முங்காறு மழே...!

கன்னடத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டு இருக்கும் முங்காறு மழே படத்தின் 'அனிஸுதிதே யாக்கே நிந்து..' என்னும் பாடலின் இசையைத் தழுவி தமிழில் ஒரு சில வரிகள்....! ( கன்னடத்தின் மொழிபெயர்ப்பு அல்ல...)
மனதில் என்ன மாற்றம் இன்று
மயிலிறகின் சரசம் போன்று
நீயே தான் காரணம் என்று
கூறதான் இருக்குது சான்று..!

ஆஹா என்ன கொடுமை ......ஏனிது ?
என்னை எங்கோ பிரித்தெறிவதுபோல்......
தோணுவதேனோ............ ?
.......................மனதில் என்ன மாற்றம் இன்று


உனை கண்ட நாள் முதல் முதலாய்.....
எனை நானே இழக்கிறேன்..
எண்ணமெல்லாம் எங்கோ சென்று..
தனக்குள்ளே சிரிக்கிறேன்..

உலவும் நிலா போல் உதயமாகிறாய்
உன்னை நானும் கண்டதுமே !
என்ன விந்தை சொல்லு..... சொல்லடி.!
உலகாம் யாவுமே உனக்குதானென்று
எழுதி கொடுத்திடுவேன்..

( மனதில் என்ன..... )


குறிப்பு: இதே கன்னட பாடலை இங்கே கேட்கலாம்.


- நிலவன்

3 மறுமொழிகள்:

arkr Mon Jul 02, 02:21:00 PM  

UNGALUKKU TAMIL NANRAGA OTHULAIKIRATHU http://www.orkut.com/Home.aspx?xid=5046660649027331979

Anonymous,  Sun Mar 25, 05:29:00 PM  

உங்கள் வரிகள் அருமை!

என்னுடைய வரிகளும் சில...
மழைத்தூறுதே மனதில் இன்று!
உன் மணமும் வீசுதே நீதான் காரணம் என்று!
தேவதை லோகத்திலிருந்து எனக்காக வந்தவள் என்று!
ஆஹா! இது புதிய பாவனை!
சொல்வேன் நீயே என்னுயிர் என்று! ஓஹோ பெண்ணிலவே...

Anonymous,  Sun Mar 25, 05:29:00 PM  

உங்கள் வரிகள் அருமை!

என்னுடைய வரிகளும் சில...
மழைத்தூறுதே மனதில் இன்று!
உன் மணமும் வீசுதே நீதான் காரணம் என்று!
தேவதை லோகத்திலிருந்து எனக்காக வந்தவள் என்று!
ஆஹா! இது புதிய பாவனை!
சொல்வேன் நீயே என்னுயிர் என்று! ஓஹோ பெண்ணிலவே...

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !