திருமணத்திற்கு முன் !காதல் என்பது நேற்று முளைத்ததல்ல, பன்னெடுங்காலமாய் மனிதம் தோன்றிய காலத்திலிருந்தே நம்முள் உணர்வாய், உயிராய், மூச்சாய் இருந்திருந்தாலும் இன்று வரை இளைஞர், இளைஞிகளுக்கு காதலுக்கு ஆதரவு, எதிர்ப்பு என முரண்பட்ட கருத்துக்களுடன் சாதி, மதம், இனம் கலந்து காதலை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பணம் குவிந்துள்ள இடங்கள், மனிதர்கள் மிகக் குறைவு. ஆனால் சமீபத்திய ஐ.டி வளர்ச்சியின் மூலம் பணம் குவிந்துள்ள இடங்கள் எனபது தனது சதவிகிதத்தைக் கூட்டி மிகப்பெரும் அளவில் பரவலாக்கியுள்ளது.

இங்கே ஐ.டி வளர்ச்சி எனக் குறிப்பிடுவதால் ஐ.டி பணியாளர்களை மட்டும் குறிக்க முடியாது, ஐ.டி வளர்ச்சியின் மூலம் நிலம், வீடு, சம்பளம், சுகாதாரம், கல்வி, மளிகை, உணவு, மருத்துவம், கேளிக்கை, என அனைத்து துறைகளின் அளவும் கணிசமாய் உயர்ந்துள்ளதை மறக்க முடியாது.

காதலுக்கு ஆதரவா ? எதிர்ப்பா என இன்னும் கனந்து கொண்டிருக்கும்

இச்சமூகத்தில்

இனி,

திருமணத்திற்கு முன் இளைஞர், இளைஞிகளின் உணர்வுகளை வென்றெடுக்கும் விருப்ப புணர்வு அவசியமே, அவசியம் இல்லை, அவரவர் விருப்பமே, உரிமையே, சரி, தவறில்லை, என்பனவான ஒரு அடுத்த முன்னோட்டத்திற்கு அடிபோட்டிருக்கிறது சமீபத்திய உச்சநீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு.


இன்னும் விளக்கமாய் யோசித்து அடுத்த கட்டுரையில் படிக்கலாம்..

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !