காத்திருக்கிறேன்... !

கவிதை ஒன்றென்று
கன்னியரை கவர
அங்கழகை ஆர்ப்பரிக்கும்
அசௌகரியம் வேண்டாம் என்றே
நினைத்திருந்தேன் - அவளை
நான் அறியும் வரையில்... !

சிற்றின்ப சிதறலின்றி
சீர்நடையுடன் சென்றயெனை
சிந்தனை கந்தையுற்று
தன்னிலை மறந்து
தனித்துவம் இழந்து
அவள்நிலை அறிய
அவள் தான் அகிலமென
ஆட்படுத்தியதெதுவோ ?

உடலில் உயிரில் உள்ள
அணுக்களனைத்தும் அவளையே
நினைத்து தேடுவதேன் ?

உறுதியுடன் உல்லாசமாய்
உலவும் பாதைகள்
வழிமாறி வழுக்கவதேன் ?

பயணங்கள் பதற்றத்துடன்
பயணிப்பதேன் ?
நினைவுகள் எப்போதும் உனையே
நினைப்பதேன்?
கருணையாய் காந்தமாய்
பார்வையில் பரவசப்படுத்தும்
உள்ளதை நல்லதாய்
காணும் கண்களை
காண்பதற்கோ ?

அழகு நிலவாய்
அமுத மொழியாய்
காண கவிதையாய்
சிற்பமாய் சிரிக்கும் - உன்
சிங்கார முகத்தை
பார்ப்பதற்கோ?

பேச்சினில் எண்ணங்களில்
உயர்ந்த உள்ளத்தையும்
அளவில்லா அக்கறைகள்
இணையில்ல உறவுகள் - ஆகிய
மொத்த உருவத்தையும்
காணும் தருணம்
உணர்வதற்கோ ?

கண்கள் பார்த்து
எண்ணங்கள் ஏற்று
நெஞ்சம் நெகிழ்ந்து
மனதுக்குள் மணியடித்து
என்னவள் இவள் தான்
என நான் சொல்லும் நாளுக்காக........

-நிலவன்

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !