இதயம் தானம் செய்த ஹிதேந்திரன்


மனித மனங்கள் எல்லாம் சுயநல சாக்கடைகளில் சுருண்டு கிடக்கின்ற நிலை பார்த்து வேதனைப்படுகின்ற வேளையினில் மகிழ்ச்சிகரமான ஓர் செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அச்செய்தி தமிழ்நாட்டிலிருந்து வரும் பொழுது பெருத்த மகிழ்ச்சி தான்.

வாகன விபத்தொன்றில் அடிபட்டு தலை முழுதும் பெரும் சேதமடைந்து காப்பாற்ற முடியாது என்ற நிலையில் இருந்த தனது மகனின் மற்ற பாகங்களை வாழ வைக்க அவற்றை தானம் செய்ய முன்வந்து, அதன் மூலம் ஆறு உயிர்களை வாழ வைத்து உறுப்பு தானத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திச் சென்றிருக்கும் ஹிதேந்திரனுக்கும் அவரது பெற்றோர் அசோகன் - புஷ்பாஞ்சலிக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
அவர்களின் இந்த விரைவான முடிவை ஏற்று செயலிலிருக்கும் பாகங்களை பத்திரமாய் அறுவை செய்து தகுந்த நேரத்தில் பயனாளர்களை கண்டு பிடித்து சிகிச்சை செய்து வெற்றி கண்ட மருத்துவர்களுக்கும் அவருக்கு உதவி செய்த காவலர்களுக்கும் வாழ்த்துக்களும், வணக்கங்களும்.

வாழ்த்தொன்றை வழிமொழிந்து விட்டு வேறு வழி செல்வதற்காக அல்ல இந்த பதிவு. ஒவ்வொருவரும் உறுப்பு தானம் உணர்ந்து இம்மாதிரியான சமயங்களால் நம்மால் இயன்றவைகளை தானம் செய்யலாமே... நம் சுற்றுப்புறத்துக்கும் உணர்த்துவோம்.. வாருங்கள் நண்பர்களே...

1 மறுமொழிகள்:

Anonymous,  Sun Sep 28, 03:24:00 PM  

It is a heart touching activity by the parents of Hitendran. When so many people are using their brains to kill and destroy others through terrorist activities, we can feel proud that we still have great souls living around us.

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !