இந்திய அரசு செம்மொழி நிறுவன விருது அறிவிப்பு
தமிழ் சங்க இலக்கியங்களில் ஆய்வுகள் பல மேற்கொண்டு வெவ்வேறான தகவல்களை வெளிக்கொணரும் அறிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்திய அரசின் செம்மொழி நிறுவனம் விருதுகளை அறிவித்திருக்கிறது.
எமது நண்பரும், புதுச்சேரி பலகலைக்கழகத்தில் பேராசிரியராய் பணிபுரிபவருமாகிய முனைவர் திரு மு.இளங்கோவன் அவர்களுக்கு செம்மொழி இளம் அறிஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேராசிரியர்கள் அடிகளாசிரியர், ஜார்ஜ் ஹார்ட்டு அவர்களுக்கு தொல்காப்பிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருது இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழுக்காகத் தம் நேரங்களை ஒதுக்கி, ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு, உழைக்கும் தமிழறிஞர்களுக்கு இவ்விருது ஊக்கமும், ஆக்கமும் அளிக்கும், மேலும் தமிழ் இளைஞர்கள் இவ்வகைப் பணிகளில் ஈடுபட ஊக்கப்படுத்தும். இவ்விருதினைப் பெறும் மு.இளங்கோவன், அடிகளாசிரியர், ஜார்ஜ் ஹார்ட்டு ஆகியோருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். வாசகர்களும் தாங்களின் வாழ்த்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
4 மறுமொழிகள்:
பேராசிரியர் மு.இளங்கோவன் மற்றும் அடிகளாசிரியர், ஜார்ஜ் ஹார்ட்டு ஆகியோருக்கு ‘அகநாழிகை‘ சமூக கலை இலக்கிய இதழ் சார்பில் நல்வாழ்த்துக்கள்.
...
செய்தியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தோழரே.
...
- பொன்.வாசுதேவன்
திரு வாசுதேவன் அவர்களின் வருக்கைக்கு நன்றி .. !
மின்னஞ்சல் வழியே அவருக்கு முன்பே வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டேன்.
ஆயினும் இன்னொரு முறையாக
வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்...
தகுதியான ஒருவருக்கு அவர் வாழும் காலத்திலேயே விருது கிடைத்ததில் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்..!
விருது பெறும் தமிழறிஞர்கள் மு.இளங்கோவன், அடிகளாசிரியர், ஜார்ஜ் ஹார்ட்டு ஆகியோருக்கு வாழ்த்துகள்..
Post a Comment