புலவர் நா.தியாகராசன் அவர்களுடன்
புலவர் நா.தியாகராசன், ஒரிசா பாலு ஆகியோருடன்.
தமிழ்ப் பண்பாட்டுக்கும், தமிழின வரலாற்றுக்கும் இன்றும் ஆதராமாய் விளங்கிடும் பூமியாக பூம்புகார் விளங்குகிறது. இப்புண்ணிய பூமியின் தோன்றலாய் புலவர் நா. தியாகராசன் விளங்குகின்றார். இம்மண்ணின் பெருமைகளையும், ஆதாரங்களையும் வெளிக்கொண்ரும் வகையிலான எண்ணற்ற பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார். பூம்புகாரின் அனைத்துப் பகுதிகளிலும் கடந்த எண்பதாண்டு காலமாக எட்டுத்திக்குகளிலும் நடந்து இவர் பாதம் படாத இடமே இல்லை எனும் அளவிற்கு ஆய்வுகளை மேற்கொண்ட தியாகராசன் பெரும் உழைப்பை நல்கி இருக்கிறார்.
இந்திய தொல்லியல் துறையினரின் 1963 தொடங்கி 1972 வரை நடைபெற்ற புதைபொருள் ஆய்வில் நா. தியாகராசன் அவர்கள் உடனிருந்து, வேண்டும் உதவிகளைச் செய்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருந்திருக்கிறார். எண்பதைத் தாண்டிய வயதிலும் சுறுசுறுப்பாய் களப்பணியாற்றி வரும் இவர் தம் பணிக்கு தமிழுலகம் பெரும் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.
0 மறுமொழிகள்:
Post a Comment