மைக்ரோசாப்டின் கனவு உலகம்(ட்ரீம்ஸ்பார்க்) இலவசமாகதமிழ் வணிகத்திலிருந்து கிடைத்த செய்தி ...


http://www.tamilvanigam.in/

கூகிள், யாஹூ, லினக்ஸ், ஜாவா என்று தனக்கெதிராக பெருகிவரும் தொழில்நுட்ப போட்டிகளில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் அவ்வப்போது புதியதாக ஏதாவது செய்து தன் வாடிக்கையாளர்களை கவரச் செய்வது இயல்பு.

அந்த வரிசையில் தற்போது புதியதாக சேர்ந்திருப்பது ட்ரீம்ஸ்பார்க். ஏற்கனவே இருந்த சில திட்டங்களின் ஒரு மாதிரி என்று கருதலாம்.
எப்படி மைக்ரோசாப்ட் நிறுவனம் மென்பொருட்களை மேலாண்மை செய்பவர்களையும், அதை வைத்து பயன்படுத்துபவர்களையும் இலக்காக வைத்து பயனாளர்கள் குழுமங்களை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடத்தி வருகிறது. இதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எல்லா மென்பொருட்களைப் பற்றியும் அவ்வப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பயிற்றுநர்கள் மூலம் அந்த பயிற்சி குழுமும் நடைபெற்று வரும். அதோடு இமெஜின் கப் என்று பல்வேறு வடிவங்களின் மூலம் மாணவர்களையும், பயனாளர்களையும் கொண்டு செயல்பட்டு வருகிறது.

http://www.dreamsparkindia.com

இதற்க்கிடையில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ட்ரீம்ஸ்பார்க்கின் முக்கிய நோக்கமே மாணவ/மாணவியர்களை சிறந்த மென்பொருள் உருவாக்குநர்களாகவும், மென்பொருள் நிரல் உருவாக்குநர்களாகவும் உருவாக்க உள்ளதாக தெரிவிக்கின்றனது மைக்ரோசாப்ட் நிறுவனம். அதில் குறிப்பிட்டதக்க அம்சம் எல்லாமே இலவசம்.

என்னது இலவசமா? மைக்ரோசாப்டா என்று நாம் நினைத்தால் ஆம் மைக்ரோசாப்ட் நிறுவனம் இலவசமாகவே தன் மென்பொருட்களை வழங்குகிறது. ஆனால் மாணவர்களுக்கு மட்டும் இந்த மென்பொருட்கள் வழங்கப்படுகிறது.
ஏற்கனவே தனது விசுவல் ஸ்டூடியோ மற்றும் எம்எஸ் எக்கியூஎல் போன்ற மென்பொருட்களை இலவசமாக விநியோகித்த மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது மாணவ/மாணவியர்களுக்கு இலவசமாக இந்த மென்பொருட்களை வழங்க உள்ளது.

மென்பொருட்கள்
மைக்ரோசாப்டின் புதிய வெளியீடான விசுவல் ஸ்டூடியோ 2008 தொழில் பதிப்பும், மற்றும் மைக்ரோசாப்டின் சர்வர் இயங்குதளமான விண்டோஸ் 2008, 2003 தகவல் தள மென்பொருளான எம்எஸ் எஸ்கியூஎல் சர்வர் 2008/2005, மற்றும் இணைய தள இன்று பெரும்பாலானோரில் அதிகமாக பயன்படுத்தும் மைக்ரோசாப்ட் எக்ஸ்பிரசன் ஸ்டூடியோ , விளையாட்டுக்களை உருவாக்கஉதவும் எக்ஸ் என்ஏ போன்ற மற்றும் விசுவல் ஸ்டூடியோ எக்ஸ்பிரஸ் பதிப்பில் உள்ள அனைத்து மென்பொருட்களும் கட்டணமில்லாமல் இலவசமாக மாணவர்கள் பயன்படுத்தப் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிட்டத்தகுந்த அம்சம் என்னவெனில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஆங்காங்கே உள்ள தனது பார்ட்னர்களை கொண்டு அந்தப்பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக டிவிடியையும் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
எது எப்படியோ மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது மென்பொருட்களை 30 நாள்கள் மட்டும் பயன்படுத்த கொடுத்த அனுமதி இன்று மாணவர்களுக்கு இலவசமாக கொடுப்பதில் வந்து நின்றுகொண்டிருக்கிறது.
தொழில்நுட்ப போட்டிகள் ஏற்பட்டால் மட்டுமே பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. அதில் மைக்ரோசாப்ட்-ன் மாற்றமும் ஒன்று....

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !