பூமி வெப்பமடைகிறது !
- நிலவன்
சமீபத்தில் மும்பையில் அலைகள் நூறு வருடங்களில் இல்லாத அளவுக்கு உயர எழும்பியது. இதற்கு காரணமாக பூமி வெப்பமடைந்து கொண்டிருக்கிறது என காரணம் கூறப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் பூமி வெப்பமடைவதால் பனிப்பாறைகள் உடைந்து கடலின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டு “சுனாமி” போன்றவைகள் நிலப்பகுதிக்குள் நுழையும் அபாயம் உள்ளது. இம்மாதிரியான ஆளுயர் அலைகளும், சுனாமியைப் போன்றவையுமாக கடல்நீர் நிலப்பகுதிக்குள் பரவ ஆரம்பித்தால் நாம் நமது எல்லைகளை காலிசெய்து கொண்டே செல்ல வேண்டியது தான்.
அண்டைநாடான பாகிஸ்தானிடமிருந்து நமது நிலப்பரப்பை தற்காத்துக் கொள்ளவும், பாதுகாக்கவும் எத்தனையோ கோடிகள் பாதுகாப்புக்கு என ஒதுக்கப்படுகிறது. ஆனால் பூமி வெப்பத்தால் தீபகற்பமான இந்தியாவின் பல ஆயிரம் கிலோ மீட்டர் நிலப்பரப்புகள் கடலால் ஆக்கிரமிக்கப்பட்டால் அதன் இழப்பு எத்தனை கோடிகளாய் இருக்கும் என்று. சற்றே நினைத்துப் பார்த்தால் மிகப்பெரிய ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கொடுக்கத் தவறுவதில்லை.
இவ்வுலகைப் பற்றிய வரலாறுகளை ஏறக்குறைய 2000 ஆண்டுகள், 3000 ஆண்டுகள் என எண்ணற்ற வரலாறுகளைப் படித்திருக்கின்றோம். ஆனால் வாகனங்கள், கணிப்பொறி, தொழிற்சாலைகள், நவீனத்துவங்கள், ரோபோக்கள், விமானங்கள் என நாம் காண்டுபிடித்த அறிவியல் வளர்ச்சிகள் பயன்பாடு செய்யப்பட்ட நூறு வருடங்களுக்குள்ளாகவே அதனை தாறுமாறாய் உபயோகித்து அழிவுக்கு இட்டுச் செல்கிறோமோ எனத் தோன்றுகிறது. கணிப்பொறியின் பயன்பாட்டுக்குப் பின் எத்தனையோ துறைகள் மிகவேகமாய் தன் வளர்ச்சியினைக் கொண்டு செல்கிறது. கணிப்பொறி முறையாய் செயல்பாட்டுக்கு வந்து செயல்பட ஆரம்பித்து வெறும் 50 வருடங்களைச் சொல்லலாம். ஆனால் கணிப்பொறி மூலம் எண்ணற்ற துறைகள் கணிப்பொறியிடன் சமமாக முன்னேறியுள்ளன.
பூமி வெப்பமாவதை கண்டுகொள்ளாமல் விட்டால் இன்னும் 50 வருடங்களில் உலகம் அழிந்துவிடும் என விஞ்ஞானிகள் சொல்லி வருகிறார்கள். இதனை நாமும் கண்முன்னாக உணர முடிகிறது. உதாரணமாக பத்து வருடங்களுக்கு முன் பெங்களூரின் வெப்பநிலை கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது. இன்னும் பத்து ஆண்டுகளில் இதன் வெப்பநிலை எவ்வாறு இருக்கப்போகிறது? இதனைக் கட்டுப்படுத்த என்ன வழி ?! காரணம் என்ன?
இந்த பத்து ஆண்டுகளில் பெங்களூர்க்கான வளர்ச்சி எனக் கொண்டால் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது, கட்டிடங்களின் வளர்ச்சி அபரிதமாய் வளர்ந்திருக்கிறது. அக்கட்டிடங்களைக் கட்டுவதற்கு ஏனைய இயற்கை வளங்களான மரங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.
ஆக அழிவுக்கான காரணங்கள் வேகமாய் வளர்கின்றன, ஆனால் நம்மைக் காப்பவைகளான இயற்கை வளங்கள் குறைந்து வருகின்றன. மரங்களை வளர்க்க வேண்டும், காடுகளை அழிக்கக் கூடாது, பாலித்தீன் போன்றவைகளை பயன்படுத்தக் கூடாது, எரிபொருள்களை தேவையில்லாமல் செயல்படுத்தக் கூடாது என எத்தனையோவைகள் இருக்கின்றன. ஆனால் இவையனைத்தும் அனைவராலும் மீறப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. பூமி வெப்பத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு சில சமூக அமைப்புகள் தாங்களின் முயற்சிகளை செய்து வருகின்றன என்றாலும் பூமி வெப்பத்தை குறைப்பதற்கான ஆக்கப்பணிகளில் செயற்பட்டு விதிகளை செயல்படுத்தி நடைமுறைப்படுத்துவது தான் சரியானதாய் இருக்கும். இல்லையெனில் நாளைய சமுதாயம் நாம் சரியாக செயல்படவில்லை என்று நம்மைப் பழிக்கும்.
2 மறுமொழிகள்:
)):!
பதிவிற்கு நன்றி !
ஆனால் என்ன சொல்ல வருகிறீர்கள் எனத் தெரியவில்லை..
Post a Comment