என்னைப் பற்றி


வணக்கம் தோழர்களே !

என்னை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன். எனது இயற்பெயர் விஜயலட்சுமணன். மதுரை மாவட்டம் கிருட்டிணாபுரம் என்னும் ஊரில் சங்கர்ராமு-பாக்கியம் தம்பதிக்கு 1981 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 10 ஆம் திகதி நவம்பர் 25) பிறந்தேன்.

கிருட்டிணாபுரத்திலுள்ள ஆரம்பக்கல்வியில் மூன்றாம் வகுப்பு வரையிலும், பின் சிவகாசி ரிசர்வ்லைனிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும், பின் மறுபடியும் மதுரை சேடபட்டியில் பத்தாம் வகுப்பு வரையும் எனது பள்ளிக் கல்வி முடிவுற்றது. பத்து வயதிலிருந்தே கதை, கவிதை, கட்டுரைகள் படிப்பதற்கான ஆர்வம் மேலோங்கியது. தமிழும் தமிழ் சார்ந்த பாடங்களில் நன்றாக படித்து வந்தேன்.

பள்ளிக் கல்வி முடிந்தது காஞ்சியிலுள்ள பக்தவத்சலம் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் கணிப்பொறித்துறையில் 2000 ஆம் ஆண்டு பட்டயம் பெற்றேன். கல்லூரிப்படிப்பு முடிந்தவுடன் பெங்களூரில் எட்டு ஆண்டுகள் விண்டேஸ் நிபுணராக பணிபுரிந்தேன். தற்சமயம் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் விண்டோஸ் நிபுணராக பணிபுரிந்து கொண்டு இருக்கிறேன்.கவிதைகள்:

ஊற்றெடுக்கும் அருவி போலல்லாமல் அவ்வப்போது மனங்களில் வழிந்தோடுகின்ற எண்ணவோட்டங்களைத் தொகுத்து அழகான வரிகளினாலும், வார்த்தைகளினாலும் அணிசெய்து இங்கே சிலவைகளைப் பதிவேற்றியிருக்கிறேன். அவைகளை தாங்கள் படித்து தாங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.


* தமிழர் திருநாள் * உலகம் எங்கே செல்கிறது ? * அன்புள்ள அப்பா
* தவிப்புடன் * கவிதையல்ல... * பெரியார் * காத்திருக்கிறேன்... ! * புண்பட்ட வெண்புறா ! * முங்காறு மழே...! * வானவில் ! * கண்ணெதிரே...தோன்றினாள் * திருமண வாழ்த்து... * யார் அவள் ? * 'பிரிய'மானவளே * பெண் ஒன்று கண்டேன் * தோழி அவள்(!) * எவ்வளவு பேராசை ! * இனிமையே இனிமையாய் * எய்ட்ஸ் தமிழ்ப்புத்தாண்டு * தெரியுமா உனக்கு * வாழ்த்துக்கள்

பயணங்கள்

நாம் படிக்கின்ற புத்தகங்களுக்கு இணையானதும் மேலானதுமாக படிக்கின்றவைகளைப் அனுபவமாய்ப் பெறுகின்றவைகளாக பயணங்கள் அமைகின்றன. அவ்வகைப் பயணங்களில் மாறுபட்ட மனிதர்கள், வழக்கங்கள், கலாச்சாரம், பண்பாடு எனப் பலவற்றை நாம் காணும், சந்திக்க நேரிடும் அனுபவமுண்டு. அவ்வகையான பயண அனுபவங்களைப் உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். தற்சமயம் எனது அமெரிக்க பயண அனுபவங்களை வெவ்வேறு பாகங்களாக பகிர்ந்துள்ளேன். எனது பயணத்தில் நீங்களும் பங்குகொள்ளும் உணர்வை அளிக்கிறதா என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

"விமான பயணங்கள்" "டெட்ராய்ட் நகரம்" "அனுபவம் புதுமை"
"நியூயார்க் நகரம்" "காலச்சுதுரம்" ”இரவுநேர நியூயார்க்' ”சுதந்திரதேவி சிலை
"எம்ப்யர் ஆவல்"

1. சிங்கப்பூர்

கவிதை, கதை, கட்டுரை போன்றவற்றில் எழுதும் ஆர்வம் அதிகமிருந்தாலும் அலுவலகப் பணிகளுக்கிடையையேயும் மற்ற பணிகளுக்கிடையேயும் கிடைக்கும் நேரத்தை செலவிட்டு எனது கருத்துக்களையும், கட்டுரைகளையும், சமயங்களில் கவிதையையும் பதிவிட்டு வருகிறேன். எனது படைப்புகளின் உங்களின் விவாதங்களை தெரிவியுங்கள். மேலும் மெருகூட்டுவதற்கான தகவல்களையும் தயங்காமல் அளிக்கவும் வேண்டுகிறேன்.

எனது நண்பர்கள், வாசகர்கள் “என்னைப் பற்றி” எனும் இப்பகுதியில் தாங்களின் மேலான கருத்துக்களையும், எண்ணங்களையும் தெரிவிக்க வேண்டுகிறென்.

மீண்டும் சந்திப்போம்..

வாழ்க தமிழுடன்,

தமிழ் நிலவன்.

மடல் முகவரி : nilavan@nilavan.net
வலை முகவரி : www.nilavan.net

23 மறுமொழிகள்:

Anonymous,  Tue Apr 28, 07:34:00 PM  

Just don't copy other's creativity. All the best.

Anonymous,  Tue Apr 28, 07:37:00 PM  

//செயலி பொருளாளனாய் பணிபுரிந்து வருகிறேன்//

What is the meaning?

நிலவன் Wed Apr 29, 01:51:00 AM  

மிக்க நன்றி..

காப்பியடிப்பது பெருமைக்காக அல்ல தோழரே.. நான் படித்த செய்திகளை மற்றவர்களுக்கு பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தினால் தான்..

Anonymous,  Sat May 02, 12:15:00 PM  

Well, if the intent is spread awareness for one's writing, you could have given short preview and link to that blog. Not doing a cut and paste of entire article without credits. That would be construed as copyright violation.

Nilavan Sat May 02, 02:17:00 PM  

ஈ மெயில்களில் வரும் கட்டுரைகளுக்கு லின்ங் கொடுப்பதற்கில்லை.. இருப்பினும் தாங்களின் அறிவுரையை கவனத்துடன் கையாள்கிறேன் தோழரே..

K.Manoj,  Wed May 20, 04:56:00 AM  
This comment has been removed by a blog administrator.
EARN MONEY UR HAND Wed Jul 08, 02:18:00 PM  

sir see my blog www.ineeya.blogspot.com
promote my blog.........

Nilavan Sat Jul 11, 12:48:00 PM  

தாங்களின் வலைப்பூவை எம்மாதிரியாக மேம்படுத்த வேண்டும் எனச் சொல்லுங்கள். செய்து தருகிறேன்.

ஹிப்ஸ்... Sat Jul 11, 08:32:00 PM  

வாழ்த்துக்கள் மேலும் வளர...

Unknown Thu Sep 17, 01:48:00 PM  

U GOTTA GREAT STUFF,BUT WRITE UR OWN VIEWS,INSTEAD OF OTHERS,U CAN WRITE ABOUT SOCIO ECONOMIC PROBLEM,IN UNDER DEVELOPED COUNTRIES, LIKE AFRICAN CONTINENT ISSUES LIKE FAMINE,EDUCATION,ASSASSINATIONS, GENOCIDES IN RUSSIAN COUNTRY, ALL OUR RESTRICTING THEIR VIEW WITH IN TAMIL NADU,I AM EXPECTING MRE FROM U WITH BROAD MIND APPROACH,BCZ ALL HUMAN BEINGS ARE SAME,PAIN AND PROBLEMS SAME FOR ALL.MY NO IS 09176667425

Unknown Thu Sep 17, 01:54:00 PM  

just take ur view on, world class movies like iranian,spanish,award winning and which gives pain to the heart, lot of movies are there, i think u can work on that,instead of working on our tamil flim itself,u can give best view on best novels and books,which is internatinally well recognised one,if possible u can include some iteresting thing in science,in that i can help u...........i am expecting some chang

Nilavan Thu Sep 17, 05:15:00 PM  

உங்கள் கருத்துக்கும், அறிவுரைக்கும் மிக்க நன்றி கருணா..

நேரங்களைச் செழிப்பாகச் செலவிட்டு செய்ய வேண்டிய காரியமது. முடியுமா எனத் தெரியவில்லை.. முயற்சிக்கிறேன்.

தமிழன்,  Thu Oct 01, 06:56:00 PM  

செயலி பொருளாளன் என்பதன் பொருள் என்ன ???

Nilavan Sun Oct 04, 07:40:00 AM  

// செயலி பொருளாளன் என்பதன் பொருள் என்ன ? //

Sysmtems Engineer எனச் சொல்லலாம்..

SURESH KS Mon Dec 28, 09:12:00 PM  

வணக்கம் நிலவன், உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை... www.suresh7383.blogspot.com - இதுதான் பிளாக்கர் முகவரி.. இதில் உன் பிளாக்கர் போல், அதாவது tab வசதி, வலதுப் புறத்திலுள்ளது போல், பழைய தகவல்கள் பார்க்க வசதி எப்படி அமைப்பது என சொல்ல முடியுமா?

சுரேஷ் க ச

SURESH KS Mon Dec 28, 09:14:00 PM  

வணக்கம் நிலவன், உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை... www.suresh7383.blogspot.com - இதுதான் என்னுடைய பிளாக்கர் முகவரி.. இதில் உங்கள் பிளாக்கர் போல், அதாவது tab வசதி, வலதுப் புறத்திலுள்ளது போல், பழைய தகவல்கள் பார்க்க வசதி எப்படி அமைப்பது என சொல்ல முடியுமா?

Nilavan Tue Dec 29, 11:17:00 AM  

வணக்கம் சுரேஷ.

கீழ்க்கண்ட பதிவைப் படியுங்கள். உங்களின் பிளாக்கை எளிதில் அழகாக்கலாம்.

அன்புடன்,
நிலவன்.

http://www.mentamil.com/2009/12/blog-post.html

Anitha Fri Oct 08, 04:45:00 PM  

Its all a great JOB.. Even to do copy paste ppl sud have sum time, sense, u hav it i really liked yours... Great Job... Well done

எஸ்.கே Mon Jan 10, 05:36:00 PM  

நான் இராமகிருஷ்ணா மிஷன் நிறுவனம் ஏழை மற்றும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்காக நடத்தும் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் விரிவுரையாளராக தொண்டு புரிந்து வருகிறேன். அங்கு கணிப்பொறித்துறை படிப்பு பயிலும் மாணவர்கள் பலருக்கு படிப்பு முடிந்தவுடன் தகுந்த வேலை கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். அப்படியே சிலருக்கு கிட்டினாலும் மென்பொருள் துறையில் கிடைப்பதில்லை. சம்பளமும் குறைவாக தருகிறார்கள் அதனால் பல மாணவர்கள் கடன் வாங்கி பட்டப் படிப்பை தொடரும் கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள்.

உங்கள் அனுபவத்தின் அடிப்படையில் அவர்கள் எந்தெந்த நிறுவனங்களை எவ்வாறு அணுகலாம் என்பதற்கு உங்கள் மேலான ஆலோசனைகளை அளித்தால் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்.

என் மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் பதிலை அனுப்பக் கோருகிறேன்.

sk at cyberbrahma dot com

நன்றி

எஸ்.கே

Unknown Wed Jul 31, 01:45:00 PM  

nice to read ur posts keep going on.......

Unknown Wed Jul 31, 01:46:00 PM  

nice to read your posts keep going on...brother.....

Unknown Thu Dec 19, 10:41:00 AM  

oru village la pirandhu ,other country work panitu tamilu gaga um manitha oorimaika vum ivlovum pandrathu perumaia iruku...

ஜெயா ஸ்ரீ.நிவாசன் Wed Apr 26, 01:42:00 PM  

நிலவன்,

வணக்கங்களும் வாழ்த்துக்களும்,........

நான் ஜெயா ஸ்ரீநிவாசன்...ஸ்ரீ.நிவாசன் அப்பா.....

புதிதாக Blogs பற்றி தெரிந்து கொள்ள விருப்பபட்டு
தெரிந்தவரை வந்து விட்டேன்.

உங்கள் பக்கங்களில் உலா .....வருகிறேன். தினம் கொஞ்சமாய்.
ரசிக்கவும், பயனுள்ளதாகவும் ..... வாழ்த்துக்களுடன்....வாழ்க வளமுடன்.

என் Blog முகவரி, site title set செய்வது, போஸ்டிங்க்ஸ்
போடுவது, ஃபாலோ செய்வது என எதுவும் எனக்க்ய் தெரியவில்லை.

ஆனால் என்னிடம் பகிரவும், பதிவிடவும் எனது ஐம்பது வயதின் அனுபவங்கள் .....கதையாய், கட்டுரையாய், கவிதையாய், இன்பமாய், துன்பமாய், அழகாய், சோகமாய் என என்னென்னவோ இளைய தலைமுறைக்கு பயன்படுவதாக......

உங்களின் உதவி எனக்கு கிடைக்குமா?...........வலைப்பூக்களை எப்படி கையாள வேண்டும் என சொல்லி தருவீர்களா?

என் பதிவுகளை பிறர் படிக்கவும், பிறர் பதிவுகள் என் வலைப்பூவில் வரவும் நான் என்ன செய்ய வேண்டும்?......

என் வலைப்பக்கத்தை ஆகச் சிறந்ததாக ஆக்க நான் என்ன செய்ய வேண்டும்?....................

நிலவன்..........உதவுவாரா?

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !