பிரபாகரன் தற்கொலை ?


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும் அவரது உடல் கொழும்பில் உள்ள பனகொடா ராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இலங்கை ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இத்தகவலை இலங்கை அரசும், பாதுகாப்புத்துறையும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால் இன்று மாலை இலங்கை அதிபர் ராஜபக்சே தொலைக்காட்சி மூலம் இத்தகவலைத் தெரிவிக்கக் கூடும் என கூறப்படுகிறது.


150 பேர் ஒட்டு மொத்தமாக தற்கொலை..

புலிகள் தலைவர்கள், பிரபாகரனுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் 150 பேர் 2 நாட்களுக்கு முன் ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொண்டதாகவும், அந்த உடல்களில் ஒன்று பிரபாகரனுடையதாக இருக்கலாம் என்றும் ராணுவம் கூறியுள்ளது.

பிரபாகரனின் உடல் என்று கருதப்படும் அந்த உடலை அடையாளம் காண்பதற்காக அது கொழும்புவுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், அங்கு டி.என்.ஏ சோதனை நடந்து வருவதாகவும் ராணுவம் கூறியுள்ளது.

இதற்கிடையே இலங்கை செய்தித்துறை அமைச்சர் அணுரா யபா சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி்க்கு அளித்த பேட்டியில்,

இந்தச் செய்தியை நாங்கள் இப்போது உறுதிப்படுத்த முடியாது. ஒரு உடல் சிக்கியுள்ளது. அந்த உடலை அடையாளம் காண வேண்டியுள்ளது. அதன் பின்னரே இதை உறுதிப்படுத்துவோம் என்றார்.

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி அதே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,

இரு தினங்களுக்கு விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவின் தலைவர் சூசை குடும்பத்தினர் ராணுவத்திடம் பிடிபட்டனர். அவர்கள் அளித்த தகவலின்படி 2 நாட்களுக்கு முன் 150 புலித் தலைவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்துள்ளது என்றார்.

பிரபாகரன் இறந்துவிட்டதாகவும் கொல்லப்பட்டதாகவும் இலங்கை அரசு பலமுறை புரளி கிளப்பிவிட்டுள்ளது. இதனால் இந்தச் செய்தியில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்று தெரியவில்லை.
-நன்றி தட்ஸ்தமிழ்.காம்

2 மறுமொழிகள்:

K.Manoj,  Wed May 20, 04:44:00 AM  

கடைசில பிரபாகரன் செத்துட்டான் .....போயி அடுத்த வேலைய பாருங்க....எழுதுறது பெரிய வேலையா....உருப்படியா நீ என்ன பண்ண....Copy n Paste பண்ண....பைசா பிரயோஜனம் இருக்கா... முதல்ல உன்ன பெத்தவங்க வச்ச பேர சொல்லு...நீயா ஒரு பேர வச்சுகிட்டு....அத நீயா சொல்லிட்டு திரியாத....தமிழனு சொல்லிட்டு அமெரிக்கன் கம்பெனில வேலை பாக்குற...சரி ...அமெரிக்கன் கம்பெனில சம்பாதிச்சு தமிழனுக்கு என்ன பண்ண...அதே Copy n Paste பண்ண....முதல்ல உன்ன மாதிரி ஆளுங்கள திருத்தனும்......Think Practical & Live Practical....

Anonymous,  Thu May 21, 03:56:00 AM  

cnn 14 மே 2009 ல் பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டதாக வெளியிட்டது. ஆனால் 18 தேதி அன்று தான் உறுதி செய்யப்பட்டுள்ளது

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !