இனிய பிறந்த நாள் வாழ்த்துககள்இன்று (ஆகத்து 25) பிறந்த நாள் காணும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு 'ஈர்த்ததில்' வலைத்தளத்தின் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம். மூன்று ஆண்டுகளாக கட்சி நடத்தி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க பெரும் கனவுடன் களமிறங்கும் விஜயகாந்த் வெறும் வெற்றுக் கண்டனங்களை விட்டுவிட்டு கொஞ்சம் தனது வாயை கட்டி திறனனைத்தையும் செயலில் காட்ட வேண்டுமென வேண்டிக் கொள்கிறோம். முதல்வராக அரசியலுக்கு வரவில்லை, மக்கள் பணிக்காக அரசியலுக்கு வருகிறேன் என தெளிவாக தன் பாதையைச் சொல்லும் சிரஞ்சீவியின் கூற்றையும் சற்று கவனிக்கலாம்.

ஆனாலும் உங்கள் பேச்சு இப்போ ரொம்ப சலிச்சுப் போச்சுப்பா... உங்களோட பழைய போலீஸ் கதை மாதிரி...... அதனால...... கொஞ்சம் கதையை... மன்னிக்கவும் வசனத்தை மாத்துங்க.... புதியதோர் அரசியல் வழிமுறையை கொண்டாங்க...

உங்களின் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடும் உங்களுக்கு வாழ்த்துக்கள்...

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !