ஓலிம்பிக் - தங்கப் பதக்கம் !


இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் தங்கம் கிடைத்தது என்று நமக்கு நாமே கெளரவப்பட்டாலும் நூறு கோடிக்கு மேல் வாழும் நாட்டில் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்ததற்காக தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நிலையை நினைக்கத் தான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.

திறமைகளை ஊக்கப்படுத்தி வழிகளை வளப்படுத்தி வீரர்களை வளர்க்கும் பொறுப்பை விட்டுவிட்டு 5 லட்சம் பரிசு, 10 லட்சம் பரிசு என வரிந்து கட்டி அத்தோடு தமது தலையாய பொறுப்புகளை நிறுத்திக் கொள்ளும் வரும் மத்திய மாநில அரசுகளை என்னவென்று சொல்வது ?


நாம் மட்டும் என்ன செய்ய ? செவ்வனே என்று நாமும் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வென்ற அனுபவ் பிந்தராவுக்கு ஒரு வாழ்த்தை தெரிவித்துக் கொள்வோம்.
வாழ்த்துக்கள் அனுபவ் !

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !