தமிழீழக் கனவுகள் !

பிரபாகரன் : உலக ஊடகங்கள் யாவும் தமிழ் எனும் சொல்லை உச்சரிக்கவும், தமிழர் பற்றிய செய்திகளை அறியவும் காரணமாய் இருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரும், தமிழக மக்களை இலங்கை இனவெறியர்களிடமிருந்து காக்க தனி ராணுவம், அரசாங்கம் நடத்திக்கொண்டிருக்கும் தமிழீழ தேசீய தலைவர்.

இலங்கைக் காவல்துறையினர் தமிழர்கள் மீது நடத்திய கொடும் தாக்குதல்களையும், ராணுவத்தின் அத்துமீறிய செயல்களினாலும், சிங்கள் இனவெறியர்களால் நடத்தப்பட்ட கடும்செய்ல்களையும் சிறுவயதிலேயே கண்டு மனம் கொதித்தவர். இவ்வகையிலான பல்வேறு கொடுமைகளைக் கண்டு அவற்றிலிருந்து தமிழர்களை காக்க வேண்டும் எனும் உத்வேகம் அவரிடம் பிறந்தது. சாதாரண பொதுமக்களை, குடிமக்களிடம் இனவேற்றுமை காட்டி காயப்படுத்தும், கொல்லும் அரசாங்கத்தையும், நிராயுதபாணிகாளாக இருக்கும் மக்களை தாங்களின் ஆயுதம் கொண்டு அழிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதம் கொண்டே எதிர்கொள்ள முடியும் என முடிவெடுத்தார்.

பதினாறு வயதில் வீட்டை விட்டு வெளியே வந்து போராளியாக போராட ஆரம்பித்த பிரபாகரன் இன்னும் காட்டுக்குள் போராடிக் கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில் இந்தியாவிடம் தான் ஆயுதப்பயிற்சி, போர் பயிற்சி முதலியன கற்றுக் கொண்டார். கப்பல் கம்பெனி ஆரம்பித்து அதி வருமானம் ஈட்டினார். அரசியல் பிரிவு, கல்வி, காவல்துறை, புலனாய்வு, கடற்படை, வான் படை என ஒரு தனி நாட்டிற்கு தேவையான அனைத்தையும் ஆரம்பித்து உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படாத ஒரு நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார் பிரபாகரன்.

பிரபாகரன் தன் காதல் மனைவி மதிவதனியுடன் இருக்கிறார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் சார்லஸ் ஆண்டனி, துவாரகா, பாலச்சந்திரன். மகன்கள் இருவரும் புலைப்படையினில் இருக்கிறார்கள், மகள் இலண்டனில் இருப்பதாக தகவல்.

இன்று ( நவம்பர் 26) பிரபாகரனுக்கு 54 வது பிறந்தநாள். தனது பிறந்த நாளில் வானொலியில் ஒவ்வோர் ஆண்டும் உரையாற்றுவார். விடுதலைக்காக இன்னுயிர் ஈந்தவர்களுக்கு நன்றி கூறுவது, மதிப்பது முதலியன முக்கிய கொள்கையாகும். விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து முதல் களப்பலியாக சங்கர் என்னும் சத்தியநாதன் என்பவர் நவம்பர் 1982 நவம்பர் 27ல் வீரமரணம் அடைந்தார். முதல் பலியான அவரது நினைவாலும், மற்றும் உயிரீந்தவர்களை நினைவு கூறும் வகையிலும் மாவீரர் நாள் கொண்டாடப்படுகிறது..

தமிழீழ விடுதலைக்காக இருபதாயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தாயிற்று. இன்னும் இழக்க போர் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இருக்கின்ற நாட்டை வளமாக்க அமைதி முயற்சி ஏற்பட ஆளும் அரசோ தயாரில்லை. வருடம்தோறும் பெரும் பொருட்செலவு உள்நாட்டு போருக்கே போகிறது. அத்துடன் போர் என்ற பெயரில் இரு தரப்பிலும் எண்ணற்ற உயிர்ச்சேதங்கள். அன்புடன் பிரிந்து அவரவர் பொழுதுநோக்கினால் எல்லாம் சிறப்பாய் தான் இருக்கும். புத்தரை கடவுளாக கொண்ட நாட்டில் நாற்பது வருடங்களாய் பிரச்சனைகள், போர்கள்.. இனக்கொலைகள்.

தமிழீழத்தின் நிகழ்வுகளுக்கு உங்களுக்கு எத்துனை உடன்பாடு இருக்கின்றதோ இல்லையோ ஆனால் அங்கே அமைதி தவழ வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றே நினைக்கிறேன். வரவேற்போம் இனிவரும் காலங்களை நல்லதொரு பொழுதுடன்.. எண்ணற்ற நம்பிக்கைகளுடன்..

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !