ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கர்நாடக மாநிலத்தில் மாநாடு

நன்றி : புதினம்.காம்

இந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்தில் சிங்களப் பேரினவாத அரசின் கொடூரத் தாக்குதலுக்குள்ளாகியிருக்கும் ஈழத் தமிழர் மீதான போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் மாநாடு நடைபெற்றது.
கர்நாடக மாநில பெரியார் திராவிடர் கழகத்ததினால் நடத்தப்பட்ட இம் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்பெற்றது.

சோமசாச வேதிகே என்ற அமைப்பின் சார்பில் அசோக், கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஐ.இராசன், தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் மீனாட்சி சுந்தரம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு சிங்கள அரசின் காட்டுமிராண்டித்தனத்தையும், இந்த இனப்படுகொலைக்குத் துணைபோகும் இந்திய அரசின் துரோகத்தை கண்டித்து கண்டன உரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து, பேராசிரியர் சரஸ்வதி சிறப்புரையாற்ற, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றினார்.

பேராசிரியர் சரஸ்வதி ஆற்றிய உரையின் போது தெரிவித்ததாவது:


இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்களே, இலங்கை என்ற பெயரிட்டதே தமிழன் தான், இலங்கை தீவுக்கு தாமிரபரணி என்ற பெயரும் உண்டு என்ற செய்திகளை சரித்திர சான்றுகளோடு விளக்கி உரையாற்றினார் அவர்.

கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் போது தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டு மக்களின் ஈழ ஆதரவு கட்டுடைத்து வெளிப்படும் நேரத்தில், சகோதர யுத்தம் என்று பெயரிட்டு, தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களின் திரிபுவாதத்திற்கு பதில் அளிக்கும் வகையில் 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதையும், இந்த அமைப்பில் மாற்று இயக்கத்தவர்கள் கூட, கடந்த கால தவறுகளை உணர்ந்து விடுதலைப் புலிகளின் தலைமையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஈழத்தமிழர் படுகொலைக்கு சிங்களவனுக்கு ஆயுதம் கொடுத்து, இலங்கையின் இறையாண்மையை காக்கும் இந்தியாவின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் சிங்கள குள்ள நரித்தனத்தை கண்டித்தார்.

"ஒபரேசன் முத்துமாலை" எனும் பேரில் இந்திய துணைக்கண்டத்தை சுற்றிலும் தளங்களை அமைத்து வரும் சீனாவிற்கு சிறிலங்கா அரசு 1987 இல் ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை மீறி இடமளித்திருப்பது - இந்தியாவின் பாதுகாப்பை காவு கேட்கும் நடவடிக்கை. இது பற்றி கவலைப்படாத அரசு மற்றும் உளவு நிறுவன அக்கறையின்மை குறித்தும் விரிவாக தனது உரையில் குறிப்பிட்டார்.

இம் மாநாட்டில் கர்நாடகத்தில் உள்ள தமிழ் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !