மூன்று இலட்சத்திற்காக மூன்று கொலைகள்மாலை 5:45 : லோகேஷ் என்பவர் தனது உதவியாளர் இருவருடன், தாஸின் வீட்டிற்குச் சென்று அவரது பண்ணை தோட்டத்தை பராமரிக்க இருவரைக் கூட்டிக் கொண்டு வருகிறார். அச்சமயத்தில் தாஸ் வீட்டில் தனியாக, மது அருந்திக் கொண்டு இருக்கிறார். லோகேஷ் அழைத்து வந்த இரண்டு நபர்கள் சரியாக இருப்பார்களா என்பதை முடிவு செய்ய வெளியில் சென்றுள்ள மனைவிக்கு போன் செய்து வரச்சொல்கிறார்.லோகேஷ் மற்றும் நண்பர்கள் தாஸைத் தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, கைகளைக் கட்டி குளியலறைத் தொட்டியில் கிடத்துகிறார்கள்.பின் பீரோவிலுள்ள 110000 பணம், மற்றும் 2.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை எடுத்துக் கொள்கிறார்கள், கூடவே ராயல் ஸ்டாக் மதுவினையும் எடுத்துக் கொள்கிறார்கள்.மாலை 6:45 : பணம், நகை, இன்னபிறவைகளை மூட்டை கட்டி கிளம்பும் சமயத்தில் தாஸின் மனைவி வருவதை பார்க்கிறார்கள். ஆதலால் வீட்டில் மறைந்திருந்து அவர்களையும் தாக்கி கொலை செய்து, சிறுமி அக்னீசாவையும் கொலை செய்து குளியலறைத் தொட்டியில் போடுகிறார்கள்.இரவு 9:30 : மூன்று கொலை செய்துள்ளதால் மாலையில் வெளியில் சென்றால் தெரிந்து விடும் என்பதால் வீட்டில் காத்திருந்து, பணநகைகளை பகிர்ந்து கொண்டு, தொலைக்காட்சியைப் பார்த்து ரசித்துவிட்டு இரவு 9 30 மணிவாக்கில் கலைந்து செல்கிறார்கள்.


இச்சம்பவம் பெங்களூரில் நடந்தது. பல வருடங்களாகத் தனக்கு தெரிந்த நபர் தமது நண்பர்களுடன் சேர்ந்து வெறும் 3 இலட்ச மதிப்பிற்காக மூன்று நபர் திட்டமிட்டு மூன்று கொலைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். மதிப்பு வாய்ந்த மூன்று மனித உயிர்கள் அநியாயமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். இக்கொலையை நிகழ்த்தியவர்கள் குற்றப்பிண்ணனி கொண்டவர்கள் அல்லர், சந்தர்ப்பங்களை பயன்படுத்தி இவ்வாறு செய்யலாம் என அவர்கள் முடிவெடுத்து குற்றங்களைச் செய்திருக்கிறார்கள். இப்பதிவு நாமும் நமது சுற்றமும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்பதை உங்களுடன் பகிர்வதற்காகத் தான்.

1 மறுமொழிகள்:

கோவி.கண்ணன் Tue Nov 03, 11:04:00 AM  

//இக்கொலையை நிகழ்த்தியவர்கள் குற்றப்பிண்ணனி கொண்டவர்கள் அல்லர், சந்தர்ப்பங்களை பயன்படுத்தி இவ்வாறு செய்யலாம் என அவர்கள் முடிவெடுத்து குற்றங்களைச் செய்திருக்கிறார்கள்.//

பணத்தின் மீதான பேராசை தான் காரணம் இதற்கு பின்னனி அதுவாகவே அமைந்துவிடும்.

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !