புலிகளின் கண்ணியமும், விருந்தோம்பலும் - பகுதி (ஆ)

உடல் குளிருக்கு பழகியதும் எனது சுவாசம் சீராணது. என் உடல் முழுதும் சோப்பு போட்டுவிட்டு தண்ணீரை ஊற்றி கொள்ள எத்தனித்த போது வாளி இரண்டும் காலியாக இருப்பதை உணர்தேன். இப்பொழுது இரண்டு வழிகள்தான் உள்ளது, ஒன்று நானாக தண்ணீரை இறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது அந்த இளம் போரளிகளில் ஒருவரை நீரை இறைத்து தர சொல்ல வேண்டும். அப்படி ஒருவர் இறைத்து தரும் பட்சத்தில் நான் எங்கு மறைவது?

பிறகு நானே நீரை இறைத்துக் கொள்ள முடிவு செய்தேன். எனது சிறுவயதில் வாரப்பெட்டி (கேரளாவில்) பாட்டி வீட்டல் கிணற்றில் இருந்து நீர் இறைத்த அனுபவம் உள்ளது. கோடை விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு செல்லும் பொழுது, பணிப்பெண் மேரி கைதேர்ந்த வகையில் நீர் இறைப்பதற்கு கற்று தந்தாள். இப்பொழுது கிட்டதட்ட எனது கொள்ளு பாட்டியை போல் நீரை இறைத்துக் கொண்டுள்ளேன். நான் படித்து, வேலைக்கு சென்று, நகரத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து, தனியாக குடும்பத்தை பேனி, சரளமாக ஆங்கிலம் பேசி, பல நாட்டு அதிபர்களுடண் பழகி, வெளி நாடுகள் சென்று வந்திருந்தாலும் சில விசயங்கள் எப்பொழுதும் மாறுவது இல்லை.

நான்கு முறை shampoo-வினால் கேசத்தை கழுவி, பிசுபிசுப்பு தன்மையற்று வைக்கோலை போல் உலர்வாக உணர்த்தும் நான் குளிப்பதை நிறுத்தினேன். உடலை துவட்டிக் கொண்டு, டால்கம் பவுடரை உடலில் தூவியபின் புதிய உடைக்கு மாறினேன். இப்பொழுது நான் யானை பசியில் இருப்பதை உணர்தேன்.

எனது பொருட்களை எடுத்துக் கொண்டு அவ்விரு போராளிகளுக்கு எனது நன்றியை தெரிவித்து விட்டு, அவர்களின் உறைவிடம் நோக்கி நகர்தேன். சுற்றும் முற்றும் பார்த்தவாறு தூய்மையான காற்றை ஆழ்ந்து சுவாசித்தேன். இரவு நேரத்து வானம் லட்சோபலட்ச நட்சத்திரங்களாள் ஓளியுட்டப்பட்டிருந்தது. மங்கிய நிலவு ஒளி ரம்மியமாக காட்சியளித்தது. என்னை சுற்றிலும் செடிகொடிகளும் மரங்களும் கோட்டோவியமாய் தெரிந்தது. ஒரு பதினைந்து அடி தொலைவில் உள்ள மரத்தில் வெள்ளை நிறத்தில் ஏதோ ஒன்று ஊசலாடிக் கொண்டிருந்தது.

என்னோடு சற்று தொலைவில் வந்து கொண்டிருந்த புலி போராளிடம் "என்ன அது?" என்று வினாவினேன்.

'இரவுச் சாப்பாடு' என பதில் வந்தது.

அவர்களது பதில் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது, மீண்டும் தொங்கி கொண்டிருந்த பொருளைப் பார்த்துவிட்டு 'சாப்பாடு என எதை சொல்கின்றீர்கள்' என வினாவினேன்.

'தோலுரிக்கப்பட்ட மயில்தான் அங்கு இருப்பது. அரிசி சோறும், மயில் கறியுமே இன்றைய இரவு சாப்பாடு'.

மீண்டும் ஒரு முறை உற்றுபார்துவிட்டு, மரத்தில் தொங்குவது மயில்தான் என உணர்தேன். மரத்தில் தொங்குவது இறகுகள் நீக்கப்பட்ட மயில்தான். சற்று முன்னே பிடிக்கப்பட்ட மயில் பொங்குகள் நீக்கி சுத்தம் செய்யவதற்கு ஏதுவாக தாழ்வான மரக்கிழையில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. மயிலின் நீண்ட கழுத்தும், புடைத்துக் கொண்டிருக்கும் வயிறும், எழும்பும் தோலூமாக இருக்கும் அதன் கால்கள் ஆகியவற்றை கொண்டு தொங்குவது மயில்தான் என்பதனை உணர்தேன்.

ஒரு மணிநேரத்தில் அந்த மயில் எங்களது தட்டுகளில் இருந்தது, மயில் கறி பழுப்பு நிறத்தில் உண்ன கடிணமாக இருந்தது. ஒரு துண்டை வாயில்லிட்டு நெடு நேரம் மென்று கொண்டிருந்தேன். மெல்லவே கடிணமாக இருக்கும் இவை எளிதில் சீரணிக்க முடியாதவையாகவே இருக்கும். அதனால் அதனை ஒருபுறம் எடுத்து வைத்துவிட்டு சாதத்தை மட்டும் குழம்போடு சேர்த்து சாப்பிட்டேன். பட்டை தீட்டப்படாத அந்த அரிசி ருசியாக இருந்தது. புலிகள் சிறந்த போராளிகளாக இருக்கலாம் ஆனால, சமையலில் கொஞ்சம் மேசம்தான்.

உணவருந்தியபின் அனைவரும் உறங்க சென்றுவிட்டோம். நான் மரக்கட்டிலில் படுத்துக் கொண்டேன், கட்டிலில் நான் படுத்திப்பது என் பணியாட்கள் கீழே தூங்குவது போலவும் நான் இராணி போன்றும் ஓர் உணர்வை ஏற்படுத்தியது. நான் ஓர் அறையில் இருபது ஆண்மகன்களுடன் இருப்பது என் பெண்மைக்கான பாதுகாப்பற்ற தண்மையையோ அல்லது பயத்தையோ எற்படுத்தவில்லை. இந்த புலி போராளிகளுக்கு ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் கற்ப்பித்து அதை பேணிவருவதற்காக பிரபாகரண் என்உள்ளத்தில் ஓர் உயர்ந்து நின்றார். புது டெல்லியின் மனித கலவைக்குள்தான் தாக்குதல்களுக்கு ஆளாகியிருக்கின்றேன் மற்றும் சாலைகளில் பார்வையாலே துகில்லுரியப்பட்டருக்கின்றேன். ஆனால் இங்கு இவர்களிடம் காமம் கலந்த பார்வையோ, எண்ணமே அறவே இல்லை. என்னை ஒரு பெண்னாக கூட பார்காமல் அவர்கள் அறையில் உள்ள ஒரு பெருளைப் பார்பதது போன்ற ஒரு சராசரி பார்வையிலே பார்த்தனர்.

அன்று இரவு மிகவும் நன்றாக தூங்கினேன்.

1 மறுமொழிகள்:

Anonymous,  Sun Jan 25, 08:26:00 PM  

It seems my language skills need to be strengthened, because I totally can not read your information, but I think this is a good BLOG
jordan shoes

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !