திமுக வின் வழக்கமான பிரச்சாரம்

அரசியல் பிழைப்புக்காகவும், தாங்களும் தலைவர்கள் என்பதை காட்டி கொள்வதாகவும் சில கட்சி தலைவர்கள் இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் அரசியல் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், நம்முடைய தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் இலங்கைத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதற்காக நல உரிமை பேரவை சார்பில் பேரணிகள் நடத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறிஞர் அண்ணா தலைமையில் 1956ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் இலங்கை தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். அதற்காக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை முன்மொழிந்தவரே நமது தலைவர் தான்.

இலங்கை தமிழர்களின் பிரச்சினையை மக்களிடம் எடுத்துச் செல்வதுடன் தொடர்ந்து நாம் நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்துவோம். சட்டமன்ற கூட்டத் தொடரில் இலங்கை தமிழர்களை காப்பாற்ற வேண்டுமென்பது பற்றிதான் அதிக நேரம் பேசப்பட்டது. இதில் அனைத்து கட்சிகளுக்கும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக பாடுபடும் தலைவர்களில் தமிழக முதல்வருக்கு தான் முதல் இடம். சட்டமன்றத்தில் இலங்கை தமிழர்களை காப்பாற்றக்கோரி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்ததையும் அவர்கள் ஞாபகத்தில் வைத்து கொள்ள வேண்டும் என்றார் ஸ்டாலின்.

// உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் //
இது ஒரு பெருமையா... எங்கேயாவது பணவிவகாரத்தில் கூடத்தான் வர்றார்..

//அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டுமென்றும்//
ஒன்றிணைந்து எடுத்த எம்.பி ராஜினாமைவை பதவிக்காக தனியாய் கிடப்பில் போட்டுவிட்டு
பேச்சில் மட்டும் ஒன்றிணைந்து..


//நல உரிமை பேரவை சார்பில் பேரணிகள் //
யாரை எதிர்த்து ? யாரை ஏமாற்ற ? மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை காப்பாற்ற,
ஊடக பலத்தின் மூலம் செய்ய ஒரு ராஜதந்திர வேலை, அவ்வளவு தான்.


// 1956ஆம் ஆண்டு நடைபெற்ற //
எத்தனை காலத்துக்கு பழையதையே பேசிட்டு இருப்பீங்க..

//மக்களிடம் எடுத்துச் செல்வதுடன்//
மக்களிடம் எடுத்து செல்வதற்குள் அங்கே மனிதர் இருக்கமாட்டார்கள்..

// தமிழக முதல்வருக்கு தான் முதல் இடம்..//
இயலாமையில், இயங்காமையில், செயலாமையில்

//தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்ததையும்//
அனுப்பியது முக்கியமில்லை, அவற்றுக்கான நடவடிக்கை என்ன கண்டீர்கள்.

1 மறுமொழிகள்:

Anonymous,  Wed Feb 11, 11:18:00 PM  

நெத்தியடி

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !