அய்யப்பன் கதை

தந்தைபெரியாரின் ”இந்துமதப்பண்டிகைகள் பக்கம்” நூலிலிருந்து

அய்யப்பன் எப்படி பிறந்தார்? ஏன் பிறந்தார்? அய்யப்பன் கதையின் கரு என்ன?
என்பது பற்றி பார்ப்போம்.

பத்மாசூரன் என்கிற அசுரன், சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். சிவன்
அவன் முன் தோன்றி 'உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்' என்றான் அதற்கு
பத்மாசூரன் 'நான் யார் தலையில் கை வைக்கின்றேனோ அவன் எரிந்து
சாம்பலாகும்படியாக வரம் அளித்தருள வேண்டும்' என்றாராம்.

சிவனும் 'அவ்வளவுதானே! அளித்தேன் போ!' என்று கூறலானார். பத்மாசூரனுக்கு
ஓர் சந்தேகம் உண்டாயிற்று. சிவன் அளித்த வரமானது உண்மைதானா? பலிக்குமா?
என்று சோதனை செய்ய எண்ணினான். உடனே அவன் சிவன் தலையிலேயே கை வைத்துச்
சோதிக்க முற்பட்டான். சிவன் பயந்து போய் பல இடங் களுக்கும் ஓடினார்.
பத்மாசூரன் விட்டபாடில்லை. பிறகு விஷ்ணு விடம் அலைந்து சென்று, தாம்
முட்டாள்தனமாக அளித்த வரத்தினைப் பற்றியும், பத்மாசூரன் தன் தலையில் கை
வைக்க விரட்டி வருவது பற்றியும் கூறி, அதற்குப் பரிகாரம் தேடித் தன்னைக்
காக்கும்படி வேண்டினார்.


அதற்கு விஷ்ணுவானவர் 'அதுதானா பிரமாதம் இதோ ஒரு நொடிப் பொழுதில் அவனை
ஒழித்துவிட்டு வருகின்றேன்.'என்று கூறி அழகிய மோகினிப் பெண் உருவம்
எடுத்து பத்மாசூரன் முன் சென்று நின்றார். அந்த மோகினிப்பெண்ணைக் கண்ட
அசுரன் அவளை கட்டி அணைக்க எத்தனித்தான். அதற்கு அவள் நான் உனக்கு
உடன்படுகின்றேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீ மிகவும் அழுக்காய்
இருக்கின்றாய். எனவே நீ அருகில் உள்ள நீர் நிலையில் இறங்கிக் குளித்து
விட்டுவா என்று கூறினாள்.

அதன்படியே பத்மாசூரன் தண்ணீரில் இறங்கிக் குளிக்கும் போது தம் தலையில்
கைவைத்துத் தேய்த்துத் தண்ணீரில் மூழ்கி எழ முற்பட்டான். அவனது கை அவனது
தலையில் பட்டவுடனே அவன் தலை எரிந்து மடியலானான். விஷ்ணு சிவனிடம் சென்று
பயத்தை விட்டு வெளியே வாருங்கள் நான் அவனைப் பெண் வேடம் எடுத்துக்
கொன்று விட்டு வந்துவிட்டேன் என்று கூறினான்.

அதற்கு சிவன், 'எப்படிப் பெண்வேடம் போட்டு சென்றாய்? அந்த வேடத்தை
எனக்குக் கொஞ்சம் காட்டுங்கள்' என்றார் விஷ்ணு தான் போட்டுச் சென்ற
பெண் வேடத்தைப் போட்டுக்காட்டினார் . அதனைக் கண்ட சிவனானவர்,
விஷ்ணுவாகிய மோகினிமீது மையல் கொண்டு கட்டியணைக்க முற்பட்டார்.
ஒருவருக்கு ஒருவர் துரத்திக் கொண்டு ஓட இருவருக்கும் ஆடைகள்
நெகிழ்ந்துவிட இருவரும் கலவி செய்தனர். உடனே ஓர் குழந்தை பிறந்தது.
அதனைச் சிவன் கையில் தாங்கினானாம். அந்தக் குழந்தை கையில் பிறந்ததனால்,
கையனார் என்று அழைக்கப்பட்டு, பிறகு அய்யனார் என்றும், அய்யப்பன் என்றும்
ஆனது.இப்படி அரிக்கும் சிவனுக்கும் பிறந்த பிள்ளையாதலால், அய்யனார் அல்லது
அய்யப்பனை ஹரிஹரன் என்றும் அழைப்பதுண்டு. 

எனவே இந்தப் பிறப்புப் பற்றிக் கூறப்படும் கதையோ நல்லறிவும், நல்லொழுக்கமும் உடையோர் கேட்கவும்
மனம்கூட வெட்கப்படவேண்டியதாம். இயற்கை விபரீத நடத்தை வர்ணனை, ஆணுக்கு ஆண்
கூடிப் பிறந்தவராம் இவர் . 

இதை இயற்கை ஒப்புமா? மற்ற எந்த ஜீவராசிகளும் இப்படி நடப்பதில்லையே.


7 மறுமொழிகள்:

Harry Tue Dec 23, 10:43:00 PM  

சில இடங்களில் கடவுளை மரியாதையுடன் அவர் இவர் என்றும் பல இடங்களில் அவன் இவன் என்றும் கூறியிருப்பது மனதுக்கு வேதனை தருவதாய் இருக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் இந்த தலைப்பை தாங்கள் எடுத்திருக்கவே கூடாது. ஆயினும் பரவாயில்லை. தாங்கள் எதிலருந்து இந்த கதையை உருவாக்கி இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் கதையில் நிறைய குற்றங்கள் இருக்கின்றன. அரியும் அரனும் கலவி செய்தார்கள் என்ற தங்கள் கூற்று முற்றிலும் தவறு. அரியும் அரனும் கடவுளர்கள். பத்மாசுரன் வாழ்ந்த காலகட்டங்களில் மஹிஷி என்ற ஒரு அரக்கியும் வாழ்ந்து வந்தாள். அவள் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து சிவனை மகிழச் செய்து சாகாவரம் கேட்டாள். சிவன் அதைக் கொடுக்க முடியாது என்று கூறி வேறு வரம் கேட்க சொன்னார். மஹிஷியோ புத்திசாலித்தனமாக ஒரு ஆணுக்கும் மற்றொரு ஆணுக்கும் பிறக்கும் குழந்தையால்தான் தான் சாக வேண்டும் என்று வரம் கேட்டு அதன் மூலம் தான் சாகாவரம் பெறலாம் என்று நினைத்தாள். சிவனும் வேறு வழியின்றி மஹிஷிக்கு அந்த வரத்தை கொடுத்துவிட்டார். பத்மாசுரனை வதைத்த மோகினியும் சிவனும் இப்பூவுலகில் ஒரு ஆணுக்கும் மற்றொரு ஆணுக்கும் குழந்தை பிறக்க சாத்தியமில்லை என்பது தெரிந்ததால், இதை ஒரு காரணமாக பயன்படுத்திக் கொண்டு மோகினியும் சிவனும் ஒன்று சேர்ந்து அரிஅரன் என்ற ஒருவனை உருவாக்கி மஹிஷியை வதம் செய்தனர். அய்யா என்று சிலரும் அப்பா என்று சிலரும் அழைத்ததால் அதுவே அய்யப்பன் என்று ஆனது. ஐயனார் என்று அழைக்கப்படும் கடவுளுக்கும் அய்யப்பனுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அது போல ஒரு ஆணுக்கும் மற்றொரு ஆணுக்கும் குழந்தை பிறக்காது என்பது உலகறிந்த உண்மை. தங்கள் வலைத்தளத்தில் நிறைய நல்ல கருத்துக்களை பகிர்ந்துள்ளீர்கள். இது போல புராணக் கதைகளில் தாங்கள் உண்மைச் ச்ம்பவங்களை பதிவிட்டால் தங்கள் வலைத்தளம் மேன்மேலும் வளப்படும்.
இவண்
ஹரிஹரன்

Nilavan Wed Dec 24, 12:05:00 AM  

இப்பதிவுகள் வேதனைப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். சொல்லப்படும் கருத்துக்களை ஆரோக்கியமாய் எடுத்துக் கொள்ளவும்.

பெரியாரின் புத்தக்கத்திலிருந்த ஒரு பகுதியை இங்கே அளித்திருக்கிறேன். அவரின் கருத்துப்படி ஒரு சில கதைகள் சொல்லப்பட்டாலும் அனைத்தும் புனையப்பட்டு மக்களை ஏமாற்ற, அடிமைப்படுத்த ஆட்கொள்ளப்பட்டதே என்பதே..

தாங்கள் உரையாடலில் கூறியது போல் ஆத்திகன் கடவுள் வரலாற்றை ஏற்றுக் கொள்கிறான், நாத்திகன் குறை கூறுகிறான். ஆயினும் பகுத்தறிகிறோம் அல்லவா, அதுதான் எனது தேவையும்.

வாழ்க தமிழுடன்,
நிலவன்.

Nilavan Wed Dec 24, 12:13:00 AM  

மேலும் சில..

http://en.wikipedia.org/wiki/Ayyappan

//அரியும் அரனும் கலவி செய்தார்கள் என்ற தங்கள் கூற்று முற்றிலும் தவறு//

Vishnu found Shiva and explained the whole affair to him. Shiva asked if he too could see Vishnu in this transexual form. When Vishnu appeared thus, Shiva was overcome with passion, and united with him


//ஐயனார் என்று அழைக்கப்படும் கடவுளுக்கும் அய்யப்பனுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை//

The Tamils call him Ayyanar, and he is also called Shastha or Shasthappan by most Soouth Indian communities.


In most Tamil versions of the story, the legend ends with the birth of the god, and with his passage around the region. But in Kerala, the story continues with Ayyappan's adoption by the Pandalam Raja, and the subsequent encounter with Mahisi.

Senapathi Sat Dec 27, 03:59:00 PM  

hallo Nilavan...

I hav one question for u n ur favorite writer Gnani

Do u people Hav guts to write about Jesus Christ,,, or Allah...

Y r doing lik this,, really there are lot of Issues in India... i think u can give importance to tat..

Nilavan Sat Dec 27, 08:07:00 PM  

மிக்க நன்றி குரு..

இவை எனது சொந்த கருத்துக்கள் அல்ல. என் பார்வையில் பட்டவற்றை இங்கே பதிவிட்டிருக்கிறேன். நீங்கள் கூறியுள்ளவாறு கிடைத்தால் பதிவிடுகிறேன்.

இது மழுப்புதல் அல்ல, அதுதான் உண்மையே..

மேலும், நாம் சார்ந்தவற்றில் நம்மை வெளிக்கொணர்வோமே முதலில்...

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !