அழைப்பிதழ் : உலகத் தமிழ் முன்னூக்கி


எம் இனிய தமிழ்மக்களுக்கு,

அன்பு வணக்கங்கள் !

உலகெங்கும் வாழும் தமிழர்களாகிய நாம் நிறுவன செயல்பாடுகள், செயல்முறைகள், வேலைவாய்ப்பு, புதிய தொழில்நுடபங்கள், வாய்ப்புக்கள், வணிகநுட்பங்கள், புதிய தொழில் முயற்சிகள், முதலீடுகள், மூலப்பொருள் தயாரிப்பு வெளியீடுகள், விளம்பர நிபுணர்கள், இணைய வடிவமைப்புக்கள், வலைப்பூக்கள், மேம்படுத்தல், மேலாண்மை விபரங்களைப் பகிர்வதற்கும், பகிர்தலில் நமக்குள் நாமே மேம்படுத்தி வளர்ச்சி அடைவதற்காகவும் இந்தக் குழுமம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான கேள்விகளும், சரியான பதில்களுமாய் உறுப்பினர்களின் தேவையையும், வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இளையோர்களின் வழிகாட்டியாகவும், புதிய சிந்தனைகளை உள்ளத்தில் உதிர்க்க வைக்கும் அரிய பொக்கிசமாகவும் இக்குழு விளங்கிட மிக ஆவல்.

மேல்குறிப்பிட்ட அரியதொரு குறிக்கோளுடன் உள்ளவற்றை தேவையற்ற விளம்பரங்களையும், அவசியமற்ற அரசியல் விவாதங்களையும் தவிர்த்து நம்மை நமக்கான பொருளாதாரங்களில் நம்மை உயர்த்திக் கொள்ள இக்குழுவினைப் பயன்படுத்துவோம் என நாம் அனைவரும் உறுதி கொள்வோம்.

இங்கே சொடுக்கி உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

http://groups.google.com/group/Global-Tamil-Startups

வேண்டுகோள் : இணைய தள ஊடகங்களிலும், தங்களின் வலைப்பூக்களிலும் இக்குழு பற்றிய விபரங்களைப் பரப்பவும்.

குறிப்பு: இக்குழுவின் மேலாணமைக்கான கருத்துக்கள், அறிவுரைகள் வரவேற்கப்படுகின்றன.


அன்புடன்,

உலகத் தமிழ் முன்னூக்கி
(Global Tamil Startups)

இத்தளத்தைப் பயன்படுத்தியதற்கு நன்றி..
மின்னஞ்சல் : Global-Tamil-Startups@googlegroups.com உரையாடல் : tamilstartups@gmail.com

1 மறுமொழிகள்:

Tamil astrology Wed Oct 14, 07:47:00 PM  

உங்கள் blog மிகவும் நன்றாக உள்ளது . உங்கள் தகவல்கள் பயனுள்ளதாக உள்ளது. தங்கள் சேவையை மேம்மேலும் தொடர வாழ்த்துக்கள்.. மிக்க நன்றி

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !