மாயவலை - ஈர்த்ததில்சில தினங்களுக்கு முன்பு உ.பி யில் உள்ள ஒரு கோவிலில் நடந்த நெரிசலில் ஐம்பதிற்கும் அதிகமானோர் இறந்து போயினர். அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க உ.பி மாநில கஜானாவில் பணம் இல்லை என்றார் உ.பி முதல்வர் மாயாவதி. ஆனால் தனது கட்சியின் 25ம் ஆண்டு விழாவை 200 கோடி கொண்டு செலவு செய்து கொண்டாடியுள்ளார். இதை எதிர்க்கும் எதிர்க்கட்சியினருக்கு மாநில பட்ஜெட்டில் இருந்து ஒரு சதவிதத்துக்கும் குறைவான அளவே செலவு செய்யப்பட்டது என நியாயம் பேசுகிறார்கள். அத்துடன் மேலே உள்ள பண மலர்மாலையில் மட்டும் 5 கோடி ரூபாய் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து இனிவரும் நாட்களில் மாயாவதிக்கு பணமாலை தான் போடப் போகிறோம் எனக் கூறி வருகிறார்கள். தலித் முதல்வர் ஒரு முன்னோடியாய் இருந்து தலித் மக்களுக்காக பாடுபடுவார் எனப் பார்த்தால் இப்படி செயல்பட்டால் எங்கே உ.பி காணப்போகிறது முன்னேற்றத்தை ?

பின் குறிப்பு : சென்ற ஆண்டு 2000 கோடி செலவில் மாநிலத்தை அழுகுபடுத்த என பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, மாயாவதி, கன்ஷிராம் சிலைகள், தனது கட்சி சின்னமான யானை என நிறுவிதெலுங்கு மற்றும் கன்னட வருடப்பிறப்பான உகாதி பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் அரசு விடுமுறையாக உள்ளது. அத்துடன் ஒணம் பண்டிகைக்கும் அரசு விடுமுறை வழக்கில் உள்ளது. இதுபோன்ற நடைமுறைகள் நம்மைச் சுற்றியுள்ள மூன்று மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரா, கேரளம் ஆகிய மாநிலங்களில் ஒன்றுகூட இல்லையே. அவர்கள் தமிழ் வருடப்பிறப்புக்கு வாழ்த்துச் செய்திகளாவது அனுப்புகிறார்களா எனத் தெரியவில்லை. இது பற்றி முதல்வர் வாய் திறப்பாரா என்ன ? அல்லது இவ்வாறு அளிக்கப்படும் விடுமுறைகள் அம்மக்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்கான அரசியல் தந்திரமா ?!
"ஆன்மீகமும் பிஸினஸ், மாட்டிக்கிட்டா அந்தரங்கமும்(அம்மண) பிஸினஸ்"

2 மறுமொழிகள்:

தமயந்தி Fri Mar 19, 05:41:00 PM  

பெண்க‌ள் ப‌த‌வி வ‌ரும் போது காட்டும் ஆளுமை எதிவினைக‌ளை ஏற்ப‌டுத்தி விடுகிற‌து எஙிற‌ ஆணாதிக்க‌வாதிக‌ளின் கூற்றை சில‌ நேர‌ம் பெண்க‌ளே உண்மையாக்கும் வ‌லி...

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !