மரண தண்டனையை ஒழிக்க வேண்டும்- கனிமொழி


காந்தியும் புத்தரும் பிறந்த இந்தியாவில் மரண தண்டணையை ஒழிக்க தைரியம் வரவில்லை என்று திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் மரண தண்டனை ஒழிப்பு கோரிக்கை மாநாடு சென்னையில் நடந்தது. மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா எம்பியுமான கனிமொழி பேசுகையில், மரண தண்டனையை ஒழிக்கக் கூடாது என்பதற்கு பல காரணங்கள் கூறுகின்றனர். ஜனநாயகத்திலும் பகுத்தறிவிலும் நம்பிக்கை கொண்டவர்கள் மரண தண்டனையை ஏற்க மாட்டார்கள். கொலையை இன்னொரு கொலையால் நியாயப்படுத்த முடியாது.

தீவிரவாதத்தை முன்னிருத்தி, மரண தண்டனையை ஒழிக்கக் கூடாது என்று பலர் கூறுகின்றனர். அதற்கு பல சமூக மாற்றத்தை உள்வாங்கி சரி செய்ய வேணஅடும். ஒரு வழக்கு சரி, தவறு, நியாயம் என்று சாட்சியை வைத்துதான் முடிவு செய்யப்படுகிறது.

புத்தரும் மகாத்மா காந்தியும் பிறந்த இந்த தேசத்தில் மரணதண்டனையை ஒழிப்பதற்கு தைரியம் வரவில்லை. சிலருக்கு பயந்ததால் திராணி வரவில்லை.

மரண தண்டனைக்கு எதிரான இலக்கியம் சிலப்பதிகாரம்தான். அதனை அடியொற்றி நாமும் குரல் கொடுப்போம். இதன் மூலம் எழுச்சி வரவேண்டும். அதன் மூலமே மனிதாபிமானம் உள்ள மனிதர்களாக மண்ணில் ஏற்றுக் கொள்ளப்படுவோம் என்றார்

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !