ரோம்ஸ் & ஜூல்ஸ் - சிங்கப்பூர் தமிழ் நாடகம்
சிங்கப்பூரில் வருகிற டிசம்பர் 1, 2 மற்றும் 3ம் தேதிகளில் அவந்த் தியேட்டரின் படைப்பில் ரோம்ஸ் & ஜூல்ஸ் எனும் தமிழ் நாடகம் நடைபெற உள்ளது. திரு செளந்திராஜனின் எழுத்தில் உருவாக்கப்படும் இந்நாடகத்தை சிங்கப்பூரில் ஏராளமான நாடகங்களைப் படைத்த செல்வா அவர்கள் இயக்குகிறார். 20க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பில், வசந்தம் பிரபலங்கள் நடிகர் புரவலன். , கார்த்திக் உட்பட்ட 18 நாடக நடிகர்களின் உழைப்புடன் உருவாகும் இந்நாடகம் சிங்கப்பூர் நாடக வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும் என ரோம்ஸ் & ஜூல்ஸ் நாடக குழு நம்பிக்கை தெரிவிக்கிறது.
![]() | ![]() |
செல்வா | செளந்தர்ராஜன் |
ரோம்ஸ் & ஜூல்ஸ்

வெரோனா நகரின் மொண்டேக்யூ, கெபியுலட் ஆகிய இரு குடும்பங்களும் வெகுகாலமாய் பகைகொண்டு, இக்குடும்பத்தில் உறவுகளும் ஆதரவாளர்களும் அவ்வப்போது சண்டையிட்டு வருகின்றனர். இதற்கிடையில் நகரில் நடக்கும் விருந்தில் அறிமுகமாகும் மொண்டேக்யூ குடும்பத்தைச் சேர்ந்த ரோம்ஸுக்கும் ஜூல்ஸ்க்கும் காதல் மலர்கிறது. பகைக் குடும்பத்தில் மலரும் காதல் ஒரு துயரத்தை எட்டுகிறது. அது அடையும் துயரத்தை கலகலப்புடன் ஒரு புதியதொரு நாடகத்திற்குரிய அமைப்புடன் ரோம்ஸ் & ஜூல்ஸ் படைக்கவிருக்கிறது.

இடம்
தோபி காட் ரயில் நிலையம் அருகிலுள்ள ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் (SOTA) எனும் கலையரங்கில் இந்நாடகம் வரும் டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் இரவு 8 மணி முதல் 9:15 வரை நடைபெறுகிறது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கலையரங்கில், அழகான ஒளி, மற்றும் ஒலி அமைப்புக்களுடன் சிறப்பாக நடைபெறும் இந்நாடகத்தை அனைவரும் கண்டு ரசிக்க வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
1 Zubir Said Dr, Singapore 227968

நுழைவுச் சீட்டுக்கு ..
நாடகத்தினைக் காண விரும்புபவர்கள் நுழைவுச் சீட்டிற்கு 82685 105 எனது எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
சிறுகுறிப்பு: மொண்டேக்யூ பெருமகனார், கெபியுலட் பெருமகனார், கெபியுலட் மனைவி, ரோம்ஸ், ஜூல்ஸ், பெங்வோலியோ, டைபோல்ட், பெரீஸ், மெர்க்கூஷோ, பால்தாசர், சோனியா, சாம்சன், கிரேகரி, எஸ்கலஸ், லாரன்ஸ், பீட்டர் என நீளும் பாத்திரங்களில் பால்தாசர் எனும் ஒரு சிறிய பாத்திரத்தில் நானும் நடிக்கிறேன்.
![]() | ![]() |
1 மறுமொழிகள்:
வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். பல தகவல்கள். அருமையான் பதிவு. தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல பகிர்வுக்கு எனது வாழ்த்துக்கள். நான் மனிதர்களைப் பற்றி வேறு விதமாக என் தளத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன?"
Post a Comment