ராஜபக்ஷேவின் அடுத்த திட்டம்...- ப.திருமாவேலன்

''இரண்டே நாட்களில் 3 ஆயிரம் தமிழர்களைக் கொன்றிருக்கிறீர்கள்?'' என்று தமிழ் எம்.பி. இலங்கை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறார். ''உறுப்பினர், சபையில் தவறான தகவலைத் தருகிறார். 3,000 பேர் இறந்ததை அவர் போய்ப் பார்த்தாரா?'' என்று அமைச்சர் கேட்கிறார். சிங்கள எம்.பி-க்கள் சிரிக் கிறார்கள்.

எழுகிறார் இன்னொரு தமிழ் எம்.பி, ''பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் மக்களைக் குறி பார்த்துக் கொல்கிறது சிங்கள ராணுவம்'' என்று பதறுகிறார். உடன் எழும் இன்னொரு அமைச்சர், ''பதுங்கு குழியில் இருக்கும் பிரபாகரன் உங்களுக்கு இதைச் சொன்னாரா?'' என்று கேட்டதும், சபையில் பலத்த கைத்தட்டல். தமிழர்களின் ரத்தத்தைக் குற்றாலச் சாரலாகக் குளித்து மகிழும் சிங்கள இனவாத அரசின் ஆளுமையில் சிக்கித் தவிக்கும் சொந்தங்களைக் காப்பாற்ற எதுவும் நடக்க வில்லை.

இந்த ஆண்டு விடியும்போது தொடங்கி, கடந்த வாரம் வரை மட்டும் 4 ஆயிரத்து 795 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். நடுக்காட்டில், நட்ட நடு ரோட்டில் காயத்துடன் பெரும் அலறலுடன் கிடக்கிறான் தமிழன். சத்துக்கேற்ப மூன்று அல்லது நான்கு நாட்கள் கத்திக்கொண்டே கிடக்கும் உயிர்ச்சடலங்களைக் காப்பாற்ற ஐ.நா-வும் இல்லை. செஞ்சிலுவையும் இல்லை. அவர்கள் கும்பிடும் கடவுளும் இல்லை.

முல்லைத்தீவு காட்டு மரங்களுக்குள் டென்ட் பரப்பி, கையிருப்பில் இருக்கும் அரிசியைக் காய்ச்சிக் குடித்த வாழ்க்கையாவது நிரந்தரமானதாக இருந்தால் பரவாயில்லை என்று நினைத்தார்கள் மக்கள். ஆனால், அவர்களைக் கடந்த 4, 5 தேதிகளில் ரசயான வெடிகுண்டுகளை வீசி சின்னாபின்னப்படுத்தியிருக்கிறார்கள். அன்று மட்டும் 2,000 பேர் இறக்க... வெளியில் ஓடிவந்தார்கள் மக்கள். சுமார் 60,000 பேர் வந்திருப்பதாகச் சொல்கிறார் அமைச்சர். மொத்தம் இருந்தது 3 லட்சம் பேர். வெளியில் வந்தவர்களில் வயதுக்கு வந்த பெண்கள் மட்டும் சுமார் 600 பேர் தனி யாகப் பிரிக்கப்பட்டு, அனுராதபுரம் பகுதிக்கு அழைத் துச் செல்லப்பட்டுள்ளனராம். இளைஞர்கள் ஆயிரம் பேர் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களது கதி என்ன என்பது அனைவருக்கும் தெரியும். சிங்களத்தில் தேசியத் தொழிலாக இப்போது மாறிவிட்ட கொலையும், கற்பழிப்பும்தான்!

''எங்களோட டென்ட்டை விட்டு மூன்று நாளுக்கு முன்னாடி இங்க வந்தோம். கட்டியிருந்த பாவாடை சட்டையோடு தண்ணிக்குள் நீந்தி வந்தேன். மாற்றுத் துணியில்லை. அங்கயே குண்டு சத்தம் இருந்ததால ரெண்டு நாளா பங்கருக்குள் இருந்தோம். அதனால சாப்பிடலை. இங்க வந்து மூணு நாளாச்சி. சாப்பிட எதுவும் தரல. குடிக்கத் தண்ணி இல்ல. சேறும் சகதியுமான துணியோடுதான் இங்கே இருக்கேன். எங்க அப்பா, அம்மா எங்க இருக்காங்கன்னு தெரியல!'' என்று ஒரு பெண் வாய்க்குள் முனகுகிறார். 40 வயது இருக்கும் அவருக்கு. 'எவ்வளவு தூரம் நடந்து வந்தீர்கள்?' என்று நிருபர் கேட்கிறார். இது அவரது காதுக்குக் கேட்கவில்லை. அடைத்துவிட்டது காது. கண்ணில் மேல் இமை எழும்ப நினைக்கிறது. முடியவில்லை. உதட்டுக்கு வெளியே நாக்கைக் கொண்டுவந்து ஈரப்படுத்த முயற்சிக்கிறார். நாவிலும் ஈரம் இல்லை. கையில், காலில் காயங்கள் இல்லை. ஆனாலும், அவரால் அசைய முடியவில்லை. இவரைப் போலத்தான் ஆயிரக்கணக்கான மக்கள் கொட்டடியில் கிடக்கிறார்கள்.

யார் சொன்னாலும் கேட்கும் நிலையில் இல்லை இலங்கை அரசாங்கம். ஐ.நா., அமெரிக்காவில் தொடங்கி... இந்தியா, சீனா தவிர, அனைத்து நாடுகளும் கடுங் கண்டனம் செலுத்திய பிறகும் ராஜபக்ஷே நிறுத்துவதாக இல்லை. ஜெயவர்த்தனா காலத்தைவிடக் கோரமான நிலை என்கிறார்கள் இலங்கைப் பத்திரிகையாளர் களே!

''எங்கள் நாடு ராணுவமயமாகிக்கொண்டு வருகிறது. ஜனநாயகம், குடியாட்சி நெறிமுறைகள் அனைத்தையும் நொறுக்கிவிட்டார் ராஜபக்ஷே. தமிழர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு, சிங்கள தேசமாக இலங்கையை அறிவிக்கத் திட்டமிடுகிறார். இதற்கு எதிராக இருக்கும் சிங்கள சக்திகளையும் நசுக்க ஆரம்பித்துவிட்டார். ஒரே ஒரு உதாரணம், யாரெல்லாம் அவரது ஆட்சி அமைக்க உதவினார்களோ, அவர்கள் அனைவரையும் ஒழித்துவிட்டார். மகிந்தா ஆட்சி அமைக்க ஜனதா விமுக்தி பெரமுனா உதவி செய்தது. அந்தக் கட்சியை இரண்டாக உடைத்தார். அவரை அரசியலுக்குக் கொண்டுவந்த சந்திரிகா குடியிருக்க அரசாங்க வீடுகூட இவர் தரவில்லை. தனது நண்பனான மங்கள சமரவீராவை நாட்டை விட்டு விரட்டினார். மகிந்தாவின் அரசாங்கத்தை உருவாக்க உழைத்த ஸ்ரீபதி சூரியாச்சியையே கைது செய்து விலங்கு போட்டார். பண்டாரநாயகா வம்சத்தினர் யாரும் அரசாங்கத்தில் இல்லாமல் பார்த்துக்கொண்டார். அதாவது உடனிருந்து உருவாக்கியவர்கள் யாரும் இல்லை.

இப்போது இருப்பதெல்லாம் அவரது தம்பிகள், குடும்பத்தினர் மட்டும்தான். யாரெல்லாம் இவருக்கு எதிராக இருந்தார்களோ அவர்கள்தான் இப்போது உடன் இருக்கிறார்கள். கோத்தபய ராஜபக்ஷே, சரத் ஃபொன்சேகா என இருவரும் அமெரிக்க பிரஜைகள். மகிந்தாவைச் சுற்றியிருக்கும் இன்னும் முக்கியமான நான்கு பேரும் வெளிநாட்டுப் பிரஜைகள். இவர்களை வைத்து சிங்கள பேரினவாத ஆட்சியை அமைப்பதுதான் மகிந்தாவின் திட்டம்'' என்று அங்குள்ள பத்திரிகையாளர்கள் சொல் கிறார்கள்.

'இலங்கை செய்யும் அனைத்துக் காரியங்களுக்கும் எங்களது ஆதரவுள்ளது' என்று சீனா அறிவித்திருப்பதற்கும், ஐ.நா-வில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, இலங்கைக்கு எதிரான நடவடிக்கையை அது தடுத்ததற்குமான பின்னணி இந்தியாவுக்கு எதிரானது. எதிர்காலத்தில் ஒரு பேரழிவை இந்தியாவுக்கும் சேர்த்து செய்ய ஆரம்பித்திருக்கிறார் மகிந்தா ராஜபக்ஷே. அதன் விளைவுகள் சில லட்சம் தமிழர்களை மட்டுமல்ல, பல கோடி இந்தியர்களையும் பாதிக்கும் நாள் நெருங்கிக்கொண்டு இருக்கிறது!

-நன்றி ’ஆனந்த விகடன்’

4 மறுமொழிகள்:

Anonymous,  Sat May 02, 05:04:00 PM  

அது சரி... இலங்கைக்கு பிச்சை போடும் நாடுகளில் ஒன்று பாகிஸ்தான். பாகிஸ்தான் கிட்ட பிச்சை எடுத்ததால பாகிஸ்தான் காரன் புத்தி தான் வரும் ராஜபக்சய்க்கு

s p babaraj Sun May 03, 10:32:00 AM  

ராஜபக்சே ! சே! இழுக்கு!

மனிதனைத் தின்னும் கழுகுகள் கூட
மனிதனேயப் பண்பின் இரக்கத்தைக் காட்டும்!
மனிதமே இல்லாத ராஜபக்சே அந்தப்
புனிதமண் ஏந்தும் இழுக்கு.

மதுரை பாபாராஜ்

Unknown Mon May 11, 11:45:00 AM  

1.
2. அகிம்சை வழியில் போரடுபவர்கள் மிதவாதிகள்.
மிதவாதம் தோற்கும் போது ஆயுதம் ஏந்தி போராடுபவர்கள் தீவிரவாதிகள்.
தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஒன்றாக குழப்பி கொள்கிறோம்
பிரபாகரன் தீவிரவாதி ஆனால் பயங்கிரவாதி அல்ல.
விடுதலை போராட்டம் இரண்டு வகை ஒன்று மிதவாதம் மற்றொன்று தீவிரவாதம்,
நம் நாடு காந்தியின் தலைமையில் மிதவாத பாதையில் சுதந்திரம் அடைந்தது.அதற்கு காரணம் மிதவாத போராட்டத்தை மதித்து ,நம்க்கு விடுதலை கொடுத்தார்கள் பிரிட்டிஷ் காரர்கள்.
ஆனால்,இலங்கையில் மிதவாதம் தோற்றுவிட்டது,அகிம்சை வழியில் போராடியவர்களை அடிக்கினார்கள்.அவர்களை கொன்றார்கள்.
இன படுகொலையில் ஈடுபட்டார்கள்.ஆனவே அங்கு மிதவாதம் தோற்று தீவிரவாதம் உருவானது.
இரண்டும் போராடும் முறை தான்.ஆனால் தீர்வு கிடைக்கும் என்று சொல்ல முடியாது.
தீர்வு ,ஆதிக்க சக்திகள் நம் போராட்டத்தின் நியாயத்தை புரிந்து கொண்டு தீர்வு வழங்கினால்,பிரச்சனை தீரும்
மிதவாத போராட்டமோ அல்லது தீவிரவாத போராட்டமோ இல்லாமல் போகும்.
ஆக்வே,பிரபாகரன் பயங்கிரவாதி அல்ல அவன் போராளி அல்லது தீவிரவாதி என்றூ சொல்லலாம்.
சுபாஷ்சந்திரபோஸ்ம் ஒரு ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராடிய தீவிரவாதி தான்.
ராஜிவ் காந்தியின் மரணம் எனக்கும் வேதனை அளித்தது.ஆனால் அந்த ஒரு கொலைக்காக ,ஈழத்தில் ஆயிரகணக்கான குழந்தைகள்,முதியவர்கள் ,பெண்கள் கொல்லபட வேண்டுமா.
ஈழதமிழ் மக்கள் அகதிகளாக காடுகளிலும் ,சமவெளிகளிலும் விலங்குகள் போல் எந்த வசதியும் இன்றி உண்ண உணவு இன்றி வாழ வேண்டுமா?
ஆயிரகணக்கான தமிழர்களை கொன்றால் தான் சோனியா குடும்பத்தின் கொலை வெறி அடங்குமா?
புலிகளை கொல்கிறேன் என்று சொல்லி இலங்கையில் சிங்கள இராணுவ இன படுகொலை செய்து கொண்டிருக்கிறது,
வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என்று உபதேசம் செய்வது மற்றவர்க்கு தானா?
ராஜிவ் காந்தி அனுப்பிய அமைதிபடை அங்கு சென்றதும் இலங்கை அரசின் கூலி படையானது.அவர்கள் எத்தனை ஆயிரம் தமிழ் பெண்களை கற்பழித்தார்கள்,எத்தனை ஆயிரம் ஆண்களை கொன்றார்கள்.
அப்போது அவர்கள் ஈழதமிழர்கள் எப்படி கொதித்திருப்பார்கள்.
சோனியாகாந்தியே நீ கணவரை இழந்ததற்காக இன்னும் எத்தனை ஆயிரம் தமிழ் பெண்களின் தாலியை அறுக்க போகிறாய்.இன்னும் எத்தனை ஆயிரம் குழந்தைகளிம் இரத்தம் குடிக்க போகிறாய்.
ஈழதமிழர்களின் உரிமை போராட்டத்தையும் அல்லவா அழித்து விட்டாய்.
புலிகள் ,தீவிரவாதிகள் அல்ல அவர்கள் போராளிகள்.அவர்களை ஒடுக்கிட முடியாது.
ஒரு பிரபாகரன் போனால் ,ஓராயிரம் பிரபாகரன் தோன்றுவார்கள்.
ஈழதமிழர்களுக்கு உரிமை பெற்று தருவார்கள்.
அவர்களின் சுதந்திர தாகத்தை அணைக்க முடியாது.
சோனியாகாந்தியும் அவர்களுது குடும்பமும் இந்திய அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும்.
இனி எல்லா மாநிலத்திலும் மாநிலகட்சிகளே வெல்ல வேண்டும்.
அப்போது தான் வரும் காலத்தில் மாநிலத்திற்கு சனநாயக முறையில் நாம் மாநில ச்யாட்சி பெற முடியும்.
நம்மிடம் இருப்பது வாக்கு.அதை தமிழர்களே சரியாக் பயன்படுத்துங்கள் .
காங்கிரஸை அணைத்து இடங்களிலும் தோற்கடியுங்கள்.
வெல்க ஈழம்.வாழ்க ஈழதமிழர்.
இந்தியாவில் சனநாயகம் என்ற போர்வையில் ,மன்னர் ஆட்சி நடக்கிறது.
நேரு குடும்பத்தில் பிற்ந்த ஒரு தகுதி போதும் இந்தியாவை ஆள்.
பிறகு நம்க்கு எதற்கு ஓட்டு உரிமை.
ராகுல் காந்தியின் பேச்சு கண்டிக்கதக்கது.
பழி வாங்கும் தனி மனிதனுக்கு வேண்டும் என்றால் ,சரியாக இருக்கலாம்.
ஆனால் ஆனால் ஒரு நாடாக சிந்திக்கும் போது,அது கூடாது.
ராஜிவ் மரணத்தை வைத்து ஈழதமிழரின் சுதந்திர போராட்டத்தை கொச்சைபடுத்த கூடாது.
இந்தியாவில் பல மொழிகள் உள்ளன.இங்கும் இந்தியை மட்டும் அர்சு மொழியாக முன் வைக்கப்பட்டு அணைத்து மாநிலங்களிலும் திணிக்கதான் செய்கிறார்கள்.
ஆனால் இந்த அளவுக்கு வன்முறை கிடையாது.
தமிழர்கள் இதை ஏற்க வில்லை.இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் இரு மொழி கொள்கை.ஆங்கிலம்,மற்றும் தாய் மொழி மட்டும் படிக்கலாம்,.
சரியாக புரிந்து கொள்ளவும் ,தாய் மொழி என்று சொன்னேன் தவிர தமிழ் என்று சொல்லவில்லை.
தெலுங்கை தாய் மொழியாக கொண்டவன் ,ஆங்கிலம் ,மற்றும் தெலுங்கு படித்தால் போதும்.தமிழ்நாட்டில் கூட தமிழை பிற மொழியினர் மீது திணிக்க வில்லை.
ஆனால்,இலங்கையில் இரண்டு மொழி தான் ,தமிழ்ர்க்கு அவர்கள் வாழும்பகுதியில் தமிழை பயன்படுத்தி கொள்வதில் என்ன நஷ்டம்.
ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்.ஒன்றும் புரியவில்லை.
மலேசியாவில்,சிங்கபூரில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.ஆனால் அங்கு எல்லாம் இப்படி இன படு கொலை நடப்பதில்லை.
மொழி பற்று இருக்கலாம் ஆனால் அது வெறியாக மாறகூடாது.அது நம் மனித தன்மையை இல்லாமல் ஆக்க கூடாது.ஆனால் ,சிங்களவர்கள் அதுவும் அனபை,கொல்லாமையை போதித்த பொள்த்தர்கள் இப்படி ஈழதமிழர்களை கொன்று இன படுகொலையில் ஈடுபடுவது வேதனை
Reply
3. வெங்கடேஷ்
Posted on May 9, 2009 at 3:17 am
ஆடு,மாடு,மற்ற விலங்குகள் ,செடி ,கொடி,நச்சு பாம்புகள் வாழலாம் ஒரு நாட்டில் ஆனால் அங்கு ஒரு குறிப்பிட்ட மனித இனம் சுதந்திரமாக வாழகூடாதா?
விலங்குகள் வாழ் ,காடுகளை அழிக்காமல் காத்து வருகிறது உலக நாடுகள்.
ஆனால் ,ஈழ தமிழன் வாழ் இடம் இல்லை.
இங்கு மட்டுமலல ,அது பாலஸ்தீனம் என்றாலும் உலகில் வேறு பகுதியாக இருந்தாலும் சிறுபாண்மை இனம் எனப்தற்காக அவர்களை அழிக்க நினைப்பது தவறு.
எல்லா மொழியின்ரும் எல்லா மதத்தினரும் கலந்து தத்தம் உரிமையுடன் சுதந்திரமாக் வாழும் போது தான் உலகமே அழகாக இருக்கும்.
Reply
4. வெங்கடேஷ்
Posted on May 9, 2009 at 3:20 am
காங்கிரஸ் இனி தமிழகத்தில் இருக்க கூடாது.தொண்டன் என்று யாரும் இருக்க கூடாது.காங்கிரஸ் தோற்கடிக்க பட வேண்டும்.
இன்று இலங்கையில் சொந்த நாட்டிலேயே அகதியாக திரிகிறான் ஈழ தமிழன்,.காரணம் சிங்கள பெரும்பாண்மை மக்கள் இலங்கை தங்களுக்கே சொந்த்ம் என்று எண்ணுவதால்.ஈழதமிழர்களை அங்கிருந்து விரட்டி அகதிகளாக்கி துரத்துகிறான்.
நாளை இதே நிலை நமக்கும் வரலாம்.இந்தியா,இந்தி பேசும் வட மாநிலங்களுக்கு மட்டும் தான் சொந்தம் என்று இங்கு ஆளும் வட மாநில அரசியல் வாதிகள் எண்ணூகிறார்கள்,
இலங்கையில் தமிழனுக்கு ஏற்பட்ட நிலை ,நாளை இந்தியாவில் உள்ள தமிழனுக்கும் நாளை ஏற்படலாம்.
நாம் அணைவரும் இந்தியர் என்றாலும்,நாம் வாழும் நிலபரப்பு நம்முடையது.நாம் தமிழர்கள் ஏதோ வட இந்தியர்களின் தயவில் அவர்கள் இடத்தில் வாழவில்லை.
இதை அவர்கள் உணர்ந்தால்,நாம் இந்தியராக ஒன்றாக வாழ்வதில் வருத்தம் இல்லை.
ஆனால்,சிங்களவர்கள் போல் எண்ணினால் ,.அது ஒற்றுமையை பாதிக்கும்.
ஈழ தமிழன் கேட்பது,அவன் வாழும் நிலபரப்பில் அவன் கலாச்சாரத்தை ,பண்பாட்டை,வாழ்க்கைமுறையை ,மொழியை பின்பற்றி வாழும் உரிமையை தான்.
அதை சிங்கள அரசு எப்படி மறுக்க முடியும்.
சிங்கள வன்முறையாளர்களுக்கு ஆதரவு தரும் சோனியாகாந்தி,தமிழகத்திற்கு வந்தால் எதிர்ப்போம்.காங்கிரஸை தோற்க்டிப்போம்.
தமிழன் மானம் காப்போம்.நாம் இந்தியர் என்றாலும்,தமிழர்.அதை வட இந்தியனுக்கு புரியவைப்போம்.
ஈழதமிழர்கள் சிங்கள இராணுவ தீவிரவாதிகளால் கொல்லபடுகிறார்கள் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தான் கூறுகிறேன்.

Unknown Mon May 11, 11:48:00 AM  

ஒரு இனத்தை அழிப்பதற்கு அந்த மக்களை கொல்லவேண்டியதில்லை.அவர்கள் மொழியை அழித்தால் போதும்.அந்த இனம் அழிந்துவிடும் . அதை நம் மத்திய அரசு செய்கிறது. இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று,தென்னாட்டு மக்களை ஏமாற்றி அவர்களை இந்தி படிக்க வேண்டும் என்று திணிக்கிறது. இன்று ,பெரும்பாலும்,தமிழகத்தின் பெரும் நகரங்களில்,பலரது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாக கூட தமிழை தேர்ந்தெடுப்பதில்லை. இப்படி வேற்று மொழி படிக்கும் அந்த குழந்தை பெரியவனாக மாறும் போது,எப்படி தன் தாய் மொழிக்காக குரல் கொடுபான். தமிழ்னே தமிழுக்கு எதிராக பேசுவான்,அவனிடம் தாய் மொழிபற்று இருக்காது. நாளடைவில்,அவன் தன் அடையாளத்தை இழந்து,பண்பாட்டை இழந்து நிற்பான். தொல்காபியர்,திருவள்ளவர்,பாரதியார் இவர்கள் எல்லாம் யார் என்று தமிழ்னே கேட்பான். இப்படியாக ,ஒரு இனம் சிறிது சிறிதாக அழிக்கபட்டு விடும். பிறகு வரும் நம் சந்ததினர் ,தாங்கள் தமிழர் அல்ல ,இந்தி பேசுபர்கள் என்று கூறிகொள்வர். நம் கண்னை நம் கையாலேயே குத்த‌வைத்து விடும் நம் மத்திய அரசாங்கம்.

. தான்,ஆனால் அவர்கள் வளர்ந்த விதம்,தாங்கள் நடுநிலையாக சிந்திப்பதாக நினைத்து கொண்டு தமிழுக்கே விரோதமாக பேசுகின்றனர். அவர்கள் அப்படி தான் சிந்திக்க முடியும். எந்த ஒரு உணர்வும் ,பற்றும் சிறு வயதில் இருந்து வருவது,கற்று தரப்படுவது. என் தங்கையை டில்லியில் வேலை செய்யும் நபருக்கு கட்டி கொடுத்தோ,அவளும் டில்லிக்கு போய்விட்டால். அவளுடைய தாய் மொழி பற்று மாறவில்லை.காரணம் சிறு வயதில் அவள் தமிழகத்தில் வளாந்தால்,தமிழை பாடமாக பயின்றாள். ஆனால்,அவளுக்கு குழந்தைகள் பிறந்தார்கள்.அவர்கள் அங்கேயே படித்தார்கள்.அவர்கள் இந்தியும்,ஆங்கிலமும் படித்தார்கள்.தமிழ் பேச மட்டும் தெரியும்,எழுத படிக்க தெரியாது. இப்போது வளர்ந்து விட்டார்கள்.நான் ஒரு முறை ,தாய் மொழி பற்று,ஈழ தமிழர் பிரச்சனையை பற்றி பேசினேன். அவன் ,தமிழ் பற்று ,ஈழதமிழர் பிரச்சனை பற்றி எனக்கென்ன கவலை. தமிழ் என்று சொல்லி கொண்டிருப்பது பைத்தியகாரதனம்..தமிழை வளர்க்க வேன்டும் என்று சொல்பவர்களை கொல்ல வேண்டும் என்றான். எனக்கு அதிர்ச்சியாக விட்டது,அவனும் ஒரு தமிழ் தாய்க்கு பிறந்தவன் தான்.ஆனால்,அவனிடம் தமிழ் மீது பற்றுதல் சிறிதும் இல்லை. அவன் மொழி பற்று மட்டும் அல்ல வாழ்க்கை முறை,உணவு பழக்கம் அணைத்தும் வட இந்தியர்கள் போல் தான் இருக்கும். அவனுடைய தந்தை ,தான் ரிட்டயர் ஆனது தமிழகத்திற்கு சென்றுவிடுவோம் என்று கூறினால்,அவன் ,நான் வரவில்லை என்று கூறுகிறான். காரணம் ,அவன் அல்ல.பெற்றோர்கள் எந்த ஊரில் இருந்தாலும் தங்கள் தாய் மொழியை,கலாச்சாரத்தை சொல்லி கொடுக்கவேண்டும். இவனை போல் வளர்ந்தவர்கள் தான் இந்த கம்யூனிட்டியில் ,அவர்கள் பிறப்பால் தமிழர்கள் என்றாலும் ,தமிழுக்கு எதிராக கருத்துகளை பதிகின்றனர். ஆனால்,சிங்கபூர்,மலேசியாவில் உள்ள தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழும் ,தமிழ் கலாச்சாரத்தையும் சிறுவயதில் இருந்து சொல்லி தருகின்றனர்.

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !