அமெரிக்காவில் "டெட்ராய்ட் நகரம்" - 2

அமெரிக்கா பயணமாகி சேர்ந்ததை சொல்லியிருந்தேன். இந்த கட்டுரையில் என்னவெல்லாம் பார்த்தோம் எனப் பார்க்கலாம். முதல்வாரத்தில் ஹோட்டலின் அருகிலுள்ள Briarwood Mall எனும் வணிக வளாகத்தில் நண்பர் பிரகாசுடன் சுற்றிப் பார்த்தோம். நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு பிரம்மாண்டமான கடைகளுடன் எண்ணற்ற கடைகளை உலாவி வந்தோம். சலுகைவிலைகளில் கிடைத்த ஒரு சில பொருட்களை மட்டும் வாங்கினோம். ஒவ்வொரு பொருளின் விலையைப் பார்த்து நமது ரூபாயில் எவ்வளவு என்று கணிப்பதை மறக்கவில்லை.அடுத்த வாரத்தில் Farmington Hills-தங்கி Detroit மென்பொருளானாய் இருக்கும் எனது வகுப்புத் தோழன் நாகராஜனின் சந்திப்பு. அமைதியின் மறுவுருவமாய் அலாதியான திறமையுடன் எங்களுடன் உலா வந்த நாகராஜ் இன்று அமெரிக்காவில் இரண்டரை வருடங்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

அமைதி மட்டுமல்ல, ஒழுக்கத்தை கடைபிடிப்பதிலும் வல்லவனாய் திகழ்கிறான் ( கடைசி வரையில் 'தண்ணி' வாங்கிக் கொடுக்கவில்லை என்பது குறிப்படத்தக்கது). காரெடுத்துக் கொண்டு சென்னை விலாஸ் என்னும் இந்திய உணவிடுதியில் சைவ, அசைவ வகைகளை 'வெட்டி' க்கொண்டு Detroit சுற்றக் கிளம்பினோம். விசாரிப்புகள், கல்லூரி ஞாபகங்கள் என விவாதங்கள் தொடர்ந்தது. அமைதிபூங்கா அமெரிக்காவில் கார் ஓட்டும் அழகை ரசித்துக் கொண்டே சென்றேன்.
டெட்ராய்ட்டின் முக்கியமான இடமான GM towers-ம் அதனைச் சுற்றியிருந்த இடங்களையும் ரசித்துப் பார்த்தோம். கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டிடத்தின் நுழைவு வாயில் பிரம்மிக்கத்தக்கதாய் இருந்தது. கீழ்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை நோட்டமிட்டோம். பின் காரிலமர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ள தவறவில்லை.GM டவரின் உள்ளே நுழைந்து வெளியே வந்தால் கனடா நாட்டைக் காண் முடிகிறது. டெட்ராய்ட் அமெரிக்காவின் எல்லையில் உள்ளது. 500 மீட்டர் தொலைவில் தண்ணிரைத் தாண்டினால் கனடா நாட்டின் வளங்களையும், மனித, வாகனங்களின் நடமாட்டத்தைக் காணலாம். மறக்காமல் அனைத்து கோணத்திலும் போட்டோ எடுத்துவிட்டு பறக்கும் ரயிலுக்கு பயணமானோம். தானியங்கியாக 30 நிமிடம் பயணிக்கும் பறக்கும் ரயிலின் மூலம் டெட்ராய்ட் நகரத்தை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. புராதன காலத்து வீடுகளையும், கட்டிடங்களையும் டெட்ராய்ட் நகரம் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. பறக்கும் ரயில் வட்டாரப் பேருந்தைப் போன்று சுற்றி பின் ஏறிய இடத்துக்கே திரும்பி வந்தது. ஆக டெட்ராய்ட்டையும் பார்த்தாகி விட்டதென கார் எனது ஹோட்டலுக்கு விரைந்து, என்னை இறக்கிவிட்டுவிட்டு டாடா, பாய் பாய் என காட்டிவிட்டு விடைபெற்றான் நாகராஜன்.

ராஜா ராணி என்னும் இந்திய உணவு விடுதியில் மதிய உணவுக்குச் சென்றோம். அங்கேயும் அசைவ உணவுகளை அபேஸ் செய்தோம். அந்த உணவு விடுதியில் பகுதி நேர வேலை பார்க்கும் ரவி, எம். எஸ் மாணவராம். பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டிருந்தார். எங்க மதுரைக்காரராம், சந்தோஷமாகத்தான் இருந்தது. உணவை முடித்தவிட்டு ஹுரான் ரிவர் பார்க்கச் சென்றோம். வண்ண வண்ணமாய் மர இலைகளைக் கொண்டு அமைந்திருக்கும் மரங்களும், அதனூடே அலை பாய்கின்ற தண்ணீரும் அற்புதமான காட்சியாயிருந்தது.1 மறுமொழிகள்:

Anonymous,  Tue Mar 18, 05:31:00 AM  

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Monitor de LCD, I hope you enjoy. The address is http://monitor-de-lcd.blogspot.com. A hug.

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !