மும்பையை கைப்பற்றிய கதை !


இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன் மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிப்பதற்கு இந்திய தேசிய காங்கிரஸ் உறுதியுடன் இருந்தது. ஆனால் சுதந்திரம் வாங்கிய பின் நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் எனக் கருதிய நேருவும், பட்டேலும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிவதை எதிர்த்தனர். நாமெல்லாம் திராவிடர்கள், நமக்கென திராவிட நாடு வாங்கிக் கொள்வோம் என முழங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தெலுங்கு மக்களுக்கென தனி மாநிலம் தேவை என தொடர்ந்து 58 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த ஸ்ரீராமுல் போட்டி அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து மொழிவாரி மாநிலங்கள் அமைவது வலுப்பெற்றது. அவர் இறந்த நாளிலிருந்து தொடர்ந்து நான்கைந்து நாட்கள் பொதுமக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் பல்வேறு வகையிலான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதன் அடிப்படையில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும் என அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தெரிவித்தார்.

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினம் தான் தென்னிந்தியாவின் மிக்கப்பெரிய நிகழ்வாக இன்றும் கருதப்படுகிறது. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுவதென்பது தம் மொழியை வளர்ப்பதற்காகவும், தம் இனமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும், தம் எல்லைகளை வகுத்துக் கொள்வதற்காகவும் என்ற அடிப்படையிலேயே பிரிக்கப்பட்டது.

1956ல் மாநில மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஆந்திரா, கர்நாடகம், கேரள மாநிலங்கள் சென்னை ராஜதானியில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாநிலங்கள் அமைந்தன. ஆனால் அதே வேலையில் குஜராத்தையும், மாராட்டியத்தையும் இணைத்து பம்பாயை தலைமையாகக் கொண்டு இருமொழிகள் உள்ள மாநிலமாக உருவாக்க பரிந்துரை செய்தது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் வேண்டுமென்றால் விதர்பா பகுதியை ஒன்றிணைத்து மராத்தி மக்களுக்கான மாநிலமாக உருவாக்கிக் கொள்ளுங்கள் என இக்குழு பரிந்துரை செய்தது. நாங்கள் மட்டும் என்ன இளிச்சவாயர்களா என வரிந்து கட்டிய மராத்திமக்கள் சம்யுக்த மஹாராஷ்டிரா சமிதி கட்சியின் தலைவர் கேசவ்ராவ் ஜேதேயின் தலைமையில் 1956 நவம்பர் 1 ல் மாபெரும் கண்டனப் போராட்டத்தையும், ஊர்வலத்தையும் நடத்தினார். . மும்பையை உள்ளடக்கிய மாராட்டிய மாநிலம் கோரிய ஊர்வலத்தில் ஃபுளோரா ஃபவுண்டன் என்னும் இடத்தில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிகளுக்கு 105 பேர் பலியாயினர். இந்நிகழ்வுக்கு பொறுப்பேற்று பாம்பே மாநிலத்தின் முதல்வர் மொரார்ஜி தேசாய் பதவியைத் துறந்தார்.

சம்யுக்த மஹாராஷ்டிரா சமிதி 1960 தனது குறிக்கோளை அடைந்தது. 1960ம் ஆண்டு மே 1 ல் குஜராத்தை உள்ளடக்கிய பாம்பே மாநிலம் பிரிக்கப்பட்டு மராத்தி பேசும் மக்களுக்காக மராட்டிய மாநிலம் என உருவாக்கப்பட்டது.ஆக, கடுஞ்சினம் கொண்ட பால் தாக்கரே சச்சினைக் கடிந்து கொண்டதன் காரணம் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். பல்வேறு மக்களின் இடைவிடாத போராட்டதில் பெற்ற நகரை மிக எளிதில் மும்பை அனைத்து இந்தியர்களுக்கு சொந்தம் என தாரைவார்த்துக் கொடுக்கும் சச்சினை கடிந்து கொண்டதில் என்ன தவறு உள்ளது?. மராட்டிய மக்களின் மொழிக்கும், வளர்ச்சிக்கும், அம்மக்களின் வேலைவாய்ப்புக்கும், அடிப்படை உரிமைக்களையும் பாதிக்காத வகையில் செயல்படுகின்ற வகையில் அனைத்து இந்தியரும் மும்பையை சொந்தம் கொண்டாடுவதில் தவறுகளே அல்ல. கருத்துச் சொல்லும் பிரபலங்கள் இதுபோன்ற கருத்துக்களையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். எல்லாவற்றையும் பொத்தாம் பொதுவாகச் சொன்னால் இப்படித்தான் ஆகும். இதை தாக்கரேயும் ஒத்துக் கொள்வார். இது முமபைக்கு மாத்திரமல்ல, பெங்களூர், சென்னை போன்ற பெருநகரங்களுக்கும் சேர்த்துத் தான்.

மும்பை மராட்டியத்துக்குச் சொந்தம். மராட்டியம் இந்திய அரசுக்குச் சொந்தம். சரி தானே ? உங்களோட கருத்தையும் சொல்லுங்க.. அப்டியே ஓட்டையும் போடுங்க..

2 மறுமொழிகள்:

Anonymous,  Tue Nov 17, 03:18:00 PM  

போடா வெண்..., இப்படி பேசி பேசியே நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டுடிங்க.

Nilavan Tue Nov 17, 04:31:00 PM  

பேசுவதால் பிரச்சனைகள் இல்லை.. பேசுவதில் வில்லங்கம் கற்பித்து விடுவதே இங்கே பிரச்சனை.

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !