ஒரே கல்லில் மூன்று மாங்காய்.


சிறுவயதில் எங்கள் ஊரில் உள்ள டீக்கடையில் தினத்தந்தியில் வெள்ளிக் கிழமை வெளிவரும் தங்க மலரும், ஞாயிற்றுக்கிழமை வெளிவரும் குடும்ப மலரையும் படிப்பதற்கென்று காத்திருப்பதுண்டு. பக்கம் விடாமல் படித்து விடுவேன். ஆனால் இப்போ அதெல்லாம் எங்கே படிக்க மனமும், நேரமும் இருக்கிறது. ஆனால் அவ்வப்போது கண்களில் கண்டால் ஒரு பார்வை பார்ப்பதுண்டு.

அவ்வாறு பார்க்கும் போது படித்தது உங்களின் பார்வைக்கு...

எனது உறவினருக்கு ஒரே மகன். அவன் எட்டாம் வகுப்பு படிக்கிறான். அவன் தேர்வில் நிறைய மதிப்பெண்கள் எடுத்தால் அவனை ஊக்கப்படுத்த ரூ 5, ரூ.10 கொடுப்பார். அப்படிக் கொடுத்து விட்டு இதை செலவு செய்யக் கூடாது, உண்டியலில் போட்டு சேமிக்க வேண்டும் என்று கறாராக சொல்லி விடுவார். தீபாவளி பொங்கல் போன்ற சமயங்களில் அவன் சேர்த்து வைத்த பணத்திலிருந்த எடுத்து ஒரு ஏழைக் குழந்தைக்கு புத்தகமோ, புத்தாடையோ வாங்கி தன் மகன் கையாலாயே அந்த ஏழைக் குழந்தைக்கு கொடுக்கச் செய்வார்.

உறவினரிடம் நான் "ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? என்று கேட்டதற்கு அவர் சொன்னார். இவ்வாறு செய்வதால் என் மகனுக்கு தன் சொந்தப் பணத்தில் ஒரு ஏழைக்கு உதவிய சந்தோசம் கிடைப்பதோடு, சேமிக்க வேண்டும் என்ற எண்ணமும் பிறக்கும். அதற்காக அவன் நல்ல மதிப்பெண் எடுக்கும் நோக்கத்தோடு படிப்பான். எப்படி ஒரே கல்லில் மூன்று மாங்காய்?" என்றார். இதை கேட்டு நான் வியந்து நின்றேன். உறவினரின் மகன் கலெக்டர், இன்ஜினியர், டீச்சர் என்று எதற்குப் படித்தாலும், அவன் ச்மூக சேவை செய்யும் எண்ணத்தோடு வளர்கிறான் எனபதைத் தெரிந்து கொண்டேன். இதை எல்லாரும் பின்பற்றலாமே.


என்ன நண்பர்களே !

இது நல்ல யோசனைதானே? இதில் உங்களுக்கு உடன்பாடு அமையும் பட்சத்த்தில் உங்களின் குழந்தைகளுக்கு, அல்லது நண்பர், சகோதரர், சகோதரரி, உறவினர்களுக்கு இதை அறிவுறுத்தலாமே ?

பின்குறிப்பு: இதில் நான்காவது மாங்காயாக எதிர்கால இளைய சமுதாயாம் சிறப்பாய் வளருமே..


என்றும் நட்புடன்,
நிலவன்.

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !