புலிகளின் கண்ணியமும், விருந்தோம்பலும் - பகுதி (அ)

திருவாளர் சின்னகுட்டியின் வீடியோ பதிவைபார்தபிறகு ISLAND OF BLOOD புத்தகம் ஒன்றை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். அதில் புத்தக ஆசிரியர் 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், விடுதலைப்புலிகளின் தலைவர் பிராபகரன் அவர்களை பேட்டி எடுக்கும் பொருட்டு யாழ்பாணம் செல்லமுயல்கிறரர் ஆனால் அப்பொழு அங்கு அமைதிகாக்கும் (எதனை காத்தனர் என்று பிறகு பார்போம்.) பொருட்டு சென்ற இந்திய ராணுவம் இந்திய பத்திரிக்கையாளர்கள் யாழ்பாணம் செல்ல தடைவித்திருந்தது.

அதனால் அனிதா பிரதாப் வவுனியா சென்று அங்கிருந்து காட்டின்னூடாகவும், மக்கள் மற்றும் இந்திய இராணுவம் அதிகம் இல்லாத பகுதியூடாகவும் யாழ்பாணம் செல்ல வவுனியா நகரின் புலிகளின் கட்டளை தளபதி தினேஷ் யோசனை கூறி அதற்கு வழிவகையும் செய்தார்.

அனிதா பிரதாப் மற்றும் இந்தியா டுடேயின் புகைப்படகாரர் "ஷாம் டெக்வானி" இரண்டு புலிகளின் துணையோடு ஒரு மழை நாளில் வவுனியா காட்டினுடே தமது பணத்தை துவக்கினர். இவர் உழவுஇயந்திரம் (நம்ம ஊர் டிரக்டர்) முதல் மிதிவண்டி, கால் நடையாகவும் தமது பயணத்தை மேற்கொண்டனர். மயிர்யிழையில் உயிர் தப்பிய சம்பவம் உட்பட பல இன்னல்களை கடந்து, சேறும் சகதியும் அப்பியபடி தமது முதல் நாள் பயணத்தை நடு காட்டினில் நிறைவு செய்கிறார். இனி அவரது அனுபவத்தை அவரது சொல்லில் கேட்போம்.

பின் வரும் பகுதி அனிதா பிரதாப்பின் ISLAND OF BLOOD புத்தகத்தில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது.

========
அன்று விரைவில் இருள் கவிழ்ந்து விட்டது, கிட்டதட்ட ஏழு மணிவாக்கில் அடர்ந்த காட்டினூள் இருந்த விடுதலை புலிகளின் உறைவிடைத்தை அடைந்தோம். அங்கு கிட்டதட்ட ஐந்து அல்லது ஆறு புலிகள் இருந்திருப்பர். அந்த சிறு வீடு ஓரு முற்றமும், காய் கறிசெடிகளும், பழவகை மரங்களும் அடங்கிய சிறு தோட்டம் இருந்தது. பெறிதும் சிறிதும்மாக இரண்டு அறைகள் அந்த வீட்டில் இருந்தது. அந்த சிறிய அறையில் அரிசி குவியல், சிறிது வெங்காயம் மற்றும் சில உணவு பொருட்களும் இருந்தன. பெரிய அறையில் கரும் பலகையில் ஆன கட்டிலில் படுக்கையும், மடித்து வைக்கப்பட்ட சில பாய்களும், துணிகளை தொங்கவிடுவதற்காக அறையின் குறுக்காக கட்டப்பட்டு இருந்த கயிற்றில் இரு கட்டம் போட்ட சில லுங்கிகளும் தொங்கவிட பட்டிருந்தன. லாரி பேட்டரி மூலம் ஒற்றை டியூப் விளக்கு மங்கிய நிலையில் அந்த அறையை ஒளியூட்டிக் கொண்டிருந்தது.

'நீங்கள் படுக்கையை எடுத்து கொள்ளலாம், நாங்கள் தரையில் படுத்து கொள்கின்றோம்' என அந்த அணியின் தலைவர் கூறினார்! இது பெண்னாய் இருப்தனால் கிடைக்கும் சொவுகர்யம். 'நாங்கள் சமைக்க துவங்குகிறோம், சமையல் முடிய ஒரு மணிநேரம் ஆகும், உங்களுக்கு வேறு ஏதாவது வேண்டுமா?' என தமிழில் கேட்டார்!

'நான் குளிக்க வேண்டும், முதல் வேளையாக என் மேல் உள்ள இந்த சகதியை கழுவ்வேண்டும்' என்றேன்.

'நீங்கள் கிணற்றுக்கு போய் குளிக்கலாம்' என்றார் அவர்!

நடுகாட்டினில் குளியல் அறையை எதிர் பார்பது அர்தம்மற்றது. இருப்பினும் இரவில் திறந்த வெளியில் குளிப்பதற்கு எனக்கு தயக்கம் எதும் இல்லை. பாம்புகள் இருக்கலாம், இருப்பினும் வேறுவழி இல்லை. எனது துண்டு, சோப்பு சாம்பூ மற்றும் மாற்று துணியை எடுத்து கொண்டு கிணத்தடிக்கு சென்றேன். ஒரு புலி போராளி இரண்டு வாளி தண்ணீரை இறைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டார். மறைவுக்கு ஒரு தட்டி கூட இல்லாத நிலையில் எனக்கு குளிக்க தயக்கம் ஏற்பட்டது. விடுதலை புலிகள் காமத்தை தியாகம் செய்தவர்கள் என்பது எனக்கு தெரியும், இருப்பினும் எப்படி இருபது வாலிபர்களுக்கு முன் பிறந்த மேனியோடு குளிப்பது ? சேறும் சகதியும் அப்பிய நிலையில் ஆடைகளோடு குளித்தாலும் நான் சுத்தம்மாவது எப்படி?

நான் கோபம், தயக்கம் மற்றும் உதவிகளற்ற நிலையை அடைந்தேன். நான் குளிப்பதை பற்றி சிந்திப்பதைவிட புலி போராளிகளுக்கு கவலை படுவதற்கு பல்வேறு விசங்கள் உண்டு. வேறு வழியின்றி புலிகளின் அணித்தலைவனிடம் என்குழப்பத்தை தெரியபடுத்தினேன். பொருமையோடு கேட்ட அவர் ஒருகணம் யோசித்துவிட்டு இரு இளம் புலிகளை அழைத்து ஒரு எளிய யேசனையை தெரிவித்தார். ஒரு ஜமுக்காளம் துணியை திரைபோல் உயரபிடித்து கொண்டனர் அவ்விருவறும். இது புலிகளின் உறைவிடத்தில் இருப்பவர் பார்வையில் இருந்து என்னை பாதுகாத்தது.

நான் ஆடைகளை களைகையில் அந்த இரு இளம் புலிகளும் நான் இருக்கும் திசையை நோக்கி திரும்பாமல் இருக்கிறார்களா பார்த்தேன். எனக்கு நேர் எதிர் திசையில் பார்த்தவாரு ஒருவருக் கொருவர் ஐந்து அடி இடைவெளியில் நின்று ஜமுக்காளத் துணியை பிடித்து கொண்டு நான் இல்லாதை போல் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்ததை பார்த்து நான் தேவையில்லாமல் கவலையுருகிறேன் என்பதை உணர்தேன். பிறகே, ஆடைகள் முழுவதும் களைந்து தண்ணீரை என் மேல் ஊற்றினேன். நீரின் குளிர்தாங்காது நான் இட்ட கூச்சலில் இரு புலிகளும் அவர்களுக்குள் நகைத்துக்கொண்டணர், அதற்கு பிறகு கூச்சல் இடாமுடியாதபடி வாயை முடிக்கொண்டு சில குடுவை தண்ணீரை மேல் ஊற்றிய பிறகு என் உடல் தண்ணீரின் குளிருக்கு பழகிக்கொண்டது

1 மறுமொழிகள்:

Anonymous,  Sun Jan 25, 08:26:00 PM  

If you could give more detailed information on some, I think it is even more perfect, and I need to obtain more information!
runescape powerleveling

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !