ஒற்றுமை வேண்டும் ..

சுவாமி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை சந்தித்த பின் இலங்கையில் நடக்கும், நடந்த கொடுமைகளைக் கண்டு "இலங்கைத் தமிழர்களுக்கு நீதியும் சமவுரிமையும் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி தனித் தமிழீழம் அமைப்பதுதான்" என ஜெயலலிதா உறுதி மேற்கொண்டுள்ளார். இத்திருப்புமுனையை ஏராளமான தமிழ் அமைப்புக்கள் வரவேற்றுள்ளன. இத்தருணத்தில் கருணாநிதியின் உண்ணாவிரதமும் மத்திய அரசின் மனங்களில் மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதில் மாற்றம் இல்லை.

ஆயினும் இவர் செய்வது நாடகம், அவர் செய்வது நாடகம் என அறிக்கைப் போரிடாமல் இலங்கைத் தமிழர்களின் தமிழீழக கனவை நனவாக்க இருபெரும் கட்சிகளும் முயற்சித்தால் தமிழினம் என்றுமே மறவாத நன்றியினை, பெருமையினை இவர்கள் பெறுவார்கள்..

அரசியல் தவிர்த்து ஒற்றுமையுடன் இவர்கள் பாடுபடுவார்களா ?

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !