கலைஞர் உண்ணாவிரதம் : வெற்றியா ? தோல்வியா ?

காலை முதல் உண்ணாவிரதமிருந்து மதியம் 12 30 மணிக்கே இலங்கையிடமிருந்து பலமான ஆயுதங்களை பிரயோகிக்காமல் போரைக் கையாள்கிறோம், மக்களை பாதுகாக்க வழிசெய்கிறோம் என கூற வைத்த கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம். ஆனால் இதை ஒன்றை வைத்து இந்த வெற்றியை பிரச்சாரமாக பயன்படுத்திக் கொண்டு இலங்கையில் ஏற்படப்போகும் மேலும் பல இனப்படுகொலைகளை மறைக்காமல் இருந்தால் சரி. 

இவர்களிடம் இருக்கும் ஊடக பலத்தைக் கொண்டு இவர்கள் செய்யப்போகும் பிரச்சாரங்கள் மிகைப்படுத்தியதாய் இருக்கும். திருமாவளவனின் உண்ணாவிரதம், மாணவர்களின் உண்ணாவிரதம், வழக்கறிஞர்களின் உண்ணாவிரதம், பெண்களின் உண்ணாவிரதம் என எவற்றையும் தெளிவாக மக்களிடம் கொண்டு செல்லாத சூரிய ஊடகங்கள் கருணாநிதியின் இவ்வெற்றியை வெகுவாக கொண்டாடுவதோடு, மேலும் பல இனப்படுகொலைகள் இலங்கையில் ஏற்பட்டால் அவற்றை மறைக்கவே செய்யும். 

இனப்படுகொலைகளும் தொடர்ந்து நடக்கின்றன என அறிவித்தால் தற்போதைய வெற்றியை பிரச்சாரத்தில் மேற்கொள்ள முடியாதே ? ஆக கருணாநிதியை வரலாறு மன்னிக்க வேண்டுமெனில் தற்போது ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையைக் கொண்டு மேலும் கொலைகள் நடைபெறாமல் இருக்கவும், பேச்சு வார்த்தை மேற்கொண்டு இலங்கைக்கும், ஈழத்துக்கும் உடன்பாடு ஏற்பட்டு அங்கே அமைதி ஏற்பட வழிவகை செய்யலாம்.. 

இவற்றை மேற்கொண்டால் காலம் கடந்தாலும் வரலாறு கலைஞரை மன்னிக்கும், இல்லையெனில் இவை ஆரிய, வடநாட்டு அரசியல்வாதிகள் கூறுவது போல் “தேர்தலுக்கான நாடகம்” மட்டுமே என தமிழினம் உணரும், என்றும் தமிழினம் மன்னிக்காது. 

2 மறுமொழிகள்:

Hariharan,  Mon Apr 27, 07:42:00 PM  

Ipidi ellaam pannaalum naanga avaukku ottu poda maatom

Nilavan Tue Apr 28, 07:28:00 AM  

மகிழ்ச்சி.. தாங்களின் உறவுகளுக்கு, நண்பர்களுக்கும் உண்மையை தெரிவித்து பிரச்சாரம் செய்யுங்கள்..

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !