ஈர்த்ததில்....மறுபடியும்

ஈர்த்ததில் என தலைப்பு வைத்ததே படித்ததில், பார்த்ததில் ஈர்த்தவற்றை எடுத்துப் இங்கே பதியலாம் எனற எண்ணத்தில் தான் என்றாலும் அவ்வப்போது நேரம் கிடைக்கையில் எனது எணணங்களையும் கருத்துக்களையும் பதிவிட்டுக் கொண்டு தான் வந்திருக்கிறேன். இருப்பினும் சொந்தமாக இடும் பதிவுகள் அதிகமாக இருக்க வேண்டும் என்பது தான் எனது எண்ணங்கள். இதில் அவ்வப்போது என்ன புதிதாய் பதிவு போட்டீர்களா என கேட்டு ஞாபகப்படுத்துவது தோழி தமயந்தி மட்டும் தான் என்றாலும் நானும் பதிவிட வேண்டும் என எண்ணம் மேலோங்குகிறது ஆனால் நேரம் ஓய்வாய் அமர்ந்து எழுதவேண்டியவற்றை எடுத்துக் கொடுக்க அனுமதிப்பதில்லை.

ஒவ்வொரு நிகழ்வுகளிலும் எனது கருத்தைப் பதிவிட ஆவல் இருந்தாலும் அதை செயல்படுத்த சில நேரங்கள் தேவைப்படுகிறது என்றாலும் சோம்பலும் ஒரு காரணமாய் வந்து தடுத்தாள்கிறது. எப்போது எழுதி வைத்த கவிதை ஒன்றை இன்னும் பதிவேற்றவில்லை, மேலும் பாதியிலேயே விடப்பட்ட கவிதையையும் இன்னும் முடிக்கவில்லை. பதிவுக்கென ஒரு அரை மணிநேரம் ஒதுக்கி எழுத முனைகிறேன்.

நாகர்கோயில் பயிலரங்கில் சந்தித்த முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் மிகவும் எளிமையாக இருந்தார். தமிழுக்கான பணிகளில் தன்னை சீரியதாய் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயல்படுகிறார். அத்துடன் தன்னைப் போல் தமிழுக்கு பணியாற்றிட ஏனையவர்கள் தயாராய் இல்லாமல் இருக்கின்ற வருத்தம் அவரிடம் நிறைய காணப்படுவதை காணமுடிகிறது. தனக்குத் தெரிந்த இணைய அறிவுகளை தமிழுக்கான பணிகளில் முடுக்கிட அவர் முனையும் காரியங்களை மிகுந்த பாராட்டத்தான் வேண்டும். தமிழுக்கான பணிக்கு பாராட்டு தேவையில்லை என்றாலும் அவர் தம் பணிகளைக் கண்டாவது மற்றவர்கள் தத்தம் வழியில் பணிகளை செய்திட வேண்டும் எனும் எண்ணங்களும் மேலோங்குகிறது.

அவர் தம் பணியினை மேலும் சிறக்கின்ற வகையில் தமிழ் இணையப் பயிலரங்கக் குழுவினை ஆரம்பித்துள்ளோம். பயிலரங்க நிகழ்வுகள் மேலும் சிறக்கத் தேவையான ஆவணங்களையும் அச்சுப் பிரதிகளையும் உருவாக்கும் முயற்சிகள் நடைமுறையில் உள்ளன. இக்குழுவில் இணைய விருப்பமுள்ளவர்கள் உங்களது ஆலோசனைகளையும், பணிகளையும் பங்கிட்டுக் கொள்ள இப்பதிவின் வாயிலாக வரவேற்கிறேன்.

கடந்த வார நிகழ்ந்த ஒரு சோகமான நிகழ்வாக மைக்கேல் ஜாக்சனின் மரணத்தைக் கூறலாம். இசை, நடனம் என ஒன்றால் உலக மக்களை தன் நடனத்தால் கட்டிப்போட்ட ஒரே மனிதன் மைக்கேல் ஜாக்சன். தனது வாழ்க்கையில் எத்தனையோ சர்ச்சைகளைக் கொண்டிருந்தாலும் அவர்தம் அரை ஆயுள் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியதில் ஆச்சரியமில்லை தான். அவரது ஆட்டத்தைக் கண்டே அலறி அழும் ரசிகர்கள் கூட்டத்தைக் கண்டிருக்கிறோம், ஆனால் அவரின் ம்ரணம் ?! இசையின் மரணமாய், நடனத்தின் மரணமாய்த் தான் அது இருந்தது.மூன்று, நான்கு நாட்களாக தினசரிகளில் குத்தாட்டம் போட்டு குதூகலம் அடைந்து கொண்டிருந்த குழுவினரின் நிழற்படங்கள் முதல்பக்கத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தன. அவற்றிற்கான காரணம் ஓரினச் சேர்க்கையாளர்களின் வாழ்வும் உரிமையும் நியாயமானதே என தில்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பளித்த மகிழ்ச்சியினால் தான் அது. கலாச்சாரமாய், பண்பாடாய் நாம் வாழ்ந்து வந்தோம் எனக் கூறி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிருக்க வேண்டிய பணியினை அந்நிகழ்வை எதிர்ப்பவர்கள் கையாள்கிறார்கள். உலகமயமாக்கலின் அடுத்த வழியாக உலகின் அடுத்தடுத்த மாற்றங்களை நாம் கையாண்டு செல்வதற்கான வழியாக இதைக் காண்கிறோம்.


சரி.. இப்போது அதிகாலை 1 மணி ஆகிறது, அடுத்த பகுதியில் மீண்டும் சந்திக்கிறேன்... நேரம் கிடைக்கையில்..

1 மறுமொழிகள்:

தமயந்தி Thu Jul 09, 05:04:00 PM  

உங்க பதிவிலிருந்த விடயங்கள் சுவாரஸ்யம் போகவும் ச்மூக உண்ர்வோடு கூடியிருந்தது.

தொடர்ந்து இயங்குகள்..

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !