ஆட்சென்ஸ் என்றால என்ன? (Adsense)
கூகிள் நிறுவனத்தின் பெரும்பான்மையான வருமானம் மற்ற வலைத்தளங்களின் உரிமையாளர்கள் கூகிள்.காம் என்னும் இணைய தளத்தின் தேடுபகுதிகளில் விளம்பரங்களை வெளியிடுவதால் கிடைக்கிறது. இந்த அனைத்து புரோகிராம்களும் ஆட்வேர்ட்ஸ் என்னும் மென்பொருளால் மேலாண்மை செய்யப்படுகிறது. அந்த வருமானத்திலிருந்து ஒரு பகுதியாக நீங்களும் சம்பாதிக்கலாம்
கூகிளுக்கு வரும் வலைத் தள விளம்பரங்களை நீங்கள் உங்களுடைய இணைய தளத்தில் வெளியிடுவதால் கை நிறைய சம்பாதிக்க முடியும். அதாவது விளம்பரங்களை உங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டு கூகிளுக்கு வருமானத்தைக் கொடுக்கிறீர்கள், அதற்கு உபகாரமாய் கூகிள் நிறுவனம் உங்களுக்கு ஒரு தொகையை ஒதுக்கி கொடுக்கிறார்கள். இம்மாதிரியான அமைப்பிற்கு பெயர் தான் கூகிள் ஆட்சென்ஸ். ஒவ்வொரு வலைத்தள உரிமையாளரும் இதில் பங்கேற்கலாம்
உங்களுடைய வலைத்தளம் பெரும் தகவல்களைக் கொண்டிருந்தாலோ, அல்லது தினமும் பெரும்பாலோனோர் வந்து பார்வை செய்யும் வலைத்தளமாகவோ இருந்தாலோ உங்களால் கை நிறைய சம்பாதிக்க முடியும் அல்லது வலைத்தளத்துக்கும் ஆகும் செலவை ஈடுகட்ட முடியும்.
ஆக உங்களுடைய வலைத்தளத்திற்கு செலவை ஈடுகட்ட பணம் சம்பாதிக்கவும், அல்லது அதற்கு அதிகமாக சம்பாதிக்கவும் விருப்பம் உள்ளவர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த ஊடகம் என்றே சொல்லலாம். ஒரு மாதத்திற்கு குறைந்த அளவு 500 ரூபாய் சம்பாதிக்க முடியுமென்றால் அதுவே உங்களுடைய வருடா சந்தாக்களுக்கு ஈடானதாய் அமையும். கூடுதலாக வருமானம் வந்தால் நல்லதே என்னும் எண்ணமும் உங்களிடையே இருக்கும், அந்த எண்ணங்களுக்கு இது சரியான வாய்ப்பாகவே அமையும்.
இத்திட்டம் உலக மக்களிடையே மிகப் பிரபலம் அடைந்திருக்கிறது. ஒவ்வொருவரும் இதில் விளம்பரங்களை பிரசுரம் செய்து, அதன் மூலம் சம்பாதிப்பதற்காகவே வலைத்தளங்களை உருவாக்குகிறார்கள். அதே போல, இது எளிதில் கிடைக்கக் கூடிய வருமானம் அல்ல என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சொந்தமாக வலைத்தளம் உருவாக்கி அதை பலரும் வந்து பார்வை செய்யச் செய்யும் வித்தைகளை நீங்கள் கற்றிருக்கவும் வேண்டும். உங்களுடைய வலைத்தளம் தனித்தன்மையுடன் உள்ள கருத்துகளைய உடையதாய் இருக்க வேண்டும்.
நீங்கள் எதுவுமே செய்யாமல் உங்களுக்கு வருமானம் வராது என்பதை உங்களுக்கு உறுதிபட கூறிக்கொள்வதை கடமைப் பட்டிருக்கிறேன். கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது என்பது நாம் அறிந்ததே. இருந்தபோதிலும் இணைய தளத்தின் மூலமாக பெருமளவு பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் தான் சிறந்த வழி. --
ஆட்சென்ஸ் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்பதை அடுத்த பகுதியில் அறிவோம்.
6 மறுமொழிகள்:
Hello,
This is very good opportunity. I earned more than 5000 USD within 1 year. If we work little bit harder can earn more than 700 usd per month.
how kogulan??? wats ur blog id..pls send it,,i like to do watch it yaar
அண்ணே என் தளத்த யாராவது பார்த்தா தானே நான் சம்பாதிக்க http://tricksdon.blogspot.com
very nice information
http://nokiaconnectingppl.blogspot.com/
மிக்க நன்றி வைத்தீ
very good friend
Post a Comment