நிலவனுடன் ஒரு பேட்டி...

தமயந்தியினால் மூன்று நான்கு முறை நினைவூட்டலுக்குப் பின்....

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
இரட்டையராய் பிறந்ததால் முறைப்படி ராமர் லட்சுமணன் என வைத்தனர். பள்ளியில் சேர்க்கையில் அண்ணன் எனது பெயரை விஜயலட்சுமணன் எனவும், அண்ணனுக்கு ராமமூர்த்தி எனவும் இட்டதாகச் சொன்னார்கள். எனது பெயருள்ளவர்கள் யாரையும் இதுவரை சந்தித்திராததொரு பெயர். வீட்டில் லட்சுமணன், அலுவலகத்தில் விஜய், தமிழுக்காக நிலவன் என பெயர் பிடிக்கும் தான்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
எதிர்பாரதவைகளை எதிர்நோக்கும் பொழுது மனம் அழுத்தமானதுண்டு.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்குப் பிடிக்கும், மற்றவர்களுக்கு அவ்வளவு அழகாய்த் தோன்றாது. பள்ளியில் மதிப்பெண்ணில் போட்டியிட்டு என்னை பின்னுக்கு இரண்டாவது இடத்தில் தள்ளியவர்களின் வெற்றியில் எனது கையெழுத்து ஒரு காரணம்.

4.பிடித்த மதிய உணவு என்ன?
வாழை இலையுடன் கமகம முழுச்சாப்பாடு

5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
கண்டிப்பா.. என்னைப் போல நெறைய பேரை பார்க்கிறேன். ஆனால் தொடர்ச்சியாய் என்னுடன் ஒத்துவருவதில்லை. ஆதலால் என்னை எனக்கு மட்டுமே நீண்டகால நண்பன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவி சென்று குளித்து 10 வருடங்களாகிறது. கடலில் குளித்து இரண்டு வருடங்களாகிறது. அருவி, கடலுக்கான நெருக்கம் மிக அதிகம். ஆதலினால் வாய்ப்பு வருகையில் விடுவதில்லை.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
பலவருடம் பழகினாலும் உண்மையான உணர்வுகளையும், உருவங்களையும் உணர முடிவதில்லை. முதலில் பார்த்ததும் எதையும் தீர்மானிக்க முடியாதது தான். இருப்பினும் பேசுபவரின் பாவனைகளையும், நடையையும் மட்டும் தான் கவனிப்பேன்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
1. வேகம். 2. விவேகம்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
சரிபாதி இன்னும் அமையவில்லை. ஆதால் இங்கே பதில் இல்லை.


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
அம்மா, அப்பாவுடன்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
கறுப்பு மஞ்சளுடன் மேல்சட்டை, அரைக்கால் சட்டை

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
கேட்பதில்லை..

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
ஊதா ஊதா.. ஊதாப்பூ..


14.பிடித்த மணம்?
மல்லிகை

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
அம்மா, தணிகைஅரசு, மேரி, யுவனேஷ்வரி, நிஷா, இலாவண்யா
தொடர்புக்கு, விடயமாக, கருத்து பரிமாற்றம், விசாரிப்பிற்கும்..

16.பிடித்த விளையாட்டு?
கபடி.. தற்போது கணிப்பொறி உலவுதல் மட்டும்..


17.கண்ணாடி அணிபவரா?
ஆம்.. கடந்த 10 ஆண்டுகளாய்.

18.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
கருத்தாழமிக்க.. பார்த்து முடித்தவுடன் நம்முள் மாற்றம் கொண்டுவரக்கூடிய தகுதியுடைய ..


19.கடைசியாகப் பார்த்த படம்?
ஒன் மேன் ஆர்மி ... ( தமிழ்படத்துகான சிட்டை கிடைக்காததால்)

20.பிடித்த பருவ காலம் எது?
பருவங்கள் அனைத்தையும் பழகிக் கொண்டிருக்கிறேன். பிடித்தது எது எனச் சொல்லத் தெரியவில்லை.

21.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்
புதிதாய் ஒன்றை கவனிக்கும் போது, அல்லது ஏற்கனவே இருப்பது புளித்துப் போய் மாற்றம் வேண்டும் என மனம் விரும்புகையில்.

22.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
மென்மையான இசை, அலறும் அனைத்தும். ( குழந்தை முதல் குக்கர் வரை)

23.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
இந்தியாவுக்குள் மும்பை வரை, உலகத்தில் அமெரிக்கா(டெட்ராய்ட், நியூயார்க்) வரை

24 உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
வலிகளை, வழுக்கல்களை அனுபவமாய் ஏற்றுக் கொண்டு நடைபோடுவது, கொஞ்சமாய் கவிதை, கொஞ்சமாய் எழுதுவது.

25.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
பிளவுபடுத்தும் சாதிகள் நம்மால் இன்னும் பிழைத்துக் கொண்டிருப்பதேன்?

26 உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
சில சமயங்களில் விடாமுயற்சிக்கு விடை கொடுப்பது.

27. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
ஊட்டி

28.எப்படி இருக்கணும்னு ஆசை?
புரட்சிகளை புகுத்தும் பொதுமனிதனாய்.. (அல்லது புரட்சியாளனாய்...)

29.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
எதுன்னு தெரியலை.. ‘அது’ வா இருக்குமோ.. ?!

30.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
ஆரம்பத்திற்கும் முடிவிற்கும் இடையே நடக்கும் அங்கலாய்ப்பில் வென்றவர் சிலர், தோற்பவர் பலர்.

31.இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்த‌க‌ம்?
பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்.

32..உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
அனைத்துமே.. இருப்பினும் தமயந்தியின் நக்கலும், நையாண்டியும். கவிதை, கதைகளில் காணப்படும் நளினமும், கற்பனைக் கவியும்.

2 மறுமொழிகள்:

தமயந்தி Wed Jun 10, 09:14:00 PM  

அப்பாடா லக்‌ஷ்மண் ஒரு வழியா பதில் சொல்லிட்டார்..

ரொம்ப தீர்க்கமா இருக்குதுங்க பதில்லாம்..

நம்மள் பாராட்டிப்புட்டீக.. ம்ம்ம்..ஒரு ஆடுக் கால் சூப் அனுப்பிக் கொடுங்கப்பா..

முனைவர் கல்பனாசேக்கிழார் Tue Jun 30, 09:25:00 PM  

பதில்கள் அனைத்தும் அருமை.

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !