வசன வசியகர்த்தா கருணாநிதி

தான் சட்டசபைக்கு வந்து அருந்ததியருக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேறும் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமை குறித்து கலைஞர் கருணாநிதி

”நீதியரசர் ஜனார்த்தனம் இது குறித்த பரிந்துரைகளை அரசிடம் தாக்கல் செய்து, அந்தச் செய்தி ஏடுகளில் வெளிவந்த நேரத்தில்- இந்த அருந்ததியச் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 50 பேர் என்னைத் தலைமைச் செயலகத்தில் வந்து சந்தித்தார்கள். அப்போது அவர்களிடம் நான் பேசிக் கொண்டிருந்தபோது, எங்கள் சமுதாயத்திற்காக இவ்வளவு உறுதியாக இதுவரை யாரும் செயல்பட்டதில்லை. ஆனால் நீங்கள் இந்த அளவிற்கு எங்களுக்காக எடுத்துக் கொள்ளும் முயற்சிகளுக்காக நாங்கள் என்ன கைமாறு செய்யப் போகிறோமோ? எது எப்படியிருந்தாலும் இந்தப் பரிந்துரைகளையேற்று இட ஒதுக்கீடு செய்து அது சட்டமாக வர நாங்கள் உங்களோடு துணை இருப்போம் என்று தெரிவித்தார்கள்”

நீங்க எழுதுற, நடிக்கிற வசனம் துட்டு பாக்க பயன்படுதோ இல்லையோ ! நல்லா ஓட்டு வாங்க மட்டும் தேனொழுக பயன்படுத்துறீங்க.. கைம்மாறு வேற என்ன ? அருந்ததியரின் ஓட்டுக்கள் தான். அதுவும் சிந்தாமல் சிதறாமல் விழுவதற்கு இவ் உணர்ச்சி வசனங்கள் அருமையாக கை கொடுக்கும்.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !