நண்பர்களுக்கு வேண்டுகோள் !

ஈழத்தில் நம் தொப்புள் குடி உறவுகள் போரினால் வாழ்க்கை இழந்து,
சொந்தங்கள் இழந்து வழியற்று வலியோடு வறுமையில்
செத்து கொண்டு உள்ளனர். ஒரு தீபட்டியின் விலை rs130,
மண்ணெண்ணெய் விலை rs300-இது தான் .

உடுத்த உடை இல்லாமல் நிர்வாணமாக உலவும் இழி நிலைக்கு செல்லப்பட்டுள்ளனர் உலகத்திற்கு நாகரிகத்தை கற்று தந்த தமிழினம்.வழிபோக்கர்கள் வந்தால் கூட அசதியில் கண்ணயர்ந்து உறங்கி செல்ல வீட்டிற்கு வீடு திண்ணை கட்டிய தமிழினம் இன்று ஒண்ட வழியில்லாமல் வீதிக்கு வந்துள்ளனர். ஈழத்தமிழர்கள்

துயர்த்துடைக்கப்பட வேண்டாமா?
அவர்கள் வாழ்வு மலரவேண்டாமா?

அதற்க்கு ஒரு வாய்ப்பு
உங்களால் முடிந்தால் உடைகள்,உணவு,மருந்து பொருட்களை அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து ரசீது பெற்று கொள்ளுங்கள். நிதியுதவி செய்ய விரும்புவர்கள் "SRILANKAN TAMILS RELIEF FUND" என D.D or cheque தலைமை செயலகம்,தமிழ்நாடு அரசு,சென்னை-600009 என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.ஐ.நா சபை மூலம் ஈழம் செல்கிறது. இதை நம் தமிழக முதல்வர் கலைஞரும் சொல்லி இருக்கிறார் அவர்கள் கடலளவு துயரத்தில் ஒரு துளியையாவது நாம் சுமப்போம்-மனிதநேயத்தோடு!வேண்டுகோள்APPEAL


2 மறுமொழிகள்:

தங்க முகுந்தன் Wed Oct 29, 01:38:00 PM  

ஏகப் பிரதிநிதிகளின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சம்பந்தன் அவர்கள் இந்தியாவினது தற்போதைய உதவி தேவையில்லை என்று சொல்லியிருப்பது வேதனை தருகிறது. மக்கள் படும்பாடு கொழும்பிலுள்ள இவர்களுக்குத் தெரியாது! தமிழக தலைவர்களை குறை சொல்லும் இவர்கள் தாங்கள் முதலில் பதவி விலகுவது நல்லது! தமக்கு அரசால் வழங்கப்படும் பாதுகாப்பையும் (சிங்கள பொலிசால்) தவிர்ப்பது நல்லது!

Manoharan.K Sat Nov 01, 11:51:00 PM  

mschaan ithuku oru mudivu illayaa... naama porul udhavi mattum panrathuku naama verum pangaaligalaa?...

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !