எவ்வளவு பேராசை !அளவுக் கதிகமான அன்பை - என்மேல்
அதிகமாய் வைத்திருக்கும்
அழகான - ஒருவனை
ஆத்துக்காரராய்
அடைய வேண்டுமென
கூறினாயே....!

ஓ ! இவ்வளவு பேராசையா? -என
நான் கேட்டதற்கு,
"சுருக்கமாக சொல்லட்டுமா?"- என
கேட்டுவிட்டு

'நிலவன்' என
என் பெயரை கூறி
என் மனதில்
குற்றால நீரைப் பாய்ச்சி விட்டு
கண் சிமிட்டி சென்றாயே - என்
கண்ணம் தொட்டு !!

- நிலவன்

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !