இலங்கை பிரச்சனைகள் - ஒரு பார்வை

இலங்கையில் போர் என்னும் பெயரில் தமிழினத்தை குறிவைத்து அழித்துக் கொண்டிருக்கின்றன சிங்களப் பேரினவாதிகள். தங்களின் அரசின் வலிமையையும், மக்கள் பலத்தையும், அதிகாரத்தையையும் கொண்டு தன்னிச்சையாக முடிவெடுத்து சிறுபான்மையினரை தாக்கியும், காயப்படுத்தியும், கற்பழித்தும், கடத்தியும், கொலையும் செய்ய ஆரம்பித்து 56 வருடங்கள் தொடர்கிறது.
பூர்விக குடிகளாய் இருந்தவர்கள் அந்நிய நாட்டவரிடம் மொத்தமாய் அடிமைப்பட்டு 500 ஆண்டுகள் கிடந்தவர்கள் சொந்த நாட்டின் பிரச்சனையால் தனிநாடு கேட்கும் சமயத்தில் இறையாண்மையை காரணம் காட்டி இனவொழிப்பை நடத்துகின்றனர். அடிமைப்பட்டுக் கொண்டிருந்த 500 ஆண்டுகள் சிங்கள தேசியத்தின் இறையாண்மை எங்கே போயிற்று ? இலங்கையின் வரலாற்றையின், அரசின் வரலாற்றுத் தவறுகளையும் இங்கே அலசுவோம்..

நாட்டில் இரண்டு மொழிகள், கலாச்சாரம், பண்புகள் என இருக்கும் அழகான அந்த இலங்கைத் தீவில் சுயநல சர்வாதிகரிகளால் எத்துணை மரண அவலங்கள்? அனைவரும் நன்றாக இருக்கவேண்டும் என்ற எணணங்களில் அவர்கள் செயல்படுவார்கள் என்றால் பிரச்சனை நீர்த்துப் போகும், ஆனால் இவர்களின் இனவொழிப்பில் அரசியலும், அதிகாரமும், பணத்தாசையும் கொண்டிருப்பதால் எத்தனையோ உயிர்ச்சேதங்களைத் தாண்டி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.இவையனைத்திற்கும் என்ன காரணம்? எப்போதும் ஒரு சாரர் மற்றொருவரின் மேல் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று எண்ணம் கொண்டிருப்பதால் தான். வரலாறுகளை திரும்பிப் பார்க்கையில் போரின் இழப்புகளையும், அவலங்களையும் கண்டு அக்கால மனிதன் எவ்வளவு முட்டாள்தனமாய் மனிதங்களை மறந்து நாட்டின் மேல் ஆசைப்பட்டு பலரை பழிவாங்கியிருக்கிறான் எனத் தோன்றுகிறது. ஆனால் அவை போன்ற அவலம் இன்று தொடர்வது தான் மிகப்பெரிய வேதனை.

பிரிவினைகள்

இலங்கையில் நடக்கும் பிரச்சனைகளை பொதுவாக எல்லோருமே தத்தம் அறிவுகளிலிருந்து மட்டுமே நோக்குகிறார்கள். ஏறக்குறைய 2000 வருட ஆண்டுகளுக்கான வரலாற்றைப் பெற்றிருக்கும் நாம் இதில் வாழ்ந்த மக்கள் ’நாடு’ என எந்தவித எல்லையுமின்றி இடம்மாறி என வாழ்ந்து வந்திருக்கின்றனர். வாழ்வுகளின் ஏற்பட்ட வளர்ச்சியில் தற்போது தனித்தனியாக நாடுகள் உருவாகி தத்தம் நாடுகளை ஆட்சி செய்கின்றன. இதில் இன, மத பிரிவுகளின் அடிப்படையில் எத்தனையோ நாடுகள் பிரிந்து தமது வாழ்வுகளை மேற்கொண்டுள்ளன. பாகிஸ்தான் பிரிந்த பொழுது அது தனக்கான மதங்களை அடிப்படையாகக் கொண்டு பிரிந்தது. ஆனால் பங்களாதேஷ் ஏன் பிரிந்தது? ஒரே மதங்களுக்குள் ஏற்பட்ட பிரிவினைகளால் பிரிந்தது. ஆக பிரிவினைகளுக்கு மதம், இனம் மட்டுமே அடிப்படையல்ல. அதற்கு மேலே மனிதர்களின் வாழ்வியல் பிரச்சனைகள் சம்பந்தப்பட்டவையாகவும் இருக்கின்றன.

பல்வேறு இன, மத மக்கள் வாழும் ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட இனமக்கள் புறக்கணிக்கப்படும் பொழுது அல்லது ஒடுக்கப்படும் பொழுது எதிர்ப்பு உணர்வுகள் கிளம்பி பிரிவினைகள் ஆரம்பிக்கின்றன. தங்களுக்கென நாடுகள் இருக்கும் சமயங்களில் தமது இனத்தின் பெருமையாகவும் அவை வெளிப்படுகின்றன.

இலங்கை வரலாறு

இலங்கையின் வரலாற்றைப் பார்ப்போம். கிமு 6ஆம் நூற்றாண்டு அளவில் இந்தியாவிலுள்ள கலிங்க நாட்டிலிருந்து துரத்தி விடப்பட்ட அந்நாட்டு இளவரசன் விஜயன் என்பவன் தனது தோழர்கள் எழுநூறு பேருடன் இலங்கையில் வந்து இறங்கியதிலிருந்து ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. அதுதவிர இலங்கையில் ஏற்கனவே இயக்கர், நாகர் என்னும் இனத்தவர் வாழ்ந்ததாகவும், அரசமைத்து ஆண்டது பற்றியும் அவர்களின் மகாவம்சத்தில் காணப்படுகின்றன. பின் வெவ்வேறு காலகட்டங்களில் தமிழக மன்னர்களும் சிங்கள மன்னர்களும் ஆண்டு வந்திருக்கின்றனர்.

விக்கிப்பீடியாவிலிருந்து

A Portuguese colonial mission arrived on the island in 1505 headed by the Lourenço de Almeida the son of Francisco de Almeida. At that point the island consisted of three kingdoms, namely Kandy in the central hills, Kotte at the Western coast, and Yarlpanam (Anglicised Jaffna) in the north. The Dutch arrived in the 17th century. Although much of the island came under the domain of European powers, the interior, hilly region of the island remained independent, with its capital in Kandy. The British East India Company established control of the island in 1796, declaring it a crown colony in 1802, although the island would not be officially connected with British India. The fall of the kingdom of Kandy in 1815 unified the island under British rule.

15வது நூற்றாண்டு இலங்கை முழுவதும் போர்ச்சுகீசியர்களின் வசம் வந்தது. தமிழர் பகுதிகளையும், சிங்களர் பகுதிகளையும் தனியாக பிரித்தே வைத்து ஆண்டனர். அதன் பின் 17 ஆம் நூற்றாண்டில் இலங்கையை கைப்பற்றிய டச்சுக்காரர்களும் இருபகுதிகளையும் பிரித்தே ஆண்டனர். 18 ஆம் நூற்றாண்டில் இலங்கையைக் கைப்பற்றிய பிரித்தானிய அரசு நிர்வாக வசதி கருதி இருபகுதிகளையும் இணைத்து சிலோன் என்னும் பெயரில் ஆண்டனர். விடுதலை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு ஏனைய போராட்டங்களுடன் இந்தியா விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து இந்தியா விடுதலை பெற்ற ஆறு மாதங்களில் இலங்கைக்கும் சுதந்திரம் கிடைத்தது.

இலங்கையை சுதந்திரம் வழங்கிய பிரித்தானியா இலங்கையில் வாழும் பெரும்பான்மையினரான சிங்களவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்து குடிமக்களான தமிழர்களையும், சிங்களர்களையும் சமமான உரிமை, அதிகாரம், பகிர்வு என வழங்கிற்று. ஆனால் பெரும்பான்மையினமான சிங்கள இனம் தமிழர்களை அடக்கும், ஒடுக்கும், ஆதிக்கம் செலுத்தும் பொருட்டு தன்னிச்சையான முடிவுகளை எடுத்து நிறைவேற்றிற்று. ஆக 500 ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த இரு இனங்களில் சிங்கள் இனம் அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று மற்றொரு இனமான தமிழர் இனத்தை ஆள ஆசைப்பட்டது. ஆக தமிழர்களுக்கு சுதந்திரம், உரிமை கிடைக்கவில்லை.

அந்நியரிடமிருந்து போராடிய சிங்களர்கள் விடுதலைப் போராட்ட தியாகிகள் என்றால் தமிழர்களை சிங்களர்களிடமிருந்து காப்பாற்ற, உரிமை பெற, தம்மண்ணை மீட்க போரிடுபவர்களும் போராட்டத் தியாகிகள் தானே?
இதற்கு சற்றே யோசித்து பதில் சொல்லலாம் தானே?

விடுதலை பெற்ற பின் சிங்கள் அரசு செய்த தவறுகள் என்ன ?

1948 - 10 இலட்சம் தமிழர்களின் ஓட்டுரிமை பறிக்கபட்டது.
1949 - தமிழர்களின் பகுதிகளில் சிங்கள காலணியாதிக்கம் ஏற்படுத்தியது.
1956 - சிங்கள் மொழி ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.
1970-இனரீதியான நிபந்தனைகள். அதாவது கல்லூரிகளுக்கு தமிழர்கள் 30% அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
1972 - தன்னிச்சையான பெயர் மாற்றம் சிலோன் என்னும் பெயர் சிறீலங்கா என மாற்றப்பட்டது.
சிறீலங்கா குடியரசாக அறிவிக்கப்பட்டது.
புத்தமதம் அரசின் மதமாக அறிவிக்கப்பட்டது.
1977 - அரசின் உதவியுடன் நடத்தப்பட்ட தமிழர்க்கெதிரான கலவரங்கள்.

இவையனைத்திற்கு கி.பி 1948 முதல் 1976 வரை அறவழியில் சிங்கள அரசுக்கு எதிராக போராடப்பட்டது. அமைதியான வழியில் நடத்தப்பட்ட போராட்டங்கள் கொடுமையான முறையில் வலிமையான கரங்களைக் கொண்டு தாக்கப்பட்டது. போராட்டங்கள் கலவரத்தளங்களாக மாற்றப்பட்டது. ஏறக்குறைய முப்பது வருடங்கள் அமைதியான வழியில் போரிட்டாலும் அதிகாரம், பலம், பணம், ஆயுதங்களை வைத்திருந்த சிங்கள அரசு தமிழர்களை அடக்குவதிலும், ஒடுக்குவதிலும் மட்டுமே குறியாயிருந்த சிங்கள அரசை அவிழ்த்து விடவேண்டிய அத்தனை கட்டமைப்புகளையும் அவிழ்த்து விட்டிருந்தது. 1983 இல் நடைபெற்றா இனக்கலவரத்தில் மிகக் கொடுமையான முறையில் எரிக்கப்பட்டும், கொலைசெய்யப்பட்டும் பெரும் அவதிக்குள்ளாயினர்.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !