நிலவன்.

Thiyagarajan Thu Aug 12, 10:24:00 AM  

முட்டாள் மக்கள் இருக்கும் வரை இந்த மாதிரி வேஷகாரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்... ஏமாற்றுவதற்கும் ஏமாறுவதற்கும் நிறைய பேர் இருக்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Nilavan Wed Sep 01, 09:51:00 PM  

மிகச் சரியாகச் சொன்னீர்கள் தியாகராஜன்.

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !