இலங்கைத் த்மிழர்களுக்கு ஆதரவாக விஜய் உண்ணாவிரதம் !

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைக் கண்டித்தும் நடிகர் விஜய் சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். சென்னை மட்டுமல்லாது தமிழகத்தில் 37 இடங்களில் ரசிகர்களின் சார்பாக உண்ணவிரதம் மேற்கொள்ளப்பட்டது. உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய், மனைவி சங்கீதா, எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, இயக்குனர் பேரரசு, மன்சூர் அலிகான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விஜயின் மனைவி சங்கீதா இலங்கைத் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தனது ரசிகர் மன்றத்தின் மூலமும், தானாகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். சினிமாவில் வசனங்களை பொளந்து கட்டும் விஜய் மேடைகளில் அதிகமாக பேசுவதில்லை.. மேடை நிகழ்ச்சிகள் தவிர்த்து ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் கூட விஜய் பொத்தாம் பொதுவாகத் தான் பேசுவது வழக்கம்.
தற்போது தனக்கென உள்ள ரசிகர் மன்றத்தின் மூலம் தனது ஆதரவை பொதுவாழ்க்கைக்கு தெரிவிப்பது பாராட்டுக்குரிய ஒன்று. ஆயினும் எதிர்கால அரசியல் ஆசையை வைத்து தான் இந்த முடிவு என்னும் விமர்சனமும் இல்லாமல் இல்லை. எப்படியாயினும் இது போன்ற முடிவுகளை அவ்வப்போது தனது ரசிகர் மன்றத்தின் மூலம் நல்ல விடயங்கள் செய்தால் நல்லது தானே.. இதில் மற்ற நடிகர்களும் சேர்ந்து நடத்தவோ, தொடர்ந்து நடத்தவோ முன்வர வேண்டும்..


உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய சந்திரசேகர், தமிழ் உணர்வுடன் இந்தப் போராட்டம் நடக்கிறது. விஜய்யைக் காண இங்கு ரசிகர்கள் வரவில்லை. மாறாக தமிழன் என்ற உணர்வுடன் திரண்டுள்ளனர்.


பிற மொழிப் படங்களில் நடிப்பதில்லை, தமிழில் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் உள்ளார் விஜய். இன உணர்வுள்ள தமிழனாக திகழ்கிறார் விஜய். இதனால்தான் இலங்கைப் படுகொலையைக் கண்டித்து இந்தப் போராட்டத்தை நடத்துகிறார் என்றார்.

விஜய் பேசியதாவது:
எனது ரசிகர்கள் நமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இதையடுத்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 37 இடங்களில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
சினிமாவை தாண்டி இப்படி உணர்வுள்ள ரசிகர்கள் எனக்கு கிடைத்திருப்பது பெரும் சந்தோஷத்தை அளிக்கிறது.

இந்த அறவழிப் போராட்டத்தில் கலந்து கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்7 மறுமொழிகள்:

Nilavan Mon Nov 17, 07:39:00 PM  

தம்பி அரிகரன்,

உன்னோட விருப்பத்திற்கேற்ப விஜய் உண்ணாவிரதம் பதிவு செயதாச்சு ..

மகிழ்ச்சி தானே !

வாழ்க தமிழுடன்,
நிலவன்

Anonymous,  Tue Nov 18, 10:24:00 AM  

Romba nandri thalaiva.....

Manoharan.K Thu Nov 20, 08:13:00 PM  

unga vijay, tamilargalukaaga saagum varai unnaaa viratham irunthaa avara nallavarunu sollalaam... chumma diet maintain panrathukaaga oru naal ..sorry 12 hrs saabidaama irunthaa atha periya thiyaagamnu solla mudiyathu.. ithu yelaam oru publicity kaaga... paavam avarey telugu pada industrya nambi thaan field ula irukaaru...ivaraavathu tamiluku uyira kodukarathavathu...
firstu ivaru kayula arivaalu pondra aayuthangala padathila edukaama irunthaaley tamilnadu uruputurum. samibathil nadantha law college vanmuraiyil ivarin pada thaakalgal athigamnu naan feel panraen.. perarasum thirunthanum.

Nilavan Sun Nov 23, 08:01:00 PM  

நீங்க ஒண்ணுமே பண்ணாதீங்க..
விமர்சனத்துக்கு மட்டும் தயாரா இருங்க..

அதிருக்கட்டும்... விஜய் அரிவாள் தூக்கி சண்டையிடுவதை நாமும் தான் பார்க்கிறோம்.. நமக்குள்ளே சண்டையெனில் அரிவாள் தூக்கிடுவோமா என்ன ? அவரவர்களின் கலாச்சாரமும், சூழ்நிலையும் அப்படி..

சட்டக்கல்லூரியின் கலாச்சாரம் அடிதடி, அரிவாள் என இருந்திருக்கிறது. மேலும் சினிமா முழுதும் வன்முறையை வளர்க்கிறது.. விஜயை மட்டும் தனிமைப்படுத்த அவசியமில்லையே... எல்லாரும் திருந்தணும்..

Anonymous,  Mon Nov 24, 06:15:00 PM  

Enakkennamo Vijay Nilavanukku kaasu kudukkuraar nu nenaikkiraen

Nilavan Mon Nov 24, 08:17:00 PM  

அட ஹானா,

என்ன இப்படி கேட்டுப்புட்டீட்ங்க... !
ஒரு நடிகன் என்ற ஈர்ப்பில் எனக்கு விஜய் மேல் ஒரு பிரியம், அன்பு உண்டு. அத்துடன் விஜய் நடத்திய போராட்டம் நண்பர்களின் பார்வைக்கு வைக்கவே இந்த பதிவு..

அது சரி இப்படி பதிவு போடுறதுக்கெல்லாம் காசு கொடுக்கிறாங்களா என்ன ? முகவரி கொடுங்க ஹானா..

வாழ்க தமிழுடன்,
நிலவன்.

Manoharan.K Sat Nov 29, 08:31:00 PM  

Reel hero laam real hero vaa aagamudiyathu... aagavum koodathu...cinema is a powerfull media...adhan moolamaa samuthayathuku nallathayum seyalaam kettathayum seyalaam. Masalaangura perula makkalidaye vakkirathayum, vanmurayum thoonda koodathu... apdi thoondugindra masala heros a naama ennaikumey arasiyala vida koodathu ...athu ajithukum porunthum ...vijaykum porunthum. Ajith antha vithathula Gentleman. He is just doing his job, not disturbing public in like this activities.

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !