இலங்கைத் தமிழர்களை கருணாநிதி கைவிட்டது உண்மை, உண்மை, உண்மை - ராமதாஸ்


விரக்தியின் விளிம்பிற்கும், கோபத்தின் உச்சிக்கும் சென்றுவிட்டால், ஒருவர் எப்படியெல்லாம் பேசுவார், எழுதுவார் என்பதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதியின் கள்ளத் தோணி கருத்து சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

நாளைக்கே தோணிகளைத் தயார் செய்யட்டும்; அவை கள்ளத் தோணிகளாக இருந்தாலும் பரவாயில்லை; அவற்றில் படைகளை ஏற்றிச்செல்லட்டும், ராணுவ அணிவகுப்பு நடத்தட்டும்; யார் குறுக்கே நிற்கிறார்கள்; நாங்கள் கண்கொட்டாமல் அவற்றைப் பார்த்துக் களிக்கிறோம், கைதட்டி ஜெயகோஷம் போடுகிறோம் என்றெல்லாம் முதல்-அமைச்சர் கோபம் கொப்பளிக்க கூறியிருக்கிறார்.

முதல்-அமைச்சர் போன்ற பொறுப்பான பதவியில் உள்ள ஒருவர், கள்ளத் தோணியில் படையெடுத்துப் போங்கள், குறுக்கே நிற்கமாட்டோம் என்று சொல்லியிருப்பது எந்த அளவிற்கு அவர் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட அரசியல் சட்டத்திற்கு உட்பட்டது என்பதை சட்ட வல்லுநர்கள்தான் விளக்க வேண்டும்.

முதல்-அமைச்சரின் இத்தகைய தூண்டுதலை, யாரேனும் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றால், அப்போது முதல்-அமைச்சர் என்ன பதிலளிப்பார். முன்பு ஒரு முறை சொன்னதைப் போல, வெறும் நகைச்சுவைக்காகச் சொன்னது என்றும், வழக்கமாக என் எழுத்துகளைப் படிப்பவர்களுக்கு இப்படிச் சொல்லியிருப்பது புரியும் என்றும் சொல்லித் தப்பிவிட முடியாது.

இந்தியாவைப் போன்று இலங்கையும் ஓர் இறையாண்மை மிக்க நாடு. எனவே, ஓரளவுக்குத் தான் நாம் தலையிட முடியும், ஓரளவுக்குத்தான் அழுத்தம் கொடுக்க முடியும் என்று இதுவரையில் சொல்லாத ஒரு கருத்தை இப்போது திடீரென்று முதல்-அமைச்சர் சொல்லுகிறார்.

முதல்-அமைச்சரின் இந்தப் புதிய நிலைப்பாடு, இனப் படுகொலையிலிருந்து ஈழத்தமிழர்களைக் காக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டிலிருந்து நழுவிச் சென்றுவிட்டதற்கு ஒப்பானது என்று அடையாளம் காட்டியதுதான் முதல்-அமைச்சரின் ஆத்திரத்திற்கெல்லாம் காரணம்.

இலங்கையில் போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்குப் பயனுள்ள பேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ந் தேதி சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழிந்த போதும்;

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முழுமூச்சாக நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலையிலிருந்து எங்களையெல்லாம் காப்பாற்ற வேண்டும் என்று தனக்கு வந்த ஒரு கடிதத்தைப் படித்துவிட்டு, இதற்கு இந்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும், அப்படி ஒத்துழைக்கா விட்டால், இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல, இங்குள்ள தமிழர்களும் அடியோடு சாவோம் என்று 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந் தேதி மயிலை மாங்கொல்லை பொதுக் கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராகக் கனல் கக்கிய போதும்;

கண்ணீர் கடலில் மிதக்கும் இலங்கை தமிழர்கள் எங்களுக்கு அபயமளித்துக் காப்பாற்ற நாதியே கிடையாதா? என்று வாடி, வதங்கி இதற்கோர் விடிவு எப்போது ஏற்படும் என்று விழி கலங்கி, வழி பார்த்து நிற்கின்றனர்; போர் நிறுத்தப்பட்டு, ஈழத்தில் அமைதியும், சகவாழ்வும் திரும்புவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை இந்தியப் பேரரசு உடனடியாக எடுத்து, அதை நிறைவேற்றிட வேண்டும் என்று 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, தீர்மானம் நிறைவேற்றிய போதும்;

இந்தியப் பேரரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, இலங்கை அரசைப் போர் நிறுத்தத்திற்கு இணங்க வைத்து, தமிழர் பகுதிகளில் நிலையான அமைதியும், சகவாழ்வும் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் 2008-ம் ஆண்டு நவம்பர் 12-ந் தேதி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்திய போதும், இந்த வரிசையில் இறுதியாக 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ந் தேதி, `அய்யகோ, இலங்கையில் தமிழ் இனமே அழிகிறது; இந்தியப் பேரரசுக்கு இறுதி வேண்டுகோள்' என்று தீர்மானம் கொண்டு வந்து முழங்கிய போதும்;

வெளிநாட்டிலே வாழ்கின்ற, தமிழர்கள் உட்பட இந்தியர்களைப் பாதுகாக்க இந்தியாவின் பாதுகாப்புக் கரம் நீளும் என்றும், அந்த வலிமையினால் அவர்களுக்கு நீதிகிடைக்கும் என்றும், 1939-ம் ஆண்டு ஆசியாவின் ஜோதி, பண்டித நேரு, தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு அனுப்பிய செய்தியில் இடம்பெற்றிருந்த அழுத்தம் திருத்தமான, உறுதிமிக்க வாசகங்களைச் சட்டப்பேரவையில் நினைவுபடுத்திப் பேசிய போதும், இலங்கையில் மனிதநேயமற்ற, மா பாவிகளின் சேட்டையால், உலகை ஆண்ட ஓர் இனம் அழிந்து கொண்டிருக்கிறது; அங்குள்ள தமிழ் சாதியைக் காப்பாற்றுக என்று மத்திய அரசை நோக்கி சாடியபோதும். உலகில் எங்கு இனப்படுகொலை நடந்தாலும், அதனைத் தட்டிக் கேட்கும் உணர்வும், உரிமையும் கொண்ட பெரிய ஜனநாயக நாடாம் இந்தியாவின் கரங்களைப் பிடித்துக் கொண்டு இலங்கையில் சீரழியும், செத்துமடியும், எங்கள் தமிழ் சாதியைக் காப்பாற்றுக என்று கண்ணீர் மல்க கேட்கிறோம். மத்திய அரசைப் பார்த்து கேட்டுக் கேட்டு பயனற்றுப் போனதால், இறுதி வேண்டுகோளாக முறையிடுகிறோம். இன்றே போர் நிறுத்தம், அடுத்து அரசியல் தீர்வு, தொடர்ந்து அமைதி என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று தில்லியிலே உள்ளவர்களுடைய செவிகளில் விழ ஓங்கி ஒலித்து

தீர்மானத்தை முன்மொழிகிறேன் என கனல் கக்கிய போதும், அப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தது என்ன என்பது குறித்து, பொதுக்குழு, செயற்குழுவில் முடிவெடுத்துச் செயல்படுவோம் என மத்திய அரசை நோக்கி மிரட்டல் விடுத்த போதும், - இலங்கை ஒரு இறையாண்மை மிக்க நாடு என்றும், ஓரளவுக்குத்தான் இந்தியா அழுத்தம் கொடுக்க முடியும் என்றும் தெரியாமல் போனது எப்படி?

காங்.குக்காக தமிழர்களைக் கைவிட்டு விட்டார்...

தலையிடு, இல்லையேல் நாங்களும் செத்துமடிவோம் என்று அன்றைக்கு போர் முரசம் கொட்டியது உண்மையா? அல்லது இந்தியாவால் ஓரளவுக்குத்தான் தலையிட முடியும், ஓரளவுக்குத்தான் அழுத்தம் கொடுக்க முடியும் என்று இப்போது சமரசமாகப் போவது உண்மையா? சமரசமாகப் போவது என்ற நிலைப்பாட்டை கலைஞர்மேற்கொண்டிருப்பதுதான் உண்மை.

எஞ்சியிருக்கும் காங்கிரசும், கையைவிட்டுப் போய்விடக் கூடாது. அப்படிப் போவதால் அரசுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக இலங்கைத் தமிழர் பிரச்சினையில், சமரசமான நிலையை மேற்கொண்டு இலங்கைத் தமிழர்களைக் காக்க நடவடிக்கை எடுங்கள் இல்லையேல் அவர்களோடு சேர்ந்து நாங்களும் செத்து மடிவோம் என்ற உறுதிமிக்க நிலைப்பாட்டை கைவிட்டதும், அதன் மூலம் இலங்கைத் தமிழர்கள் நலனை கைகழுவிவிட்டதும் உண்மை, உண்மை, உண்மை என்று

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !