சிங்கப்பூர் "பொய்யிற் காவியம்" - குறளோன் வாழ்வு - நாட்டிய நாடகம்"பொய்யிற் காவியம்"


சிங்கப்பூரில் அறுபது ஆண்டு காலமாக இயங்கி வரும் "திருவள்ளுவர் தமிழ்
வளர்ச்சிக் கழகம்" தனது மணிவிழாவை இந்த ஆண்டு, எதிர் வரும் மார்ச் மாதம்,
24 ம்தேதி, சனிக்கிழமையன்று மாலை 7 மணி அளவில், 60 பார்கர் ரோடில்
அமைந்துள்ள Mrs. Lee Choon Guan Concert Hall, (ACS வளாகத்தில்) வெகு சிறப்பாகக்
கொண்டாட இருக்கிறது.

சிங்கப்பூரர்கள் மத்தியில் திருக்குறள் பயன்பாடு மற்றும் தமிழ் மொழி வளர்ச்சி,
தாய் மொழிப் பயன்பாடு, குறள் ஆராய்ச்சி போன்றவற்றில் பங்களிப்பைச் செய்து
வரும் "திருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்", தனது அறுபதாம் ஆண்டு நிறைவு
விழாத் தொடர் நிகழ்ச்சிகளில் முதலாவதாகச் சிறப்பு நிகழ்வு ஒன்றினை
ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாகத் திருவள்ளுவரின் திருக்குறள் வழி, மனித
வாழ்வை ஒன்பது பகுதிகளாகப் பிரித்து, அப்பகுதிகளுக்கு ஏற்ற குறள்களைத்
தேர்ந்தெடுத்து அவற்றை ஒரு மாலையாகக் கோர்த்துப் "பொய்யிற் காவியம்" என்கிற
குறள் வழி நாட்டிய நாடகமாக உருவாக்கி வழங்க இருக்கிறது.

திருமாளம் சேதுராமன் அவர்களின் "சுருதிலயா நுண்கலைப் பள்ளி" ஒருங்கிணைக்கும்
இந் நாட்டிய நாடகத்தின் இசை, நடன அமைப்பை தமிழகத்தைச் சேர்ந்த மோகன்
வைத்தியாவும், எழுத்து கவியமைப்பை உள்ளூர்க் கவிஞரான காவியன் முத்துதாசனும்
உருவாக்கியுள்ளனர்.

சுருதிலயாவின் ஆசிரியர்களான கிருத்திகா, தேவராஜன், ராஜசேகர், சந்திரநாத்
பட்டாச்சார்யா மற்றும் மாணவிகளுடன் சிங்கப்பூரில் இசை மற்றும் நாட்டியத்
துறையில் சிறந்து விளங்கும் லாசர், குகன், விவேக் மற்றும் சுஜாதா, துர்கா, ப்ரீதா,
மெலனி, அனு, ரேஷ்மி, திவானி போன்ற நாட்டியத் தாரகைகளும் இணைந்து
நிகழ்ச்சியை படைக்க இருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு மேலும் மகுடம் வைத்தாற் போல, சிறப்பான முறையில்,
வித்தியாசமாக இசை அமைத்து, நாட்டியம் அமைத்து, பாட்டு பாடி, நட்டுவாங்கம்
செய்து நிகழ்ச்சியை நல்ல முறையில் நடத்தித் தருவதற்காக தமிழ் நாட்டிலிருந்து
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை புகழ், இசை மற்றும் நாட்டிய கலைஞர்
மோகன் வைத்தியா சிங்கப்பூருக்கு வருகை தந்திருக்கிறார் என்பது
குறிப்பிடத் தக்கதாகும்.

இந்நிகழ்ச்சிக்கு, சிங்கப்பூர் மக்கள் கழக இந்திய பல்லிசைக் குழுவின் இயக்குனர்
திருமதி. லலிதா வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராக வருகை தர இருக்கிறார்கள்.

நுழைவுக் கட்டணம் : $30.00 / $50.00 / $100.00.

எமது காவிய வரிசையில்
அடுத்த நாட்டிய நாடகம்
முத்தமிழ்க் காப்பியமான "சிலப்பதிகாரம்"
சிலம்புப் பரல்களுடன் குறள் மணிகள் இணைந்த
"சிலம்போவியம்" (இசைப் பாடல்களுடன் இணைந்த முழு நீள நவரச நாட்டிய நாடகம் - கவியோவியம்)


மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர்! - இங்கு
மழலைகள் தமிழ்பேசச் செய்து வைப்பீர்!!
தனக்கெனக் கொண்டுவந்த தேதுமில்லை!!! - பெற்ற
தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை”
- கவிஞர் கண்ணதாசன்

3 மறுமொழிகள்:

unknown Sat Jul 21, 10:14:00 AM  

வணக்கம்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன் ,

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !