காதலில் காமம்...தொடர்ச்சி

நான் பதிவிட்ட ‘காதலில் காமம், கசந்த பின் ஏமாற்றம்’ க்கு தோழி ஒருவரிடமிருந்த வந்த கடிதத்தை இங்கே பதிவிடுகிறேன்.


ஆண்கள் மீது நம்பிக்கை வைப்பது தவறா ? அவர்களின் மீது ஆழமான அன்பு வைப்பது தவறா ? ஒரு பெண்ணின் உச்ச கட்ட நம்பிக்கை தான் அவள் வீட்டின் கவுரவும் மற்றும் அவளின் எதிர்காலம் அனைத்தைதும் காதலனின் விருப்பத்திற்காக இழக்கிறாள். ஆனால் ஆண்கள் சுயநலமியாகவும், நம்பிக்கை துரோகிகளாகவும், உறுதியான மனநிலை இல்லாதவர்களாகவும் இருப்பது இதற்குக் காரணம். ஆடை அழகாக, ஒழுக்கமாக இருந்தால் மட்டும் விட்டு விடுவார்களா என்ன ? - பெயர் வெளியிடாத ‘ஈர்த்ததில்’ வாசகி

ஆண், பெண் என வேறுபட்டு இருந்தாலும் பருவ வயதாலும், உணர்ச்சிகளாலும் உந்தப்பட்டு கொள்கிற செயல்முறைக்கு ஒழுக்கம் என்னும் பெயரில் ஆணாதிக்க துணை கொண்டு குற்றம் சாற்றிடல் நியாயம் இல்லை தானே? பாலின பாகுபாட்டைக் கொண்டு ஒருவன் மற்றொருவரை குற்றவாளி எனக் கூறுவது தான் கொடுமையிலும் கொடுமை. எதுவாயினும் இதில் நீக்கமற நிலைத்திருப்பது ஆணாதிக்கச் சிந்தனை மட்டுமே. காதலில் காமம் நெருக்கங்களையும் , அன்பையும், நம்பிக்கையையும் அதிகம் ஆழப்படுத்துகிறது. சில இடங்களில் சந்தேகங்களையும், வெறுப்புகளையும் ஏற்படுத்துகிறது.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !