சிலை உண்டு, நமக்குள் வள்ளுவன் வர வழியுண்டா ?


ஒரு சிலை ! பதினெட்டு ஆண்டுகளாய் பிரச்சனைகளால் திறக்கப்படாமல் பெங்களூரில் மூடப்பட்டிருக்கிறது. உலகப் பொதுமறை நூலொன்றை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி வாழ்க்கைக்கான நல்வழிகளை நம்முலகுக்கு உணர்த்தியவருக்கு பெங்களூரில் சிலை வைக்கப் போராட்டம். ஒரு சிலை வைப்பதால் ஏதோ அப்பகுதியையே கைப்பற்றியது போல் வரும் எதிர்ப்பாளார்களை என்னவென்று சொல்வது. சரி இத்தனைப் போராட்டங்களுக்குப் பிறகு விடிவுகாலம் வந்து எதியூரப்பாவின் எண்ணங்களினாலும், கருணாநிதியின் வேண்டுகோளினாலும் சிலை நிறுவப்படுகிறது என்றாலும் அதனைக் கட்டிக் காப்பது யார் ?! பெங்களூரில் ஏதெனும் பிரச்சனை ஆரம்பித்தது என்றால் முதலில் கை வைக்கப்படும் முதல் தமிழனாய் வள்ளுவர் இருப்பது சரியாய்த் தெரியவில்லை தானே ?

அவர்கள் கை வைத்தால் சென்னையில் வைக்கப்படும் சர்வக்னர் சிலை சும்மா இருக்குமா என்றாலும் இது தேவையற்ற வீணாண அதிர்வுகளை உண்டாக்கும். ஏற்கனவே தமிழகம் மாவட்டங்களில் ஏற்படும் சாதித் தலைவர்கள் சிலை உடைக்கப்படும் போது ஏற்படும் கலவரங்களை கலக்கமுடன் கண்டு வருகிறது. கன்னட இலக்கியம் இதுவரை ஏழு ஞானபீட விருதுகளை வாங்கியிருக்கிறது. அத்துனை சிறப்பு வாய்ந்த பெருமைகளை கன்னட மொழியும், இலக்கியமும் புலமை பெற்றதாய் உள்ளது. ஆனால் தனது சகோதர மொழியின் இலக்கியப் புலவரான வள்ளுவனை எதேதோ பிரச்சனைகளைச் சொல்லி எதிர்ப்பு காட்டும் எதிர்ப்பாளர்களை கன்னட இலக்கியம் விட்டு வைத்திருக்கின்றது. ”மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்” எனக்கூறிய வள்ளுவன் கூற்று இப்பிரச்சனைகளில் எவ்வாறு கூறியிருக்கிறார்.

வள்ளுவர் சிலை பெங்களூரில் இருப்பதால் என்ன பயன்? யாராவது ”ஹு இஸ் திஸ்” எனக் கேட்டால் “அவர் தமிழ் புலவர், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார், இரண்டு வரிகளில், ஏழு வார்த்தைகளில் திருக்குறள் எனும் நூலை 1330 குறள்களை எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளார். அவரது திருக்குறள் தமிழையும் தாண்டி எண்ணற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது எனும் விவரங்களைத் தாண்டி..


ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் - ஒழுக்கத்திற்கு
யாகாவாராயினும் நாகாக்க - நாவடக்கத்திற்கு
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு - அன்பிற்கு
பொய்யா விளக்கே விளக்கு - வாய்மைக்கு
கற்க கசடறக் கற்பவை - கல்விக்கு
முகநக நட்பது நட்பன்று - நட்புக்கு
பிறன்மனை நோக்கா பேராண்மை - வாழ்வியலுக்கு
புணர்தலின் ஊடல் இனிது - காமத்திற்கு

இவைதவிர

வீரத்திற்கு, மானத்திற்கு, ஈகைக்கு, நாட்டிற்கு, அறிவுக்கு, கேள்விக்கு, பெருமைக்கு, மானத்திற்கு, சூதிற்கு, கள்ளுண்ணாமைக்கு, உழவுக்கு, பழமைக்கு, குறிப்புக்கு, நினைவுக்கு, பிரிவிற்கு, நாணத்திற்கு, துறவுக்கு, புகழுக்கு, பொறையுடமைக்கு, விருந்தோம்பலுக்கு, புணர்ச்சி விதும்பலுக்கு, புலவி நுணுக்கத்திற்கு


என எத்தனையோ கருத்துக்களை எழுதி வைத்ததன் பெருமையே அதனை நாம் வழிமொழிந்து நமது வாழ்வியலின் கொள்கைகளாய் கடைபிடித்து வருவது தானே ?! வள்ளுவனின் குறளையும், வள்ளுவரையையும் மனதிலேற்றி நமது வாழ்வியல் கொள்கைகள் வள்ளுவனின் குறளைப் பின்பற்றித்தான் என குரல் கொடுப்பது எப்போது ?!

3 மறுமொழிகள்:

தமயந்தி Wed Jul 29, 08:27:00 PM  

உண்மை தான் நிலவன்.. மொழி தாண்டியும் ஓங்கட்டும் வள்ளுவனின் தமிழ்..

நெல்லை கண்ணன் Fri Aug 14, 02:46:00 PM  

பண்டமாற்றில் சிலைகள் கொண்டார்
பார்க்க பார்க்க வேதனை அய்யா

நெல்லைக்கண்ணன்

முனைவர் கல்பனாசேக்கிழார் Mon Aug 17, 09:56:00 PM  

உண்மைதான் தமிழ் ....... வள்ளுவர் கூறிய வாழ்வியல் நெறிகள் எக்காலத்தும் .....தேவை ..இவர் சிலை வைக்க எத்தைனைப் போராட்டம்....பொறுத்திருந்து பார்க்கலாம்.......விளைவுகளை......

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !