முதல் பரிசு பெறுபவர்களுக்கு "தங்க"மான பரிசு

விஷூவல் மீடியா குழுமத்தால் நிர்வகிக்கப்படும் வணிகத் தகவல்களின் பெட்டகம் "தமிழ் வணிகம்" இணையத் தளம். வர்த்தகம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தங்கத் தமிழில் தடையில்லாமல் பரப்புவது எங்களின் முதன்மை நோக்கம். மென்பொருட்கள் உருவாக்கம், இணையத் தள வடிவமைப்பு, பயன்தரும் நட்புத் தளங்களைத் உலகளாவிய தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்வது என "தமிழ் வணிகத்தின்" பணிகள் பரந்து விரிந்துள்ளன. இதோ இப்போது, மற்றொரு புதிய முயற்சியாக இப்போது கட்டுரைப் போட்டியை அறிவிக்கிறது "தமிழ் வணிகம்' .

இன்றைய உலகத்தை அச்சுறுத்தி வருகிறது பொருளாதார மந்த நிலை. அன்றாடம், உலகின் பல நாடுகளில் மக்கள் தங்கள் வாழ்வதாரத்தின் ஆணிவேரான வேலையை இழந்து வருகின்றனர். வாழும் வழி தெரியாமல் சிலர் தங்கள் வாழ்க்கையையே மாய்த்துக் கொள்கின்றனர். இத்தகைய சூழலில், எந்தத் தொழில் செய்தால் ஜெயம் பெறலாம்? அதற்குரிய எளிய வழிகள் என்னென்ன? யாரை? எங்கு? எப்படி? அணுக வேண்டும். குறைந்த முதலீட்டில் நிறைந்த இலாபம் சம்பாதிப்பது எப்படி? இப்படி இயல்பாகப் நம்முள் எழும் கேள்விகள் ஏராளம். அவற்றுக்கான விடைகள் உங்கள் மனச் சுரங்கத்தில் மண்டிக்கிடக்கலாம். தொடர்ந்து யோசித்துக் கொண்டே இருப்பதை விட நாலு பேருக்கு வழி காட்டுவது கூடுதல் புண்ணியம். எனவே தயங்க வேண்டாம். சட்டென எழுதத் தொடங்குங்கள் போட்டிக் கட்டுரையை.

தமிழ் வணிகம்' கட்டுரைப் போட்டிக்கான அறிவிப்பைக்காண மேலே கொடுத்துள்ள படத்தினை சொடுக்குங்கள்


தமிழ் வணிகம்' கட்டுரைப் போட்டிக்கான விதிமுறைகள் :

அனைத்துக் கட்டுரைகளும் ஆசிரியர் குழுவின் அனுமதிக்குப் பிறகே தமிழ் வணிகம் இணையத் தளத்தில் வெளியிடப்படும்.
போட்டிக் கட்டுரைகளை சுருக்கவோ, திருத்தவோ ஆசிரியர் குழுவுக்கு முழு உரிமை உண்டு.
ஏ4 வடிவத் தாளில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
முதல் பக்கத்தில் பெயர், முகவரி இரண்டையும் footer பகுதியில் குறிப்பிடுங்கள்.
உங்கள் புகைப்படங்களை இணைத்து அனுப்புவதற்குத் தடையில்லை.
உங்கள் படைப்புக்களை எதிர்காலத்தில் புத்தகமாக வெளியிடும் உரிமை தமிழ் வணிகத்துக்கு உண்டு.
படைப்புகளை சொந்தமாக எழுதியது என்று உறுதிமொழி சான்றும் இணைத்து அனுப்ப வேண்டும்.
படைப்புகளில் கூறப்படும் கருத்துக்களுக்கு அந்தந்த படைப்பாளிகளே முழுப்பொறுப்பு.
அனுப்ப வேண்டிய முகவரி..மின்னஞ்சல் முகவரி... admin@4rthestate.com
பங்கேற்க அனுமதி இலவசம்..


போட்டிக்கான கடைசி தேதி : 15-01-2009

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !