ஆடு நனையுதுன்னு ஓநாய் !


உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்திய நாட்டின் பெரும்பானமையான குடிமக்கள் மது வகைகளுக்கு அடிமையாகி வீணாய் பணத்தைச் செலவிட்டு, குடும்ப பிரச்ச்னைகளில் சிக்குண்டு, குடி போதையில் விபத்துக்களுக்கு உட்பட்டு உடல், உறுப்புகள், உயிரை இழந்து, குடியால் உறவுகள் சண்டையிட்டு பிரிந்து என நேரடியாகவோ, மறைமுகமாகவோ எண்ணற்ற கட்டிலடங்கா விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இத்தகைய கொடுமைகளை மக்களுக்கு விளைவித்து அதனால் வரும் பணம் எனக்குத் தேவையில்லை. தன்னுடைய மது சம்பந்தமான அனைத்துத் தொழில்களை மூடப்போவதாக அதீத அறிவு வந்து மதுபான சக்கரவர்த்தி விஜய் மல்லையா அறிவித்தால் எப்படி இருக்கும் ?!

அதற்கு ஈடான அறிக்கை ஒன்றை சமீபத்தில் அறிவித்திருந்தார். அதாவது மதுவிலக்கு அமளாகியுள்ள குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாரயத்தால் பலியாகிருந்த 100 பேர்களின் சாவிற்கு குஜராத் அரசு தான் காரணம். ஏனென்றால் குஜராத் அரசு தான் மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளது. மதுவிலக்கு அமலில் உள்ளதால் தான் கள்ளச்சாராயம் உட்கொண்டு 100 பேர் பலியாக நேர்ந்தது. ஆகையினால் குஜராத் அரசு மதுவிலக்கை விலக்க வேண்டும் என்று. என்னா பெரிய அக்கறை பாருங்கள். ஏழைகளான அந்த 100 பேருக்காக எத்தனை அக்கறைப்பட்டிருக்கிறார். ஆமாம் குஜராத் மதுவுக்கு வழிகொடுத்தால் தினமும் என பலநூறு கோடிகளை அல்லலாமே!? இருக்கிற அத்தனை மாநிலத்திலமிருந்து வருகின்ற வருமானம் ஒரு மாநிலத்தில் வராமல் இருந்தால் அக்கறை இருக்கும் தானே?! குஜரத்தில் 100 பேர் தான் இறந்தார்கள், ஆனால் மீதமிருக்கிற மாநிலங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அறிக்கையை தயார் செய்ய முடியுமா ?!

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !