அன்புள்ள அப்பா
அன்பான அரவணைப்பில்
ஆதரவான அன்பினில்
இயல்பான நடவடிக்கையில்
ஈவுலகை நாங்கள் காணும்
யாவும் உணர்த்தும்
உங்கள் முகத்தையே !
தனித்தன்மை
தன்னம்பிக்கை
பரவலான அறிவாற்றல்
பகுத்தறியும் பண்பாடு
எனும் திறம் கொண்டு
நாங்கள் காணும் வெற்றிகளில்
உங்களின் உழைப்புகள்
எங்களின் வளர்ப்பில்
வெவ்வேறு முகங்களில்
பல்வேறு வடிவங்களில்
எண்ணற்ற கடவுள்களில்
எவ்வளவோ வேண்டினாலும்
நாங்கள் வேண்டும் முதல்
கடவுள் அப்பா !
கல்வியே கண் - அக்
காலத்தே கற்றுணர்ந்து
கற்றுக் கொடுத்ததால்
காரியம் பல செய்து
வாழ்கிறோம்
கல்வியில் - எங்களின்
கண்களாய் நீங்கள்
கேட்பவற்றையும்
கேடக நினைப்பவையையும்
அளவில்லா வாங்கிக்கொடுத்து
அன்பு புகட்டினீர்கள்
எங்களின் விருப்பத்தில்
உங்களின் மகிழ்ச்சி
4 மறுமொழிகள்:
Unga appa remba nallavaru!!
அது எங்க அப்பாவுக்கு எழுதின கவிதை இல்லை !
Tku Vijay :)
ur lines on appa topic s very nice ,expecting more on those...
Post a Comment