பெங்களூரில் மனிதச் சங்கிலி போராட்டம் !இன மான தமிழ் உணர்வாளர்களே! , களமாடும் போராட்ட வீரர்களே !!,

வருகின்ற ஞாயிறு 07-06-2009 அன்று காலை 10 மணி அளவில் பெங்களூரில் மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நடை பெற உள்ளது.
தமிழ் ஈழம் அடைய , தமிழர் உயிர், உடமை காக்க இப் போராட்டம் நடை பெறுகிறது. பெங்களூர் கிழக்கு தொடர் வண்டி நிலையம்( East Railway station) அருகில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி கப்பன் சாலை வரை நீண்டு செல்கிறது.
செந்தமிழ் போராளி. சீமான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். மற்றும் கர்நாடகா, தமிழ் நாட்டு தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை அமைப்புகளும், பகுத்தறிவாளர்களும் கலந்து கொள்கிறார்கள்.

விடுதலை புலிகளை அழித்து போரை முடித்து விட்டதாகவும், தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களை கொன்று விட்டதாகவும், இனி தமிழ் ஈழ போராட்டம் என்பதே இல்லை எனவும் கூறி இலங்கை, இந்திய உளவு படைகளும் இராணுவமும் சேர்ந்து செய்யும் சதிகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் பொய் செய்திகளுக்கும் மத்தியில் இப்போராட்டம் நடைபெற உள்ளது.

ஆகவே, தமிழ் வீரர்களே! , திரண்டு வாரீர் !, அணி அணியாக வாரீர் !, ஆண்கள் , பெண்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், முதியவர்கள், சிறார்கள் அனைவரும் கலந்து கொண்டு " தமிழர்களின் இன மான உணர்வு, போராட்டம் , லட்சியம் சாக வில்லை" என்பதை நிரூபிக்க வாருங்கள். வெற்றியை நிரூபித்து இவ் உலகத்தில் வரலாறு படைப்போம் .

நன்றி
நிலவன்

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !