'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.

'தி இந்து’ தமிழ் நாளிதழ் நடத்திய பொங்கல் புகைப்படப் போட்டியில் நான் சிங்கப்பூரில் எடுத்த புகைப்படம் தேர்வு பெற்றிருக்கிறது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Read more...

உளச்சிதறல் - சிறுகதைதன்னிடமுள்ள கண்ணீரனைத்தையும் அழுது தீர்த்துவிடும் மனநிலையில் நிலைகுலைந்து போயிருந்தாள் ஆனந்தி. தனக்கான இந்த துக்கத்தை தன் கணவரிடமிருந்தே பெறுவாள் என கனவிலும் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. தன் மீல் அதிகம் பாசம் வைத்திருந்த தனது தந்தையின் திடீர் இழப்பு பெரிய இடியாக இறங்கியதை தாங்க முடியாதவள் அதன் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அவரது கடைசி முகத்தை காண முடியாதது போனது பேரிடியாக இருந்தது ஆனந்திக்கு. 

அப்பாவை நினைக்க நினைக்க அளவுக்குமீறி அழுமை பீறிட்டது. தன்னுடைய பாசம் ஒரு மடங்கு என்றால் தன் மேல் அப்பா வைத்திருக்கும் பாசம் நூறு மடங்கு இருக்கும். சிறு வயதிலிருந்து தனக்கும் தந்தைக்குமிடையேயான காட்சிகள் கண்ணில் மின்னலென வந்து வந்து சென்றன. அதிர்ஷ்டத்தில் நம்பிக்கையில்லாத அப்பா, தான் பிறந்தவுடன் தான் தனக்கான எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நினைத்தாரம். அந்த எண்ணத்தினால் மட்டும் அவர் எடுத்த முயற்சிகள் அவருக்கு வெற்றியையும் வசதியையும் அளித்தது. தலைப்பிள்ளை பொட்டையாய்ப் பிறந்துவிட்டதே என பிறந்தவுடன் அப்பத்தா சொன்ன ஒரு சொல்லுக்காக தன்னுடைய அம்மாவுடன் பத்து வருஷம் வைராக்கியத்தை விட்டுக்கொடுக்காமல் பேசாமலிருந்ததார் அப்பா. பிறந்த நாள் முதல் தன் மீது தன் அப்பா வைத்திருந்த பாசத்தை அம்மா சிலாகித்துச் சொல்லுவைதைக் கேட்டு கேட்டே தனது தந்தை மீதான பாசமும், மரியாதையும் தன்னிடம் அதிகாமனதை உணர்வுபூர்வமாய் உணர்ந்திருந்தாள் ஆனந்தி. 

தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றே தன்னை வருத்தி பெரும் கஷ்டப்பட்டு பொருளாதாரத்தை உயர்த்தப் பாடுபட்டார். சிறுவயது முதல், ஆரோக்கியம், கல்வி, தனக்கான சுதந்திரம், திருமணம் என தனது ஒவ்வொரு நிலையிலும் தனது தந்தை தவிர்த்த நிகழ்வுகளை தன்னால் காணவே முடியவில்லை. ஒரு தந்தை என இல்லாமல் ஒரு நண்பர் போல் “வாடா ஆனந்தி, எப்படிடா இருக்கே.. என அன்புடன் கொஞ்சும் அப்பா இப்போது இல்லை, நான் பார்க்கவும் இல்லை எனும் போது ஆனந்தியால் தாங்கமுடியவில்லை. 

இவ்வளவு பாசம் வைத்திருந்த அப்பாவின் முகத்தை காணக் குடுத்து வைக்கலியேடி ஆனந்தி.. எனக் கேட்பது போல் இருந்தது அம்மாவின் பார்வை. இரண்டு மாதத்திற்கு முன்பு தான் வந்து பார்த்துச் சென்றிருந்தாலும் அவரின் கடைசி முகத்தை காணதது பெரும் வெற்றிடத்தை மனதில் உருவாக்கியது ஆனந்திக்கு. அப்பா இறந்து விட்டார் என நேற்று இரவே கோலாலம்பூரில் இருந்த கணவனுக்கு தகவல் வந்திருக்கிறது. தகவல் கிடைத்தவுடன் தனக்கு சொல்லியிருந்தால் நான் சீட்டு வாங்கி தனியாக பிளைட்டில் வந்து இறங்கியிருப்பேன், அப்பாவின் முகத்தைப் பார்த்தும் இருப்பேன். ஆனால் கோலலம்பூரிலிருந்து கிளம்பி சிங்கப்பூர் வந்து அதன் பின் சீட்டு வாங்கி இங்கே வருவதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லையென்று கூறி தன்னை மெதுவாக கூட்டிக்கொண்டு வந்த தனது கணவனின் முகத்தைப் பார்க்கவே அருவெருப்பாயிருந்தது.

திருமணமான புதிதில் வாக்குவாதத்தில் ஏற்பட்ட கோபத்தில் அடித்துவிட்ட தன் கணவன் சிவராமை மருமகனென்ற மரியாதையில்லாமல் திட்டிவிட்டார் அப்பா. அந்தக் கோபத்தைத் தான் இப்போது என் மூலம் பழிதீர்த்துக் கொள்கிறாரோ எனவும் மனம் அவளை கேள்விக் கணைகளால் துளைத்தது. ஹதராபாத்தில் சொற்ப வருமானத்தில் குடித்தனம் நடத்தும் தனது தங்கை கூட இருபது மணி நேரம் ரயிலில் பயணம் செய்து தனது தந்தையின் இறுதிச் சடங்கைப் பார்த்துவிட்டாள் ஆனால் என்னால் அப்பாவைப் பார்க்க முடியவில்லையே என குற்ற உணர்வில் குறுகினாள். இருந்தாலும் உம்புருஷனுக்கு இம்புட்டு ஆகாதடியம்மா... இப்படியா அப்பனை தூக்கினதுக்கப்புறம் கூட்டிட்டு வர்றது... சாவு எல்லாருக்கும் தான் வரப்போது.. நாளைக்கு இவனுக்கு என்னா நடக்கும்னு பார்ப்போம்.. என தன்கண் முன்னே சபித்துக் கொட்டினார்கள் தனது சொந்தங்கள்.

தனது நாத்தனார் சித்ரா மட்டும் அருகில் வந்து மதினி தப்பா நினைச்சுக்காதீங்க... உங்களுக்கு பச்ச உடம்புன்னுதான் அண்ணன் சொல்லலியாம்... அழுதுக்கிட்டே சாப்பிடாம்ம வருவீங்கன்னு சொல்லாம வந்திருக்கு..னு சொன்னாள். இந்த உப்புச் சப்பு காரணங்களை எல்லாம் தன்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எனக்கு ஏன் இந்தச் சோதனையக் கொடுத்தே என பெரிதும் வணங்கும் தெய்வமான வண்டியூர் மாரியம்மனை வேண்டிக்கொண்டாள். பிள்ளை பெற்று எட்டு மாதமாயிடுச்சு இதிலென்ன பச்ச உடம்புன்னுகிட்டு..... பச்ச உடம்பு என்பதற்காக அழமாலா இருந்துவிடப்போகிறேன். தன்னை சரியான நேரத்துக்கு கூப்பிட்டு வரவில்லையென தனது தம்பி கிருஷணனும் தன்னை கணவன் மேல் கோபத்தில் இருப்பதை உணராமல் இல்லை. அப்பாவின் கடைசி முகத்தை பார்க்கவில்லை என்பதைத் தவிர அப்பாவின் இறுதிச் சடங்கு சிறப்பாக இருந்ததை ஊரிலுள்ள கிழடு, கிழவிகள் எல்லாம் சிலாகித்து சொல்லின. சொல்லிய அனைத்து வாய்களுக் தனது கணவனை நாலு கேள்விகள், திட்டி, சிறுமைப்படுத்தி சபிப்பதை மறக்காமல் செய்தனர். அம்மா, தங்கை, தம்பி, ஊர்மக்கள் என யார் சொன்னாலும் அவருக்கு பதில் சொல்ல முடியாத, நியாயபடுத்த ஒன்றுமேயின்றி நிராயுதபாணியாக நின்றாள் ஆனந்தி. 

எல்லாச் சடங்குகளும், காரியமும் எல்லாம் முடிந்து சிங்கப்பூருக்குச் செல்ல காரில் மதுரை விமான நிலைம் செல்லும் வழியில் வண்டியூர் மாரியம்மன் கோயில் திருப்பத்தில் ஆனந்தி மனதில் “மாரியம்மா.. எம் புருஷன் தெரிந்து செய்தாரோ.. இல்லை தெரியாமல் செய்தாரோ.. மன்னிச்சுக்கோ... எம் புருஷன் மேல் சபிச்சங்கவ வாக்கு எதுவும் பழிக்காம நீதாம காப்பததனும்” என்று வேண்டிக்கொண்டாள். 

Read more...

“இதயம் பேசுகிறது” தொலைக்காட்சி நிகழ்ச்சியில்


சிங்கப்பூர் மீடியாகார்ப் வசந்தம் தொலைக்காட்சியில் நடைபெற்ற “இதயம் பேசுகிறது” என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது எடுத்த படம். 

இதன் முழுப்பதிவை இங்கே காணலாம்.. 


Read more...

எழுத்தாளர் ஞாநி அவர்களுடன்சிங்கப்பூரில் தங்கமீன் வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற திரைக்கதைப் பயிலரங்கில் திரு ஞாநி அவர்களுடன்.. 

Read more...

சிங்கப்பூர் "பொய்யிற் காவியம்" - குறளோன் வாழ்வு - நாட்டிய நாடகம்"பொய்யிற் காவியம்"


சிங்கப்பூரில் அறுபது ஆண்டு காலமாக இயங்கி வரும் "திருவள்ளுவர் தமிழ்
வளர்ச்சிக் கழகம்" தனது மணிவிழாவை இந்த ஆண்டு, எதிர் வரும் மார்ச் மாதம்,
24 ம்தேதி, சனிக்கிழமையன்று மாலை 7 மணி அளவில், 60 பார்கர் ரோடில்
அமைந்துள்ள Mrs. Lee Choon Guan Concert Hall, (ACS வளாகத்தில்) வெகு சிறப்பாகக்
கொண்டாட இருக்கிறது.

சிங்கப்பூரர்கள் மத்தியில் திருக்குறள் பயன்பாடு மற்றும் தமிழ் மொழி வளர்ச்சி,
தாய் மொழிப் பயன்பாடு, குறள் ஆராய்ச்சி போன்றவற்றில் பங்களிப்பைச் செய்து
வரும் "திருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்", தனது அறுபதாம் ஆண்டு நிறைவு
விழாத் தொடர் நிகழ்ச்சிகளில் முதலாவதாகச் சிறப்பு நிகழ்வு ஒன்றினை
ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாகத் திருவள்ளுவரின் திருக்குறள் வழி, மனித
வாழ்வை ஒன்பது பகுதிகளாகப் பிரித்து, அப்பகுதிகளுக்கு ஏற்ற குறள்களைத்
தேர்ந்தெடுத்து அவற்றை ஒரு மாலையாகக் கோர்த்துப் "பொய்யிற் காவியம்" என்கிற
குறள் வழி நாட்டிய நாடகமாக உருவாக்கி வழங்க இருக்கிறது.

திருமாளம் சேதுராமன் அவர்களின் "சுருதிலயா நுண்கலைப் பள்ளி" ஒருங்கிணைக்கும்
இந் நாட்டிய நாடகத்தின் இசை, நடன அமைப்பை தமிழகத்தைச் சேர்ந்த மோகன்
வைத்தியாவும், எழுத்து கவியமைப்பை உள்ளூர்க் கவிஞரான காவியன் முத்துதாசனும்
உருவாக்கியுள்ளனர்.

சுருதிலயாவின் ஆசிரியர்களான கிருத்திகா, தேவராஜன், ராஜசேகர், சந்திரநாத்
பட்டாச்சார்யா மற்றும் மாணவிகளுடன் சிங்கப்பூரில் இசை மற்றும் நாட்டியத்
துறையில் சிறந்து விளங்கும் லாசர், குகன், விவேக் மற்றும் சுஜாதா, துர்கா, ப்ரீதா,
மெலனி, அனு, ரேஷ்மி, திவானி போன்ற நாட்டியத் தாரகைகளும் இணைந்து
நிகழ்ச்சியை படைக்க இருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு மேலும் மகுடம் வைத்தாற் போல, சிறப்பான முறையில்,
வித்தியாசமாக இசை அமைத்து, நாட்டியம் அமைத்து, பாட்டு பாடி, நட்டுவாங்கம்
செய்து நிகழ்ச்சியை நல்ல முறையில் நடத்தித் தருவதற்காக தமிழ் நாட்டிலிருந்து
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை புகழ், இசை மற்றும் நாட்டிய கலைஞர்
மோகன் வைத்தியா சிங்கப்பூருக்கு வருகை தந்திருக்கிறார் என்பது
குறிப்பிடத் தக்கதாகும்.

இந்நிகழ்ச்சிக்கு, சிங்கப்பூர் மக்கள் கழக இந்திய பல்லிசைக் குழுவின் இயக்குனர்
திருமதி. லலிதா வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராக வருகை தர இருக்கிறார்கள்.

நுழைவுக் கட்டணம் : $30.00 / $50.00 / $100.00.

எமது காவிய வரிசையில்
அடுத்த நாட்டிய நாடகம்
முத்தமிழ்க் காப்பியமான "சிலப்பதிகாரம்"
சிலம்புப் பரல்களுடன் குறள் மணிகள் இணைந்த
"சிலம்போவியம்" (இசைப் பாடல்களுடன் இணைந்த முழு நீள நவரச நாட்டிய நாடகம் - கவியோவியம்)


மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர்! - இங்கு
மழலைகள் தமிழ்பேசச் செய்து வைப்பீர்!!
தனக்கெனக் கொண்டுவந்த தேதுமில்லை!!! - பெற்ற
தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை”
- கவிஞர் கண்ணதாசன்

Read more...

சிங்கப்பூர் ’தமிழ் முரசு’ - நாடகம் பற்றிய செய்திஇன்று (01-12-2011) நாடகம் தொடங்குவதைத் தொடர்ந்து சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் வெளிவந்த செய்திக் கட்டுரை.

Read more...

ரோம்ஸ் & ஜூல்ஸ் - சிங்கப்பூர் தமிழ் நாடகம்

சிங்கப்பூரில் வருகிற டிசம்பர் 1, 2 மற்றும் 3ம் தேதிகளில் அவந்த் தியேட்டரின் படைப்பில் ரோம்ஸ் & ஜூல்ஸ் எனும் தமிழ் நாடகம் நடைபெற உள்ளது. திரு செளந்திராஜனின் எழுத்தில் உருவாக்கப்படும் இந்நாடகத்தை சிங்கப்பூரில் ஏராளமான நாடகங்களைப் படைத்த செல்வா அவர்கள் இயக்குகிறார். 20க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பில், வசந்தம் பிரபலங்கள் நடிகர் புரவலன். , கார்த்திக் உட்பட்ட 18 நாடக நடிகர்களின் உழைப்புடன் உருவாகும் இந்நாடகம் சிங்கப்பூர் நாடக வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும் என ரோம்ஸ் & ஜூல்ஸ் நாடக குழு நம்பிக்கை தெரிவிக்கிறது.

செல்வாசெளந்தர்ராஜன்


ரோம்ஸ் & ஜூல்ஸ்

இந்நாடகமானது ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட்டின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டாலும் நாடகம் முழுவதும் நகைச்சுவை ததும்பளவுக்கு “துன்பம் இவ்வளவு நகைச்சுவையாக இருந்ததில்லை” எனக் கூறுமளவுக்கு கடந்த இரண்டரை மாதங்களாக நடந்த ஒத்திகைகளில் கொஞ்சம் கொஞ்சமாக மெருகூட்டப்பட்டு நல்லதொரு வடிவத்திற்கு வந்துள்ளது. அழகான தமிழில், அடுக்கடுக்கான வசனங்களில் அனுபவமிக்க நாடகக் கலைஞர்களின் திறமையான நடிப்பில் உருவாகும் இந்நாடகம் உங்களை நிச்சயம் கவரும் என்பதில் மாற்றமில்லை.

வெரோனா நகரின் மொண்டேக்யூ, கெபியுலட் ஆகிய இரு குடும்பங்களும் வெகுகாலமாய் பகைகொண்டு, இக்குடும்பத்தில் உறவுகளும் ஆதரவாளர்களும் அவ்வப்போது சண்டையிட்டு வருகின்றனர். இதற்கிடையில் நகரில் நடக்கும் விருந்தில் அறிமுகமாகும் மொண்டேக்யூ குடும்பத்தைச் சேர்ந்த ரோம்ஸுக்கும் ஜூல்ஸ்க்கும் காதல் மலர்கிறது. பகைக் குடும்பத்தில் மலரும் காதல் ஒரு துயரத்தை எட்டுகிறது. அது அடையும் துயரத்தை கலகலப்புடன் ஒரு புதியதொரு நாடகத்திற்குரிய அமைப்புடன் ரோம்ஸ் & ஜூல்ஸ் படைக்கவிருக்கிறது.இடம்

தோபி காட் ரயில் நிலையம் அருகிலுள்ள ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் (SOTA) எனும் கலையரங்கில் இந்நாடகம் வரும் டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் இரவு 8 மணி முதல் 9:15 வரை நடைபெறுகிறது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கலையரங்கில், அழகான ஒளி, மற்றும் ஒலி அமைப்புக்களுடன் சிறப்பாக நடைபெறும் இந்நாடகத்தை அனைவரும் கண்டு ரசிக்க வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

1 Zubir Said Dr, Singapore 227968

நுழைவுச் சீட்டுக்கு ..

நாடகத்தினைக் காண விரும்புபவர்கள் நுழைவுச் சீட்டிற்கு 82685 105 எனது எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.


சிறுகுறிப்பு: மொண்டேக்யூ பெருமகனார், கெபியுலட் பெருமகனார், கெபியுலட் மனைவி, ரோம்ஸ், ஜூல்ஸ், பெங்வோலியோ, டைபோல்ட், பெரீஸ், மெர்க்கூஷோ, பால்தாசர், சோனியா, சாம்சன், கிரேகரி, எஸ்கலஸ், லாரன்ஸ், பீட்டர் என நீளும் பாத்திரங்களில் பால்தாசர் எனும் ஒரு சிறிய பாத்திரத்தில் நானும் நடிக்கிறேன்.Read more...

திருமண அழைப்பிதழ் !

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் !

நிகழும் வைகாசி மாதம் 25ம் தேதி புதன்கிழமை(ஜூன் 8) காஞ்சியிலுள்ள ஸ்ரீ நாராயண குருபூஜை மண்டபத்தில் செல்வி. கௌரியுடன் திருமணம் நடைபெறவுள்ளது. இப்பதிவின் மூலம் எனது நண்பர்கள் அனைவருக்கும், இப்பதிவின் வருகையாளர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் விடுவித்து திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்தியருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

திருமண அழைப்பிதழ் மற்றும் இன்னபிற விபரங்களை எனது http://mywedding.nilavan.net வலைத்தளத்தில் காண்க..

அன்புடன்,
தமிழ்நிலவன் (எ) விஜயலட்சுமணன்
கௌரி

Read more...