நோபல் பரிசு : வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்

தமிழகத்திலுள்ள சிதம்பரத்தில் பிறந்து, பின் குஜாராத்தில் பள்ளிக்கல்வி, பரோடா பல்கலைக் கழகத்தில் கல்லூரியை ஆரம்பித்து, அமெரிக்காவிலுள்ள ஓஹியோ பல்கலைக கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று என வெவ்வேறு நிலைகளில் பயின்று இன்று வேதியியலுக்கான(Chemistry) நோபல் பரிசை பெறும் திரு வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களை வாழ்த்தும் அதே நேரத்தில், அவர் நம் மண்ணில் பிறந்தார் என்னும் பெருமிதமும் கொள்வோம்.


ரைபோசெம் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வுக்காக இவ்விருதினைப் பெறும் வெங்கட்ராமன் அவர்களுடன் தாமஸ் ஸ்டைட்ஸ், மற்றும் அடா யோனட்ஸ் ஆகியோருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.வெங்கட்ராமன் அவர்களின் தந்தை ராமகிருஷ்ணன், தாய் ராஜலட்சுமி இருவரும் பல்கலைப் பேராசிரியராய் பணிபுரிந்தவர்கள். வெங்கட்ராமன் தற்போது இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஸ் மருத்துவ ஆய்வுக் கழகத்தில் உயிரியலாளாராய் பணி புரிந்து வருகிறார். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

நோபல் பரிசினைப் பெற்ற மூன்றாவது தமிழராக வெங்கட்ராமன் திகழ்கிறார். இவருக்கு முன்னதாக சர்.சி.வி. ராமன் அவர்கள் 1930 இல் இயற்பியலுக்காகவும், சுப்பிரமணியன் சந்திரசேகர் 1988 ல் இயற்பியலுக்காவும் பெற்றனர்.

3 மறுமொழிகள்:

Nethaji,  Thu Oct 15, 03:39:00 PM  

http://idlyvadai.blogspot.com/2009/10/i-am-not-made-in-india.html

Nilavan Fri Oct 16, 08:24:00 AM  

// அண்ணாமலைப் பலக்லைக் கழகத்தில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி முடித்து,//

வணக்கம் நேதாஜி !

தவறான தகவல் திருத்தப்பட்டு விட்டது.

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !